Wednesday, September 5, 2012

நான் ரசித்த கலை - இளையராஜா (ஓவியம்)

ஆனந்த விகடனில் ஒரு சில பொழுதுகளில் சில ஓவியம் உங்களை அப்படியே கட்டி போடும். இப்போதெல்லாம் சில ஓவியம் அப்படியே போட்டோ எடுத்தது போல, பெண்மையின் ஒவ்வொரு அங்குலத்தையும் அப்படியே காட்டும்படியாக வருகிறது. அதை வரைந்தவர் திரு.இளையராஜா ! இவரது ஓவியம் என்பது அப்படியே ரியலிஸ்டிக்காக இருக்கும். பொதுவாக இவரது ஓவியங்களில் நமது வீட்டிலுள்ள பெண்கள் ஓவியமாக மிளிர்வார்கள். வெகு வெகு துல்லியமாக பெண்களின் முக பாவனை, அந்த இடத்தின் அமைப்பு, வெளிச்சங்கள் என்று இருக்கும்.
இவரை பற்றி மேலும் தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்...Ilayaraja








2 comments:

  1. ஓவியர் இளையராஜா பற்றிய கருத்து நன்றாக இருந்தது. நான் கூட இவரைப்பற்றி எழுத நினைத்திருந்தேன். இவரைப்போலவே பாரதிராஜா என்னும் ஒரு ஓவியர் மிக அற்புதமாக படங்கள் வரையக்கூடியவர். தற்போது இவர்கள் இருவரும் தமிழ் ஓவிய உலகில் ஒரு புதிய பாணியை கொண்டு வந்திருக்கிறார்கள் என்றே தோன்றுகிறது. லதா மாருதி ராமு ஜெயராஜ் செல்வம் அர்ஸ் மணியம் செல்வம் போன்றவர்களின் ஓவியம் வரையும் திறன் போலன்றி இவர்கள் வெகு இயல்பாகவும் உண்மைக்கு வெகு அருகிலும் இருக்கும் படி தங்கள் படங்களை வரைகிறார்கள். ஆனால் எப்போதுமே பெண்களை வித விதமான (இயல்பான தோற்றத்தில்) வகையில் மட்டுமே வரைவது இவர்கள் இப்படித்தான் என்று சுலபமாக யூகிக்க முடிவதாக இருக்கிறது.அந்த வகையில் ஜெயராஜ் அபாரமாக படம் வரைபவர்.(கவர்ச்சி எல்லை தாண்டினாலும்).

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி காரிகன் !! நீங்கள் சொன்னது சரிதான் இவர்கள் ஒரு புது பாணியை கொண்டு வருகிறார்கள். நீங்கள் சொன்ன பாரதிராஜா அவர்களின் ஓவியத்தை தேடி பார்த்தும் கிடைக்கவில்லை...எதாவது லிங்க் இருந்தால் அனுப்புங்களேன். தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் மீண்டும் நன்றிகள் !

      Delete