Saturday, September 1, 2012

நான் ரசித்த குறும்படம் - Derek Redmond

 இதை குறும்பட வரிசையில் சேர்க்க முடியாது, ஆனால் ஒரு குறும்படம் பார்த்த பாதிப்பை இந்த வீடியோ தரும். Derek Redmond என்பவர் ஒரு தடகள வீரர், அவர் 1992ல் பார்செலோனவில் நடைபெற்ற 400 மீட்டர் ஓட்ட பந்தயத்தில் நடைபெற்ற சம்பவம்தான் இங்கே நீங்கள் காண்பது.

அவர் ஓடும்போது திடீரென்று தொடையில் இருந்த சதை பிடித்து கொண்டது, அப்போது இந்த பந்தயத்தில் ஒரு நாளும் "முடிக்க முடியாதவர்" என்று தன் பெயர் இடம் பெற்று விட கூடாது என்று நொண்டி நொண்டி அதை முடிக்க முயலுகிறார்....அப்போது அவரது தந்தை ஓடி வந்து அவரை தாங்கி "விடு பரவாயில்லை...."என்னும் போது, அவர் "இல்லை....நான் கண்டிப்பாக இதை முடித்தே ஆக வேண்டும்" என சொல்ல, அவரது தந்தையின் தோளில் சாய்ந்து கொண்டு நொண்டி கொண்டே நடக்க, அப்போது அவரது தந்தை "அப்படியென்றால் நாம் இருவருமே இதை செய்வோம்..." என்று சொல்லி கொண்டே அவரை தாங்கி வெற்றி கோட்டை நெருங்குகிறார்......Redmond நெருங்க நெருங்க அவர் அவனை விட்டு விலகி ஒரு தந்தையாக பெருமையாக தன் மகனை பார்க்கும் காட்சி.....கண்ணில் நீர் வரவழைக்கும்.

No comments:

Post a Comment