Sunday, September 23, 2012

ஆச்சி நாடக சபா - ப்ளூ மேன் ஷோ

நீங்கள் 1980-களில் டிவியில் வரும் மிரிண்டா விளம்பரங்கள் பார்த்திருகிரீர்களா ? மூன்று மொட்டை தலை ஆரஞ்சு வண்ண மனிதர்கள் முட்டாள்களை போல அடிக்கும் கூத்துக்கள் !! அன்று அது மிகவும் பிரபலம், அதை ப்ளூ கலர் ஆக்கி இன்னும் கொஞ்சம் மியூசிக், குறும்பு, ஐடியா சேர்த்து உருவாகியதுதான்  "ப்ளூ மேன் குரூப்". இன்று இவர்கள் மிக மிக பிரபலம்....அது மட்டும் அல்ல இவர்கள் பணத்தை அள்ளி குவிகிறார்கள்.





இவர்களது ஷோவில் புதுமையான இசை, யாரையும் காயபடுத்தாத நகைசுவை, புதுமையான ஐடியா என்று இருக்கும். பெரும்பாலும் எல்லா ஷோவிலும் எதாவது ஒன்று புதிதாக இருக்கும். உதாரணமாக பைப் கொண்டு இசை, டிரம் இசை என்று பார்பதற்கே புதிதாக நன்றாக இருக்கும், பின்னர் உங்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் எதாவது ஒரு நகைசுவை, இவை எல்லாமே இந்த மூன்று ப்ளூ முட்டாள் மனிதர்கள் செய்யும் சேஷ்டைகளாக !!


இவர்களை பற்றி மேலும் தெரிந்துகொள்ள வேண்டுமென்றால் கீழே இருக்கும் வீடியோவை பாருங்கள்...


நமது ஊரில் மயில்சாமி, இன்னும் பல காமெடி நடிகர்கள் எல்லாம் இதை விட நன்றாக செய்வார்கள், ஆனால் சில புதுமைகள் இருக்காது. அவர்கள் அதை எல்லாம் சேர்த்து செய்தால் உலக புகழ் பெற்ற ஒரு ஷோவாக உருவாகும். இந்த வீடியோ பார்த்தீர்கள் என்றால் இந்த ப்ளூ மேன் பின்னே யார் இருக்கிறார்கள், அதை எப்படி உருவாகினார்கள் என்று உங்களுக்கே புரியும்.


அந்த ஷோவின் படங்கள் சில கீழே...






No comments:

Post a Comment