Wednesday, October 24, 2012

மறக்க முடியா பயணம் - டார்ஜிலிங் (பாகம்-2)

சென்ற டார்ஜிலிங் பதிவை நிறைய பேர் பார்த்து, படித்து பாராட்டி இருந்தார்கள், அனைவருக்கும் எனது நன்றிகள், இந்த வாரம் நாம் அங்கு மேலும் என்ன சுற்றி பார்க்கலாம் என்று தெரிந்து கொள்வோம். டார்ஜிலிங் என்றாலே நிறைய பேருக்கு இந்த குட்டி ட்ரெயின்தான்  வரும், இது நிறைய படத்தில் வரும், சமீபத்தில் கூட பர்பி ஹிந்தி திரைபடத்தில் வந்து இருக்கும். ஒரு குட்டி புகை வண்டி !! இது 1881இல் சுமார் 86 கிலோமீட்டர் தூரத்திற்கு அமைக்கப்பட்டது. நீங்கள் நமது IRCTC சைட் மூலமாகவே டிக்கெட் புக் செய்யலாம், ஆனால் ட்ரெயின் கான்சல் ஆனால் பணம் திரும்ப கிடைக்காது, ஆகவே அங்கே சென்றே டிக்கெட் வாங்கி கொள்ளவும்.

இந்த டார்ஜிலிங் குட்டி புகைவண்டி பற்றி மேலும் தெரிந்துகொள்ள இங்கே சொடுக்கவும்....டார்ஜிலிங் ஹிமாலயன் ரயில்வே.

 

இதன் பிறகு நீங்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய இடம் என்பது டைகர் ஹில் சன் ரைஸ். டார்ஜீலிங்கில் இருந்து 11 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது இந்த டைகர் மலை. இங்கு இருந்து சூரிய உதயம் பார்க்கும்போது இமயமலை பல வண்ணங்களில் மாறுவதை நீங்கள் பார்க்கலாம். அதிகாலை குளிரில் சுமார் ஐந்து மணிக்கு எழுந்து இங்கு செல்வது என்பது ஒரு சவால், சரி நாம்தான் முதலில் செல்கிறோம் என்று நினைத்து சென்றால் அங்கு ஏற்கனவே நூற்றுக்கணக்கில் ஆட்கள் இருப்பது ஒரு சலிப்பை தரும்.....ஆனால் அந்த சூரிய உதயத்தை பார்க்கும்போது எல்லா சலிப்பும் மறந்துவிடும் என்பது நிச்சயம். அவசியம் பார்க்க வேண்டிய ஒன்று.....ஆனால் உங்களுக்கு அதிர்ஷ்டம் இருந்தால் மட்டுமே இந்த சூரிய உதய தரிசனம், இல்லையென்றால் பனி மூடி எதுவுமே பார்க்க முடியாது !!


அடுத்து நீங்கள் பார்க்க வேண்டியது படாசியா லூப் பகுதியில் அமைந்து உள்ள வார் மெமோரியல். சுதந்திரத்திற்கு பிறகு சுமார் 75 கூர்க்கா வீரர்கள் பல போர்களில் தங்களது உயிரை இந்த நாட்டுக்கு அளித்தனர், அதை நினைவு கூறும் வகையில் 1995 திறக்கபட்டதுதான் இந்த வார் மெமோரியல். இங்கு நீங்கள் செல்லும்போது குளிரில் உறைந்து போகும் அளவுக்கு பனி இருக்கும், அங்கு இருக்கும் ஒரு ராணுவ வீரனின் சிலையை பார்க்கும்போது நமக்காக இந்த நாட்டை காவல் காக்கும் எத்தனையோ வீரர்கள் நினைவுக்கு வருவார்கள். அங்கு நீங்கள் நேபாளி கூர்க்கா போல வேடமணிந்து கொள்ளலாம், பெண்கள் தேயிலை பறிப்பவர்கள் போல வேடமணியலாம். கீழே நான் கூர்க்கா வேடம் அணிந்தது இங்கேதான் !! அது மட்டும் இல்லை, இந்த பகுதியில் அந்த காலை நேரத்தில் விற்கும் அருமையான டீ நமது ஊரில் கிடைக்காது !! இங்கிருந்து நீங்கள் நமது இமயமலை சிகரத்தை நன்கு பார்க்கலாம் !

அடுத்த பாகத்தில் நீங்கள் ஜூ, மலை ஏறும் பயிற்சி முகாம், க்ஹூம் புத்தர் கோவில், நேபால் எல்லையில் உள்ள மார்க்கெட், மாகாளி கோவில் ஆகியவற்றை பற்றி விரிவாய் காணலாம். நாங்கள் நேபாள எல்லையில் இருந்தபோது நடந்த சம்பவம் ஒரு சுவாரசியமான அனுபவம், அதை
தெரிந்து கொள்ள அடுத்த வாரம் வரை காத்திருங்கள் !!

2 comments:

  1. சுவாரஸ்யமான பயண அனுபவம்... நன்றி... தொடர்கிறேன்...

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி தனபாலன் சார்....எப்போதுமே உங்களதுதான் முதல் பின்னூட்டமாக இருப்பது எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி !

      Delete