Tuesday, October 30, 2012

உலகமகாசுவை - சிங்கப்பூர் உணவுகள் (பாகம் - 2)

இந்த "உலகமகாசுவை" பகுதியை பாராட்டிய அனைவருக்கும் நன்றி, பலர் என்னிடம் இதை எல்லாமா வெளிநாட்டில் சாப்பிடறாங்க என்கின்றனர்....அவர்களுக்கு என்னுடைய பதில் "இன்னும் நான் சீனா உணவுகள் பற்றிய பதிவை போடலை, அதை போட்ட அப்புறம் நீங்க ரெண்டு நாள் எதையும் சாப்பிட முடியாது" என்பதுதான். சரி, போன சிங்கப்பூர் உணவுகள் பகுதியில் சில்லி கிராப், பேப்பர் கிராப் மற்றும் சிங்கப்பூர் ஸ்லிங் காக்டைல் பற்றி பார்த்தோம். அதற்க்கு முன், சிங்கப்பூரை பற்றி சிறிது தெரிந்து கொள்வோம். இது 710 சதுர கிலோமீட்டர் கொண்ட மிக சிறிய நாடு, 9 ஆகஸ்ட் 1965-இல் மலேசியாவில் இருந்து பிரிந்து ஒரு தனி நாடாக உருவானது. இன்று ஒரு தனி பெரும் நாடாக, ராணுவம், பொருளாதார பலத்துடன் இருக்கும் ஒரு அற்புத தீவு ! இதை என் நண்பர்கள் எல்லாம் எனது இரண்டாம் வீடு என்பார்கள், அத்தனை முறை சென்று வந்து இருக்கிறேன் !!

சிங்கப்பூரை பற்றி மேலும் தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்...சிங்கப்பூர்




சிங்கப்பூர் என்பது ஒரு நாடாக இருந்தாலும், அந்த நாட்டு குடிமகன்கள் எல்லோரும் அங்கு உருவானவர்கள் இல்லை, இவர்கள் எல்லோரும் வேறு நாட்டில் இருந்து வந்து குடியேறியவர்கள்தான். இதனால்தான், சிங்கப்பூர் உணவுகள் என்று சொல்லும்போது ஒரு வகையான உணவை மட்டும் சொல்ல முடிவதில்லை. இந்த நாட்டில் பெரும்பாலும் சீனர்களும், மலாய் மக்களும், இந்திய மக்களும்தான் பெரும்பான்மையாக இருகின்றனர்....மற்றவர்கள் எல்லாம் குறைந்த எண்ணிகையில். இதனால், சிங்கப்பூரின் உணவுகள் ஒவ்வொரு மக்களுக்கும் ஒவ்வொரு உணவு வகைகள் புகழுடன் இருக்கின்றன.



உதாரணமாக, இந்திய மக்களிடம் பரோட்டா,  மீன் தலை கறி என்பது அங்கு மிகவும் பிரபலம். சீனர்களிடம் சில்லி கிராப், பேப்பர் கிராப் என்பது அவர்களிடம் பிரபலம். மலேசியா மக்களிடம் லக்ஸா, நாசி லெமாக் பிரபலம். சடாய் என்பது இந்தோனேசியா மக்களிடம் பிரபலம். இப்படி ஒவ்வொரு மக்களும் ஒவ்வொரு உணவு வகைகள் பிரபலமாக இருப்பதால் இந்த பகுதியை பிரித்து நிறைய எழுத வேண்டி உள்ளது.


இன்று நாம் காணபோவது, இந்திய வம்சாவளியினர் பெரிதும் விரும்பும் 
"பிஷ் ஹெட் கறி (மீன் தலை கறி)". இதில் முத்து'ஸ் கறி என்னும் ஹோடெல்லில் கிடைக்கும் கறிதான் மிகவும் ருசியானது என்று பேச்சு. அதனால் இந்த பதிவை எழுத, அதை சுவைக்க வேண்டும் என்று சென்றேன். நமது வீட்டில் எல்லாம், மீனின் தலையை யாரும் விரும்ப மாட்டார்கள் என்று அதை அறுத்து குலம்பிலோ, அல்லது தூக்கியோ போட்டு விடுவார்கள், ஆனால் இங்கு அதை குழம்பின் மேல் வைத்து கொடுகிறார்கள். அட....நம்ம ஊரு மீன் குழம்புதான், ஆனால் எல்லோருக்கும் ஏற்றது போல இதை செய்கிறார்கள். அதை எப்படி செய்வது என்று தெரிந்துகொள்ள இந்த வீடியோவை பாருங்கள் !





பரோட்டா இங்கு மிகவும் புகழ் பெற்ற ஒன்று, ஆனால் அதை பற்றி இங்கு எழுத வேண்டாம் என்று நினைக்கிறேன், அதை பற்றி தெரிந்து கொள்ள நமக்கு அதிகம் ஆர்வமும் இருக்காது....ஏனென்றால் அதை குழம்பில் போட்டு சர்ரென்று உரிவது நம்ம ஸ்டைல், இதை ஏன் விளக்க வேண்டும்.

அடுத்த வாரம்....மலேசியா மக்களின் சிங்கப்பூர் உணவுகள், கண்டிப்பாக படியுங்கள் !!

3 comments:

  1. படங்களுடன் காணொளியுடன்
    விளக்கிய விதம் அருமை
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. உங்களது தொடர் உற்சாகமான பாராட்டுக்கு நன்றி ரமணி சார் !

      Delete
  2. படங்களும் பகிர்வும் அருமை...

    நன்றி...

    ReplyDelete