Monday, October 1, 2012

அறுசுவை - சென்னை "ழ கபே"

பொதுவாக நாம் நமது நண்பர்களுடன் நன்கு அரட்டை அடிக்க ஏற்ற இடம் என்பது டீ கடைதான், ஆனால் சென்னை போன்ற நகரங்களில் எல்லாம் அந்த சுகம் கிடைபதில்லை. அதுவும் இப்போதுள்ள டீ கடைகளில் எல்லாம் சாபிட்டால் அடுத்த நாள் பாத்ரூமில்தான் நீங்கள் குடி இருக்க வேண்டி வரும். அந்த குறையை இந்த "ழ கபே"....ஒரு வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால் இது ஒரு நவீன டீ கடை !!

இப்போது உள்ள cafe எல்லாம் நமக்கு பிடிக்காத உயர்தர வெளிநாட்டு காபிகள், சாப்பிட கேக், பப்ஸ் என்று இருக்கும், இடம் மட்டும் சுத்தமாக வெளிநாட்டு ஸ்டைலில் இருக்கும். நமக்கு இடம் பிடித்து இருந்தாலும் அங்கு சாப்பிட கிடைக்கும் பதார்த்தங்களில் மனம் ஒட்டாது, இதில்தான் ழ கபே வித்தியாசபடுகிறது.

இதை பற்றி மேலும் தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்... ழ கபே

                                             
 நீங்கள் முதலில் உள்ளே நுழையும்போது உங்களை கவர்வது ஒரு கிராமத்து மரத்தடியில் வீற்று இருக்கும் அய்யனார் சிலை !! முதன் முதலில் இங்கு நுழைகிறோம்....இதை பற்றி எனது நண்பர் சொல்லி அனுப்பி இருந்தாலும், ZHA CAFE என்று வெளியில் இருந்ததாலும், உள்ளே உயர்ரகமான தோற்றம் இருந்ததாலும் ஒரு சந்தேகம் இருந்தது !! ஆனால் அவர்கள் மெனு கார்டு கொடுத்தவுடன் எல்லா சந்தேகமும் தீர்ந்தது !! நம்ம ஊர் கருப்பட்டி காபி, சுக்கு காபி, நன்னாரி சர்பத், ஜவ்வு மிட்டாய், பஜ்ஜி என்று எல்லாமே லோக்கல் ரகம்.

 



நாங்கள் ஆளுக்கு ஒன்று என்று ஆர்டர் செய்ய ஆரம்பித்தோம், அதில் நான் சொன்ன கருப்பட்டி காபி நான் இதுவரை சாபிட்டு இருந்த காபியை விட உயர்ந்தது என்று சொல்ல முடியும். சாப்பிட என்று நாங்கள் பஜ்ஜி, அதிரசம் என்று ஆர்டர் செய்தபோது ஒரு இடத்தில டீ கடை மெனு என்று ஒன்று இருந்தது.......பல்லி மிட்டாய், கேள்விறகு பிஸ்கட், எள்ளுருண்டை, பொரி உருண்டை, ஆரஞ்சு மிட்டாய், சூட மிட்டாய், கடலை உருண்டை என்று மூக்கின் மீது விரல் வைக்கும் மெனு !!




ஆர்டர் செய்து விட்டு நாங்கள் காத்து கொண்டு இருக்கும் போது எங்களது 
டேபிளில் தாயக்கட்டை, சோழி என்று வந்து வைத்தனர். சும்மா விளையாட 
என்று பரமபதம்,பல்லாங்குழி என்று நமது பண்டைய விளையாட்டுகள்.....அட 
என்று ஆச்சர்யப்பட வைத்தது  !! பேச்சு, விளையாட்டு என்று வெகு
சுவாரசியமாக சென்றது பொழுது. அப்போது அவர்கள் சூடான பஜ்ஜி, நான் மேலே சொன்ன டீ கடை மெனு வந்தபோது இன்னும் சுவாரசியமானது எங்களது பொழுது ! முடிவில் எங்கள் ஐந்து பேருக்கு 500 ரூபாய் என்று பில் வந்த போது நாங்கள் அனுபவித்த பொழுதுக்கும், வித்யாசமான ஒரு மெனுவிர்க்கும் கொடுக்கலாம் என்று தோன்றியது !


பஞ்ச் லைன் :
சுவை               -      ரொம்பவே சூப்பர் மற்றும் வித்யாசமான மெனு !!
அமைப்பு         -       சிறிய இடம், கார் நிறுத்தும் வசதி, குளிர்ச்சியான - லிப்ட் வசதியுடன் கூடிய இடம் !!

பணம்              -      விலையை பார்த்தால் உங்களுக்கு அதிகம் என்றுதான் தோன்றும்....ஆனால் சுவையையும், அனுபவத்தையும் பார்த்தால் கொடுக்கலாம் எனலாம் ! கீழே உங்களுக்காக மெனுவின் சில பக்கங்கள் உள்ளது.

சர்வீஸ்           -       ரொம்ப சூப்பர் !                                         


4 comments:

  1. வித்தியாசமான உனவகத்தினை அறிமுகப்படுத்தி இருக்கின்றீர்கள்.

    ReplyDelete
  2. வித்தியாசமான உணவகத்தினை அறிமுகப்படுத்தி இருக்கின்றீர்கள்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி ஸாதிகா, நீங்கள் அங்கு சென்றால் கண்டிப்பாக ஒரு புதுமையான அனுபவமாக இருக்கும்....தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி !!

      Delete
  3. எப்படி தலைவா? கலக்கல் info.
    போரூர்ல எங்க? Location?

    ReplyDelete