எல்லா மனிதர்களும் அன்பை தேடுகின்றனர், நமது நாட்டில் வேண்டுமானால் கட்டிபிடிப்பது என்பது ஒரு பாப செயல் போன்று பார்க்க படுகிறது, ஆனால் வெளிநாடுகளில் எல்லாம் அன்பை வெளிபடுத்த அவர்கள் கட்டி பிடிப்பதை பார்க்கலாம். 2004-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஒன்றாம் தேதி, ஆஸ்திரேலியாவில் சிட்னி நகரில், பிட் ஸ்ட்ரீட் மால் அருகில், ஜோன் மன் என்னும் மனிதர் ஆரம்பித்த "ப்ரீ ஹக்ஸ் (Free Hugs )" என்னும் ஒரு இயக்கம் இன்று உலகம் முழுவதும் பரவி வருகிறது. ஒரு முறை நான் சிகாகோ விமான நிலையத்தில் எனது அடுத்த விமானத்திற்கு காத்து கொண்டிருந்தபோது ஒருவர் ப்ரீ ஹக்ஸ் (Free Hugs ) என்று ஒரு அட்டையை வைத்து கொண்டு இருந்ததை நான் பார்த்தேன், ஆர்வத்தில் சென்று அவரை கட்டி பிடித்து தோளில் ஆதரவாக நான் தட்டி கொடுக்க, நம்புங்கள் நண்பர்களே....நான் மிக அமைதியாக, சந்தோசமாக உணர்ந்தேன்.
இந்த பாடலை பாருங்கள், நம் ரஹ்மான் இதை அருமையாக இசை அமைத்து இருப்பார்...
இந்த இயக்கத்திற்கு 2004-ம் ஆண்டு தடை ஏற்பட்டது, ஜோன் மன் இன்சூரன்ஸ் எதுவும் எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டது. அதை உடைத்து எறிந்து இன்று இது வீறு நடை போடுகிறது ! இதன் புகழ் சிக் பப்பீஸ் என்னும் ஒரு பாடல் குழுவின் சைமன் மூர், என்னும் பாடகரால் ஏற்பட்டது, அதுவரை ஆஸ்திரேலியாவில் மட்டும் இருந்த இவரின் இயக்கம் இந்த பாடகர் 2006-ம் எடுத்த வீடியோ ஆல்பத்தில் இருந்து உலகம் முழுவதும் பரவியது. அந்த வீடியோவை இங்கே காணலாம்...
இவரின் இயக்கத்தை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்..."ப்ரீ ஹக்ஸ் (Free Hugs )"

No comments:
Post a Comment