Thursday, September 20, 2012

ஊர் ஸ்பெஷல் - திண்டுக்கல் பூட்டு

ஒவ்வொரு ஊரும் ஒரு வகையில் புகழ் பெற்றது, நீங்கள் ஒரு ஊரை நினைக்கும்போது அந்த ஊரின் சிறப்பு யாபகம் வரும். உதாரணமாக தஞ்சாவூர் என்றால் தலையாட்டி பொம்மை அந்த காலத்தில் பிரபலம். என் தந்தை எப்போதாவது தஞ்சாவூர் ெல்லும்போது வாங்கி வருவார். நான் எழுதும் பதிவுகளில் எப்போதும் ஒரு ஊரின் உணவு பற்றி எழுதுவேனே தவிர அந்த ஊரின் சிறப்பு பற்றி எழுதியதில்லை, ஒவ்வொரு ஊருக்கும் ஒரு சிறப்பு இருக்கிறது அதை எழுதினால் என்ன என்றதின் எண்ணமே இந்த பதிவு.
எனது மனைவியின் ஊர் திண்டுக்கல் என்பதால் அடிக்கடி செல்வேன், இந்த முறை சென்று இருந்தபோது எப்படியாவது திண்டுக்கல் பூட்டு ஒன்று வாங்க வேண்டும் என்று முடிவு செய்திருந்தேன். முடிந்தால் அதை எப்படி செய்கிறார்கள் என்று பார்க்க வேண்டும் என்பதும் என் எண்ணம். ஆனால், அது இவ்வளவு கடினமாக இருக்கும் என்பது எனக்கு தெரியாமல் போனது.



இப்போதெல்லாம் சீனா பூட்டுக்கள் மிக மலிவாகவும், கண்ணை கவரும் வகைகளில் கிடைப்பதால் மக்கள் நமது திண்டுக்கல் பூட்டுகளை வாங்க விரும்புவதில்லை என்று சொன்னபோது மனது லேசாக வலித்தது. கீழே உள்ள படத்தில் நமது திண்டுக்கல் பூட்டு எங்கே எந்த வரிசையில் இருக்கிறது என்று தெரிகிறதா ? கடைசி வரிசையில் !!

இந்த திண்டுக்கல் பூட்டுக்கள் எல்லாம் கைகளால் செய்யபடுபவை, இது குடிசை தொழில் போல திண்டுக்கல் முழுவதும் பரவி இருந்தது, இப்போது வெகு சிலர்தான் இதை செய்கிறார்கள். நீங்கள் பார்க்கும் பூட்டுக்கள் மட்டும் இல்லாமல் சைக்கிள், கோவில், வீடு போன்ற பூட்டுகளும் கிடைக்கும், அதற்க்கு டிசைன் வேறு வேறு. நான் இந்த வகை பூட்டுக்கள் வாங்க ஆர்வம் காட்ட, என்னை சுற்றி ஒரு சிறு கூட்டம் கூடி விட்டது. அவர்கள் என்னை இதை போய் வாங்குறீங்களே என்று கேலி செய்தார்களே தவிர சந்தோசபடவில்லை என்பதே வருத்ததுக்குரியது.


கடைகாரர் என்னிடம் ஆர்வமாக எதுக்காக இதை வாங்குகிறேன் என்று ஆர்வமாக விசாரித்தார். பின்னர் அவர் இந்த பூட்டுக்கள் எல்லாம் தனது தந்தை இருந்த காலத்தில் நிறைய விற்றதாகவும், இப்போதெல்லாம் சீன பொருட்கள்தான் நிறைய விற்பதாகவும் வருத்தம் தெரிவித்தார். நான் ஒரு பூட்டு செய்வதை பார்க்க வேண்டும் என்ற போது என்னை ஒரு முகவரி கொடுத்து போய் பார்க்க சொன்னார், ஒரு மிக பெரிய இடத்தை கற்பனை செய்த எனக்கு ஒரு குடிசையை பார்த்தவுடன் அதிர்ச்சியாக இருந்தது.
இந்த பூட்டு தொழில் செய்யும் நபர்கள் எங்களை பார்த்தவுடன் கேள்வி மேல் கேள்வி கேட்டனர், இப்படி பூட்டு செய்வதை பார்க்க வந்த என்னை ஒரு அதிசயமாக பார்த்தனர். இப்போதெல்லாம் பூட்டுக்களை ஆர்டர் முறையில் மட்டுமே செய்து கொடுப்பதாகவும், அதுவும் இது கிராமத்தில் மட்டுமே அதிகம் விற்பதாகவும் சொன்னார். ஒரு நாளில் ஒருவர் அதிகபட்சம் ஆறு பூட்டுக்கள் மட்டுமே செய்ய முடியும், அவருக்கு கூலி நூற்றி இருபது ரூபாய், ஆனால்  இப்போதெல்லாம் வீடு கட்டும் தொழிலில் சித்தாள் வேலை பார்பவருக்கே கூலி அதிகம், அதனால் பலரும் இந்த தொழிலை செய்ய விரும்புவதில்லை. அவர்கள் கைகளால் செய்த ஒரு பூட்டை என்னால் அன்று பார்க்க முடிந்தது. மிக மிக கடின உழைப்பு அது.

இந்த தொழிலை விரிவாக்கம் செய்ய விரும்பினாலும் அவர்களுக்கு பாங்கிலிருந்து பண உதவி கிடைபதில்லை, அவர்கள் இதை நசிந்து வரும் தொழிலாக கருதுகிறார்கள். கடைசியாக நான் ஒரு பூட்டை வாங்கினேன் அது 260 ரூபாய்க்கு கிடைத்தது, நான் எதுவும் பேரம் பேசவில்லை ! வெகு விரைவில் "திண்டுக்கல் என்றால் பூட்டு" என்னும் வழக்கம் அழிந்துவிடும், அடுத்த இடத்தை நிரப்ப போவது எதுவோ ??!

9 comments:

  1. பயனுள்ள அருமையான பதிவு
    பெயர் வழக்கு ஒழிந்து வருவது குறித்து அறிய
    மனம் வலித்தது
    பதிவும் படங்களும் காணோளியும் அருமை
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. தங்களது வருகைக்கும், கருத்திற்கும் நன்றி சார் ! நீங்கள் சொன்னது போலவே இந்த பூட்டு தன்னையே பூட்டிக்கொள்ளும் போல் உள்ளது !

      Delete
  2. Replies
    1. ஹா ஹா....ஆம் நண்பரே !! தங்களது வருகைக்கும், கருத்திற்கும் நன்றி !

      Delete
  3. /// வெகு விரைவில் "திண்டுக்கல் என்றால் பூட்டு" என்னும் வழக்கம் அழிந்துவிடும், அடுத்த இடத்தை நிரப்ப போவது எதுவோ ??! ///

    நான் தான்.... ஹா...ஹா... முயற்சி செய்கிறேன்...

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பாக, பதிவுலகில் உங்களது பெயர் பிரபலம் சார் !! விரைவில் நிறைவேற்ற வாழ்த்துக்கள்.

      Delete
    2. உங்கள் முயற்சி வெற்றி பெற்றதா?

      Delete
  4. Can i share ur pages to others? Blog is amazing sir.

    ReplyDelete
    Replies
    1. Dear Nazeem, Thanks for your comments. Sure, you can share this......but dont alter any words / pictures and kindly use the blog name at the end.

      Let us spread our every districts special to all our friends.

      Thanks,

      Suresh
      98864 96867

      Delete