Saturday, September 29, 2012

நான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் - மரம் தங்கசாமி

 "மரம்" தங்கசாமி என்னும் பேரே வித்யாசமாக இருந்தது ! இன்று திருச்சி - புதுக்கோட்டை நெடுஞ்சாலையில் வெயிலுக்கு இளைப்பாறும் எவருக்கும் தெரியாது இவர்தான் இதை நட்டு வளர்த்திருப்பார் என்று. புதுக்கோட்டை மாவட்டத்தில் கொத்த மங்கலத்துக்கு அருகே சேந்தன்குடி என்னும் கிராமத்தில், இருபத்தைந்து ஏக்கர் பரப்பளவில் அடர்ந்த காடு போல் இருக்கும் அவரது தோட்டத்துக்கு மாணவர்கள் பயிற்சிக்காக வருகிறார்கள். மரம் வளர்க்கும் தங்கசாமியின் பணி மற்றும் மக்களிடையே மரம் வளர்ப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் அவரது சேவை ஆகியவற்றைப் பலர் பாராட்டி உள்ளனர்.


ஆரம்பத்தில் இவர் நட்ட 100 தேக்கு மரங்கள் நன்கு வளர்ந்து பயன் தர, அவருக்கு இதில் ஆர்வம் அதிகமானது. பின்னர் அதை பின்பற்றி மா, பலா, முந்திரி, புளி, வேப்பம், சந்தனம், நெல்லி என்று மரங்களை வளர்க்க ஆரம்பித்து இன்று அவரது 12 ஏக்கர் நிலத்தில் சுமார் 150 க்கும் மேற்பட்ட மர வகைகள் இருக்கின்றன. இவரிடம் இதை பற்றி கேட்டால், மிகவும் தன்னடக்கமாக "இது எனது கடமை" என்கிறார்.


இவரது இயற்கை விவசாயத்தில் மிகுந்த ஆர்வம் கொண்டு, அதை மற்றவர்களுக்கும் சொல்லி கொடுக்கிறார். இவர் "South India Aromatic Sandal & Herbal tree Farmers Association (SAFARI)" என்னும் NGO-வுக்கு சேர்மனாகவும் உள்ளார். ஒரு விவசாயி இயற்கையை நம்பி இருப்பதால் அவனுக்கு இழப்புகள் அதிகம் வரும், அப்போது அவன் கடன் வாங்கினால் அவனாலும், விவசாயமும் மீளவே முடியாது, இதை தவிர்க்க அவன் பணம் தரும் மரங்களான சந்தனம், தேக்கு என்றும் வளர்க்க வேண்டும், இதனால் அவனுக்கும் பலன் கிடைக்கும் என்பது இவரது கூற்று.


இவரை பற்றி மேலும் தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்...மரம் தங்கசாமி

1 comment:

  1. i want meet to , so i want mr.thangasamy address , please send to my cell number 9790628668

    ReplyDelete