சென்ற மெக்ஸிகன் உணவுகள் பகுதியை நிறைய பேர் படித்துவிட்டு என்னிடம் விசாரித்தார்கள், சில பேர் என்னை ஏற இறங்க பார்த்து விட்டு அச்சச்சோ என்றனர், அனைவருக்கும் எனது நன்றிகள். அது மட்டும் இல்லை, சென்ற வார பதிவை பார்த்த சிலர், நான் உணவை பற்றி மற்றும் அல்லாமல் அந்த நாட்டை பற்றியும் அதிகம் எழுதி இருக்கிறேன் என்றனர்.....ஆம், நாம் சாப்பிடும்போது பல விஷயங்களை பேசி கொண்டே சாப்பிடுவோம் இல்லையா, அது போலவே இங்கே உணவை பற்றி எழுதும்போது அந்த நாட்டை, மக்களை, அவர்களின் கலாசாரத்தை பற்றியும் சொல்கிறேன். உங்களுக்கும் சுவாரசியம் இல்லையா !! நீங்கள் மெக்ஸிகோவிற்கு டூர் செல்ல விரும்பினால் இங்கே சொடுக்கவும்...மெக்ஸிகோ

இதை எப்படி செய்வது என்று இந்த வீடியோவில் பாருங்கள்...அபாரமான சுவை !!
இதை எல்லாம் சாப்பிட்டுவிட்டு உங்களுக்கு வயிற்றில் இடம் இருந்தால் நீங்கள் இந்த டிசர்ட் மெனுவை பார்க்கலாம்...
இதில் எனக்கு பிடித்தது இந்த சொபபில்லா என்ற ஒன்று, இன்றும் இதை
நினைத்தால் வாய் ஊறுகிறது. நமது ஊர் சமோசா (உள்ளே எதுவும்
இல்லாமல்!!) அதை தேனில் அல்லது மாபில் சிரப்பில் தொட்டு திங்க வேண்டும். ஆஹா, பேஷ் பேஷ் சுவை !!
அடுத்து உங்களை கவர்வது பிரைட் ஐஸ் கிரீம்.... இதை கேட்டவுடன் சட்டென்று அது எப்படி ஐஸ் கிரீமை பிரை செய்ய முடியும் என்று நீங்கள் கேட்பது
எனக்கு கேட்கிறது, அதை புரிந்து கொள்ள இந்த படத்தையும், வீடியோவையும் பாருங்கள்.
சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால், ஒரு ஸ்கூப் ஐஸ் கிரீமை முட்டை வெள்ளை கருவில் முக்கி எடுத்து, பிரீசரில் வைத்து விட்டு, பின்னர் எண்ணையில் பொரித்து எடுத்து தருவதுதான் பிரைட் ஐஸ் கிரீம். இதை சாப்பிடும்போது உங்களுக்கு கர கரவென்ற வெளிபுறமும், கூல் ஆன வெளிபுறமும் உங்களை அசத்தி எடுக்கும். இந்த வீடியோவை பாருங்கள் புரியும்...
இந்த ஒரு வீடியோவை நீங்கள் பார்த்தால் இந்த நாட்டினை பற்றி தெரிந்து கொள்வீர்கள்...நீங்கள் அவசியம் பார்க்க வேண்டிய ஒன்று !
சரி, நாம் நமது வேலையை பார்போம் வாருங்கள்....இந்த வாரம் நாம் பார்க்க போவது சிமிசாங்கா , இதற்க்கு இன்னொரு பெயர் பிரைட் பரிட்டோ என்பதாகும். உதாரணமாக நமது சப்பாதிக்குள் உங்களுக்கு பிடித்த காய்கறியோ, மாமிசமோ வைத்து நன்கு சுருட்டி எண்ணையில் பொரித்து எடுத்து அதன் மீது சாஸ் ஊற்றி எடுத்து வந்தால் அதுதான் சிமிசாங்கா.

இதை எப்படி செய்வது என்று இந்த வீடியோவில் பாருங்கள்...அபாரமான சுவை !!
இதை எல்லாம் சாப்பிட்டுவிட்டு உங்களுக்கு வயிற்றில் இடம் இருந்தால் நீங்கள் இந்த டிசர்ட் மெனுவை பார்க்கலாம்...
இதில் எனக்கு பிடித்தது இந்த சொபபில்லா என்ற ஒன்று, இன்றும் இதை
நினைத்தால் வாய் ஊறுகிறது. நமது ஊர் சமோசா (உள்ளே எதுவும்
இல்லாமல்!!) அதை தேனில் அல்லது மாபில் சிரப்பில் தொட்டு திங்க வேண்டும். ஆஹா, பேஷ் பேஷ் சுவை !!
அடுத்து உங்களை கவர்வது பிரைட் ஐஸ் கிரீம்.... இதை கேட்டவுடன் சட்டென்று அது எப்படி ஐஸ் கிரீமை பிரை செய்ய முடியும் என்று நீங்கள் கேட்பது
எனக்கு கேட்கிறது, அதை புரிந்து கொள்ள இந்த படத்தையும், வீடியோவையும் பாருங்கள்.
சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால், ஒரு ஸ்கூப் ஐஸ் கிரீமை முட்டை வெள்ளை கருவில் முக்கி எடுத்து, பிரீசரில் வைத்து விட்டு, பின்னர் எண்ணையில் பொரித்து எடுத்து தருவதுதான் பிரைட் ஐஸ் கிரீம். இதை சாப்பிடும்போது உங்களுக்கு கர கரவென்ற வெளிபுறமும், கூல் ஆன வெளிபுறமும் உங்களை அசத்தி எடுக்கும். இந்த வீடியோவை பாருங்கள் புரியும்...
எத்தனை முறை மெக்ஸிகன் உணவகம் சென்று இருந்தாலும், ஒவ்வொரு முறையும் நான் இந்த உணவுகளின் மேல் காதல் கொள்கிறேன் என்றால் அது மிகை ஆகாது. நீங்களும் ஒரு முறை சென்று வாருங்கள்....நிறைவாய் இந்த வீடியோவை பார்த்து ரசியுங்கள்......நம்ம ஊரு மெக்ஸிகன் சாங் !!
No comments:
Post a Comment