Friday, September 21, 2012

நான் ரசித்த கலை - சுதா/கார்ஸ்

பொதுவாக கார் என்றாலே நமக்கு நான்கு வீல், ஸ்டீரிங், பானெட் என்று ஒரு எண்ணம் உண்டு, ஆனால் முதல் முறை பால் கார், ஹெல்மெட் கார், படுக்கை கார் என்று வித விதமான கார் உங்கள் கண் முன் அசையும்போது சிறு பிள்ளை போல கைதட்டி ரசிப்பீர்கள். இதை எல்லாம் செய்வது ஹைதராபாத்தை சேர்ந்த திரு. சுதாகர் அவர்கள். கீழே உள்ள படத்தை, வீடியோவை பார்த்து இதெல்லாம் காரா என்று ஆச்சர்யபடவேண்டாம்....நிஜமாகவே இது கார்தான்.





இவர் செய்த கார் எல்லாம் கொண்டு பெரும் கண்காட்சி வைத்துகொண்டிருப்பார். இவரின் அபரிதமான கற்பனைக்கு பல பல விருதுகள் கிடைத்துள்ளன இதில் கின்னஸ் விருதும், லிம்காவின் புக் ஆப் ரெகார்ட்ஸ் விருதும் இவரின் திறமைக்கு சாட்சி. ஹைதராபாத்தில் உள்ள இவரது அருங்காட்சியகம் காலை 9:30 மணி முதல் மாலை 6 மணி வரை திறந்திருக்கும். நீங்கள் ஹைதராபாத் சென்றால் இதை பார்க்காமல் திரும்பாதீர்கள் !!

இவரை பற்றி மேலும் தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்....சுதா/கார்ஸ்








2 comments:

  1. நல்ல பகிர்வு...போகணும் ஹைதராபாத்

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்திற்கும், வருகைக்கும் நன்றி ஜீவா !!

      Delete