Friday, October 12, 2012

ஊர் ஸ்பெஷல் - மணப்பாறை முறுக்கு

மணப்பாறை என்றவுடன் நமக்கு எல்லாம் உடனே நினைவுக்கு வருவது முறுக்கு !! நீங்கள் எங்கே முறுக்கு சாப்பிட்டு இருந்தாலும் இந்த முறுக்கில் இருக்கும் அந்த மொறு மொறுப்பு, காரம் வேறு எதற்கும் இருக்காது. திருச்சியில் இருந்து திண்டுக்கல் செல்லும் வழியில் உள்ளது இந்த மணப்பாறை என்னும் ஊர். இங்கு முறுக்கு சுடுவது என்பது எல்லோருக்கும் ஒரு குடிசை தொழில்.



நான் எத்தனையோ முறை இதை தாண்டி சென்று இருந்தாலும், இந்த முறை வாசகர்களுக்காக முறுக்கு விஷயம் தேடி சென்றது புது அனுபவம் ! அங்கு இங்கு என்று தேடி ஒரு வழியாக, நல்லாண்டார் கோவில் அருகில் இருக்கும் ஒரு முறுக்கு பாக்டரிக்கு (???!!!) என்னை அழைத்து சென்றனர். மொத்தம் 5 பேர் மட்டுமே அங்கு இருந்தனர். இந்த ஊரில் ஒவ்வொருவருக்கும் ஒரு வித டெக்னிக் உண்டு இந்த முறுக்கு செய்வதில், அது ஒவ்வொருவருக்கும் ரகசியம். காலை மூன்று மணிக்கு எழுந்து மாவு பிசைய ஆரம்பிகின்றனர், அதில் ஒரு பக்குவம் வேண்டும் என்பதால் ஒருவர் மட்டுமே இதை செய்கிறார். இதற்க்கு சிலர் மெசின் உபயோகித்தாலும் எல்லோரும் கையில் பிசைவதையே விரும்புகின்றனர், அப்போதுதான் முறுக்கு சுவையாக இருக்கும் என்பது நம்பிக்கை.


ஒரு ஆறு அல்லது ஏழு மணிக்கு ஒருவர் அடுப்பை மூட்டுவதற்கு ஆரம்பிக்கிறார், ஒருவர் மாவு பதத்தை சோதித்து விட்டு எண்ணையை வாணலியில் ஊற்றி பதம் பார்க்கிறார். முதல் முறுக்கை கடவுளுக்கு காணிக்கை ஆக்கி விட்டு சர சரவென்று சுட ஆரம்பிகின்றனர். இரண்டு ஆட்கள் முறுக்கு பிழிய ஆரம்பிக்க, ஒருவர் அதை எடுக்கிறார், இன்னொருவர் பாக்கிங் செய்கிறார். எனக்கு சூடாக ஒரு முறுக்கை எடுத்து நீட்டும்போதே நாவு ஊற ஆரம்பிக்கிறது, சுவைத்தால் அந்த மொறு  மொறுப்பு நாவில் தங்கி விடுகிறது !!


இந்த முறுக்கு பாக்டரியின்  ஓனரிடம் பேசியபோது இந்த பிசினஸ் என்பது தீபாவளி நேரத்தில்தான் என்பது புரிந்தது. மற்ற நேரங்களில் சில விஷேஷங்களுக்கு, கடைகளுக்கு இங்கிருந்து சப்ளை ஆகிறது. சில நேரங்களில் வெளி நாடுகளுக்கும் ஆர்டர் செல்வது உண்டு. எல்லோரும் இந்த முருக்கின் சுவை என்பது இந்த தண்ணீரில் இருந்துதான் என்று சொல்லி வைத்தாற்போல சொல்கிறார்கள் !!


முறுக்கு பிழியபடுகிறது...

முதல் முறை பொறிக்கபடுகிறது


இரண்டாம் முறை பொறிக்கபடுகிறது

பாக்கிங் செய்து ரெடியாக !!
முறுக்கில் பல வகை உள்ளது, பல ஸ்டைலில் முறுக்கு சுத்துகிறார்கள். இந்த ஊரில் முறுக்கை பார்த்து இது எந்த இடத்தில தயார் செய்தது என்று சொல்லி விடுகிறார்கள் !! ஆனால் எல்லா இடத்திலும் ஒரு முறுக்கு ஒரு ரூபாய்தான், ஆனால் இதை விற்கும்போது பல பல விலைகள். ஆகையால் அடுத்த முறை நீங்கள் முறுக்குக்கு விலை குறைத்து கேட்கலாம்.

இவர்களின் ஒரே கஷ்டம் என்பது இந்த மக்களுக்கு விரைவில் வரும் முதுகு வலி, மற்றும் சுவாச கோளாறுகள். இதை என்ன செய்தாலும் தவிர்க்க முடியாது என்கின்றனர். முடிவில் அங்கிருந்து கிளம்பும்போது ஒரு முறுக்கை வாயில் வைத்து சுவைக்கும்போது எல்லோரும் என் முகத்தை பார்க்கின்றனர்....என் புன்னகை அவர்களின் வழியை போக்கியதை, அவர்களின் புன்னகை உணர்த்தியது.

7 comments:

  1. நாக்கில் எச்சில் ஊற வெச்சிட்டீங்க...
    நட்புடன் மணிகண்டவேல்

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி மனிகண்டவேல் !

      Delete
  2. எனது மாம்ஸ்.வையம்பட்டி யில் எஸ் ஐ ஆக இருக்கும் போது அடிக்கடி வாங்கி வருவார்.மலரும் நினைவுகள்..பரவாயில்லையே ..முறுக்கு செய்யும் இடத்திற்கே சென்று விட்டீர்..

    ReplyDelete
    Replies
    1. எல்லாம் நீங்கள் கொடுக்கும் உற்சாகம்தான் ஜீவா !! நன்றி !

      Delete
  3. Now you can buy Manapparai murukku @ www.nativespecial.com

    ReplyDelete
    Replies
    1. Thanks Baskaran ! But if you visit this place and have it, you will feel proud about the culture !
      Thanks for visiting my blog and commenting, visit again !

      Delete
  4. எங்களுக்கு கிடைப்பது கஷ்டம் தான்

    ReplyDelete