Wednesday, September 26, 2012

சாகச பயணம் - ஹெலிகாப்ட்டர் ரைட்

ஒரு சில பயணங்கள் உங்களது மனதை விட்டு நீங்காது, அது மட்டும் அல்ல சில சமயம் பெருமைப்படும் வண்ணமும் இருக்கும் ! இந்த பயணத்தை "மறக்க முடியா பயணம்" என்ற தலைப்பில் எழுதலாமா என்று யோசித்தேன், பின்னர் அந்த தலைப்பு சரி வராது என்று "சாகச பயணம்" என்று மாற்றினேன். ஒவ்வொரு மனிதனுக்கும் இந்த ஹெலிகாப்டரில் பயணம் செய்ய வேண்டும் என்ற ஆவல் இருக்கும், அதுவும் நம்ம தமிழ் படங்களில் எல்லாம் ஹீரோ சாகசம் செய்யும்போது எல்லாம் நான் ஆ என்று வாயை பிளந்துகொண்டு பார்ப்பேன். ஆறு மாதங்களுக்கு முன்பு நான் மெல்போர்ன் நகரம் சென்று இருந்தபோது, அங்கு இருந்த "கிரேட் ஓசன் ரோடு" என்னும் பயணம் மேற்கொண்டோம், அங்குதான் இந்த ஹெலிகாப்டர் பயணம். 


இந்த பயணம் ஒரு நெடுந்தூரமான ஒன்று, வழியெங்கும் உங்களது ஒரு பக்கத்தில் கடல் உங்களது அருகினுள் வந்து கொண்டு இருக்கும், இந்த பயணத்தை பற்றி விரிவாக மற்றொரு பதிவில் பாப்போம்...இந்த பயணத்தின் முடிவில் அதாவது ஐந்து மணி அளவில் இங்கு சென்றடைந்தோம். முதலிலேயே இங்கு ஹெலிகாப்ட்டர் ரைட் இருக்கும் என்று சொன்னதால் மிகுந்த ஆவலுடன் இருந்தேன். ஆனால் பருவநிலை சாதகமாக இல்லாமல் இருந்தால் இது கான்சல் ஆகும் வாய்ப்பு அதிகம் என்றும் சொல்லபட்டிருந்ததால் நான் வேண்டாத தெய்வம் இல்லை. இந்த இடம், நமது "காதலர் தினம்" படத்தில் "என்ன விலை அழகே..." பாடல் முழுவதும் எடுக்கப்பட்டது இங்கேதான்.


இங்கு காலையிலிருந்து எவரும் இருக்க மாட்டார்கள், இவர்களுக்கு மாலையில் அதுவும் மூன்று மணி நேரத்திற்கு மட்டும்தான் வேலை....ஏனென்றால் மக்கள் அப்போதுதான் இங்கு வந்து சேர முடியும், அவ்வளவு தூரம் ! இந்த ஹெலிகாப்ட்டர் ரைட் செய்வது "12apostles" எனப்படும் ஒரு கம்பெனி. இங்கு நான்கு விதமான தூரம் பயணம் செய்யும் விதம் இருக்கிறது, ஒவ்வொன்றுக்கும் ஒரு விலை. குறைந்தபட்சம் 95 ஆஸ்திரேலியா டாலரிலிருந்து 445 ஆஸ்திரேலியா டாலர் வரை உண்டு.
இந்த ஹெலிகாப்ட்டர் கம்பெனி, பயண தூரம், பணம், இன்னும் பல விவரங்களை பற்றி தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்...12apostles
இங்கு மாலை மயங்கும் முன் சம்பாதித்து விடவேண்டும் என்று இருப்பதால் சர சரவென்று எல்லாம் நடக்கும். முதலில் நீங்கள் வரிசையில் நிற்க வேண்டும், டிக்கெட் வாங்கியவுடன் ஒருவர் இன்னொரு வரிசையில் நிற்க வைப்பார், பின்னர் உங்களது ஹெலிகாப்ட்டர் வந்து இறங்கியவுடன் நீங்கள் அதில் ஏறி கொள்ள வேண்டும், பின்னர் உங்களை உள்ளே வைத்து கொண்டே அந்த பைலட் சர்கஸ் செய்வார்....அடிவயிறு சிறிது கலங்கும்.
ஒரு நான்கு பேர் (பைலட்வுடன் சேர்த்து !) மட்டும் அமரும் ஒரு சிறிய 
ஹெலிகாப்ட்டர், பதினைத்து முதல் அரை மணி நேரம் வரை பயணம் என்று இது நிஜமாகவே ஒரு சாகச பயணம்தான். இந்த பயணம் எப்படி இருக்கும் என்று கேட்பவர்களுக்க, கீழே உள்ள வீடியோ இணைப்பை பாருங்கள்...

                                     

வாழ்வில் சில பொழுதுகள் உங்களுக்கு வாழ்கையின் மேல் காதல் கொள்ள வைக்கும், இந்த ஹெலிகாப்ட்டர் பயணமும் அதில் ஒன்று. பணத்தை பற்றி பார்க்காமல் நீங்கள் இதில் பயணம் செய்தால் ஒவ்வொரு நொடியும் இதை பற்றி உங்கள் வாழ்வில் நினைத்து பார்ப்பீர்கள் !

4 comments:

 1. அசத்தறீங்க..நமக்கு இந்த மாதிரி கொடுப்பினை இல்லையே...நாங்கலாம் கட்டைவண்டியில் போறதே ரொம்ப பெருமையா பேசுவோம்...நீங்க...ஆகாசத்துல பறக்கறிங்க...
  வாழ்த்துக்கள்...பயணம் நன்றாக இருக்கிறது..

  ReplyDelete
  Replies
  1. நன்றி ஜீவா !! ஆனால், கட்டைவண்டியில் போகும் சுகம் தனி....இந்த ஹெலிகாப்ட்டர் பயணம் வாழ்வில் ஒரு முறை கிடைக்கும் சான்ஸ் !! நீங்களும் விரைவில் சென்று வர வாழ்த்துக்கள் !!

   Delete
 2. விடியோ...காட்சி..அருமை...

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி நண்பரே !

   Delete