எல்லோரும் திண்டுக்கல் பத்தி இவ்வளவு பதிவு எழுதறீங்க ஆனா இந்த தலைப்பாகட்டி பிரியாணி பத்தி மட்டும் எழுத மாட்டேன்றீங்களே அப்படின்னு என்னை கோவிசிகிறாங்க....அதனால இந்த வாரம் ஒரிஜினல் திண்டுக்கல் தலைப்பாகட்டி பிரியாணி கடை !!
![]() |
இதுதான் ரெண்டாவதா ஆரம்பிச்ச பெரிய கடை ! |
![]() |
ஓல்ட் கடை...இன்னுமும் இருக்கு. |
![]() |
திரு.நாகசாமி நாயுடு, ஸ்தாபனர் |
மேலே இருக்கிற படத்தில முண்டாசு கட்டி இருகிரவருதான் நாகசாமி நாயுடு. இவர் 1957 இல் ஆரம்பிச்ச ஆனந்தா விலாஸ் பிரியாணி ஹோட்டல்தான் இவர் தலப்பா கட்டி இருந்ததுனால தலைப்பாகட்டி
கடை அப்படின்னு சொல்லி சொல்லி தலைப்பாகட்டி பிரியாணி கடை ஆகிடுச்சு. அந்த கடையை பத்தி இன்னும் விவரம் வேணும்னா இங்க சொடுக்கவும்...ஒரிஜினல் திண்டுக்கல் தலைப்பாகட்டி பிரியாணி கடை.
![]() |
இங்க இதுதான் கிடைக்கும் |
நாங்க அங்க போய் இருந்தப்ப மட்டன் பிரியாணியும், நாட்டு கோழி ரோஸ்டு, கோலா உருண்டை, மட்டன் சுக்காவும் ஆர்டர் பண்ணி இருந்தோம். இலை போட்டவுடன் சூடா பிரியாணியை ஒரு கப் எடுத்து வந்து இலையில் கவிழ்பாங்க, அப்புறம் சூடா தால்சா ஊத்தி கொஞ்சம் தயிர் வெங்காயமும் வைப்பாங்க. அதை ஒரு வாய் எடுத்து வைச்சா....ஆகா என்ன ருசி தெரியுமா ??
பஞ்ச் லைன் :
சுவை - அமர்க்களம், மட்டன் பிரியாணி நாட்டு கோழி ரோஸ்ட் நல்ல காம்பினேசன் !
அமைப்பு - ரொம்ப சின்ன ஹோட்டல், பார்கிங் வசதி கிடையாது என்பது ஒரு மிக பெரிய குறை.
அமைப்பு - ரொம்ப சின்ன ஹோட்டல், பார்கிங் வசதி கிடையாது என்பது ஒரு மிக பெரிய குறை.
பணம் - கொடுக்கும் விலைக்கு சரியான விலை !
சர்வீஸ் - சூப்பர்...ஆனால் ரொம்ப சுத்தத்தை எதிர்பார்த்து போகாதீர்கள்.
சர்வீஸ் - சூப்பர்...ஆனால் ரொம்ப சுத்தத்தை எதிர்பார்த்து போகாதீர்கள்.
it is almost o.k
ReplyDeleteஆம் ttpian ....சுவையில் சற்று குறைவுதான், ஆனால் பதிவில் சொல்லியதை போல் இந்த தலைப்பாகட்டி பிரியாணி பதிவை எழுத சொல்லி எனக்கு அன்பு தொல்லைகள் !!
Deletehttp://www.kovaineram.com/2012/09/blog-post.html///
ReplyDeletehttp://www.kovaineram.com/2011/09/blog-post.html
இரண்டு கடைகளிலும் சாப்பிட்டு பார்த்து இருக்கேன்.முன்ன மாதிரி இல்லை இப்போ சுவை...அப்படியே கொஞ்சம் வேணு , பொன்ராம் , இதெல்லாம் போயிட்டு வாங்க...
ஆம் கோவை நேரம் !! neengal சொல்வது மிக சரி...இந்த பதிவு அன்புக்காக எழுதப்பட்டது ! அடுத்த பதிவுகளில் வேணுவும், பொன்ராம் இடம் பெரும் !!
Deleteஅருமை ! இப்போது தான் தலைப்பாக்கட்டியின் உண்மை வரலாறை அறிந்துக் கொண்டேன் !!! கண்டிப்பாக அங்கு சென்று ஒரு முறை சுவைத்துப் பார்க்க வேண்டும் !!!
ReplyDeleteநன்றி இக்பால் செல்வன் !! தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் மிக்க நன்றி !
Delete