Sunday, October 14, 2012

நான் ரசித்த கலை - ஜூலியன் பீவர் 3டி ஸ்ட்ரீட் ஆர்ட்

 நாம் இதுவரை பேப்பரில் வரைந்த படங்களை பார்த்திருப்போம் அதுவும் தத்ரூபமாக இருக்கும், ஆனால் இன்று நாம் பார்க்க போவது ஸ்ட்ரீட் ஆர்ட் வகை. இந்த வகை பாரிஸ், ஜெர்மனி போன்ற ஐரோப்பா கண்டத்தில் மிகவும் பேமஸ்.  நமது ஊரில் இந்த வகை ஆட்கள் சுவாமி படங்கள், நடிகர்களின் படங்களை வரைந்து காசு கேட்பார்கள், அவர்களது முதலீடு என்பது கலர் சால்க் பீஸ்கள் மட்டுமே. இது போன்ற ஸ்ட்ரீட் ஆர்ட்களில் தனக்கென்று ஒரு தனி பாணி, தனி முத்திரை பதிதவர்தான் இந்த ஜூலியன் பீவர் என்பவர்.


நீங்கள் இங்கே பார்ப்பது ஒரு ஓவியம், அதுவும் 3டி-யில் தெரிவது ! 


இவரது பாணி என்பது 3டி வகை படங்கள், ஒரு இடத்தில இருந்து பார்த்தால் மட்டும் அது முப்பரிமான தோற்றத்தில் உங்களுக்கு தெரியும். அதை நீங்கள் உணர்ந்து பார்த்தால்தான் தெரியும் ! இவரை பற்றி மேலும் தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்....ஜூலியன் பீவர்

இவரது தனிப்பட்ட வெப்சைட் செல்ல இங்கே சொடுக்கவும்...பீவர் ஆர்ட்ஸ்


இந்த கானொளியில் இதை அவர் எப்படி வரைகிறார் என்பதை நீங்கள் காணலாம் !

அவரது சில படங்களை இங்கே நீங்கள் காணலாம்...











4 comments:

  1. யப்பா... வியக்க வைக்கிறது...

    வலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு முதல் வருகை…
    Follower ஆகி விட்டேன்… தொடர்கிறேன்...

    இந்த வார வலைச்சர ஆசிரியருக்கு நன்றி...

    உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/10/blog-post_14.html) சென்று பார்க்கவும்...

    நேரம் கிடைத்தால்... மின்சாரம் இருந்தால்... என் தளம் வாங்க... நன்றி…

    ReplyDelete
    Replies
    1. தனபாலன் சார்....கடந்த இரண்டு மாதங்களாக நான் உங்களின் பதிவுகளை படித்து வருகிறேன்....உங்களின் பின்னூடங்கள் மூலம் உங்களை கண்டு, பதிவர் சந்திப்பில் திரு. ரமணி அவர்களுடன் ஆன உங்களின் புகைப்படம் மூலம் அறிமுகம் ஆகி என்று உங்களை எனக்கு நன்றாக தெரியும். நீங்கள் எனது பதிவை தொடர்வது எனது பாக்கியம்...மிக்க நன்றி.

      Delete
  2. Replies
    1. தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் மிக்க நன்றி !

      Delete