Sunday, September 30, 2012

புதிய பகுதி - புரியா புதிர் !!

நானும் எனது நண்பர்களும் ஒரு இரவினில் பேசிக்கொண்டு இருந்தபோது, திடீரென்று எங்களது பேச்சு அரசியலுக்கு திரும்பியது, அப்போது எல்லோரும் அவரவர் கருத்துக்களை பகிர்ந்து கொண்டு இருந்தோம். அப்போது நர்மதா அணை பிரச்னையை பற்றி ஒருவர் ஆரம்பித்தபோது எல்லோரும் அவரவர் கருத்துக்களை சொல்லும்போது ஒன்று மட்டும் புரிந்தது.....எவருக்கும் அந்த பிரச்சனையின் அடிநாதம் என்னவென்று புரியவில்லை. அவரவருக்கு தெரிந்த செய்தியினை கொண்டு ஒரு முடிவுக்கு வந்து இருந்தனர் !! உண்மையான பிரச்சனை என்னவென்பது பலருக்கும் ஒரு புதிராகவே இருந்தது, இன்னும் சிலர் இந்த நர்மதை நதியின் குறுக்கே பாலம் கட்டுவதை எதிர்க்கும் மக்களை திட்டி கொண்டு இருந்தனர்.....அந்த மக்களின் பிரச்சனைகளை உணராமல். இப்படிதானே நாம் எல்லோரும் பல உலக பிரச்சனைகளை "ஜஸ்ட் லைக் தட்"அலசி காய போடுகிறோம் ?



இதுபோல் உலகில் நிறைய பிரச்சனைகள், அவற்றின் அடிப்படை காரணங்கள் என்னவென்று நமக்கு தெரியுமா ? இஸ்ரேலுக்கும் - பாலஸ்தீனத்துக்கும் என்ன பிரச்சனை, சீனாவுக்கும் - திபெத்துக்கும் என்ன தகராறு, ஹாங்காங் சீனாவின் ஒரு பகுதியா இல்லையா, பொற்கோவிலில் இராணுவம் ஏன் நுழைந்தது, கூடங்குளம் மக்கள் ஏன் இப்படி போராடுகின்றனர், இரோம் ஷர்மிளா ஏன் கடந்த 11 வருடங்களாக உண்ணாவிரதம் இருக்கிறார், அமெரிக்காவுக்கும் - ரஷ்யாவுக்கும் என்ன ஆனது......இப்படி நிறைய நிறைய பிரச்சனைகள்.



இவற்றை எல்லாம் சற்று ஆராய்ந்து பார்த்து என்னைப்போல் இருக்கும் சில வாசகர்களுக்கு புரியும்படி எழுதினால் என்னவென்று தோன்றியது. என்னால் இயன்றவரை இதன் ஆழத்தை வாசகர்களுக்கு கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறன். இந்த முயற்சியினால் சில புரியாத புதிர்கள் அவிழக்கூடும், அடுத்த முறை இந்த செய்தியினை பார்க்கும்போது விவாதம் இன்னும் சுவையாக இருக்க கூடும். உங்களது ஆதரவு என்றும் உண்டு என்ற நம்பிக்கையுடன்.......கடல்பயணங்கள் தொடர்கிறது !!


2 comments:

  1. நிச்சயமாக ஆதரவுண்டு
    பலர் பல சமயங்களில் செய்தியைக் கூட
    செய்தியாக இல்லாமல் தங்கள் கருத்துக்கு
    உடன்பாடாக இருக்கும்படியாகவே சொல்ல முயல்வதால்
    படிப்பவர்களால் மிகச் சரியாகப் புரிந்து கொள்ளவோ
    அல்லது தவறாகப் புரிந்து கொள்ளவோதான் முடிகிறது
    எந்த விஷயமும் அதன் உண்மைத் தன்மையை விட
    சொல்பவரின் திறன் பொறுத்தே நம்பகத் தன்மை பெறுகிறது
    என்பது எனது கருத்து
    தங்கள் பதிவுகளை ஆவலுடன் எதிர்பார்த்து...


    ReplyDelete
    Replies
    1. நன்றி ரமணி சார், உங்களது ஆதரவும், ஊக்கமும் என்னை மென் மேலும் எழுத தூண்டுகிறது. ஏதேனும் குறை இருந்தாலும் வெளிபடையாக சொல்லுங்களேன்....

      Delete