Monday, October 15, 2012

அறுசுவை - பெங்களுரு காஜா சௌக் உணவகம்

 ஒரு மாலை பொழுதை இனிமையாக்குவது நண்பர்கள், அதை மேலும் இனிமையாக்குவது ருசியான உணவுகள். நாங்கள் நாலு பேர், அவர்களுடைய குடும்பங்களுடன் வெளியில் எங்கேயாவது டின்னருக்கு செல்லலாம் என்று முடிவு செய்து சென்றது "காஜா சௌக் (KHAAJA CHOWK )". உணவும் தரமாக இருக்கணும், குழந்தைகள் விளையாட இடமும் இருக்கணும் என்று, அதை கச்சிதமாக நிறைவேற்றியது என்றுதான் சொல்ல வேண்டும் !


வாலெட் பார்கிங்கில் கார் நிறுத்தி விட்டு, இங்கே நுழைந்தால் உங்களை முதலில் கவர்வது இந்த ஆட்டோ - சீட்தான் !! உள்ளே நுழைந்ததில் 
இருந்து குழந்தைகள், பெரியவர்கள் என்று அதில் உட்கார்ந்து கொண்டு
இருந்தோம் ! கண்ணை உறுத்தாத வெளிச்சம், கவரும் வகையில் இன்டீரியர், இசை என்று நன்றாக இருந்தது.




முதலில் இங்கே நாங்கள் ஆர்டர் செய்தது ட்ரிங்க்ஸ், இங்கே பார் எல்லா விதமான ட்ரிங்க்ஸ்ம் கிடைகின்றன, அதனால் எல்லோரும் இங்கே வரலாம் ! நாங்கள் ப்ரீசர், காக்டெயில், மோக்டெயில், பீர் என்று ஆர்டர் செய்தோம் ! பின்னர் வெஜ், நான்-வெஜ் பிளாட்டேர்கள் என்று ஆர்டர் செய்தோம், இதில் சில்லி சீஸ் வெஜ் கபாபின் சுவை அருமை, நான்-வெஜில் சிக்கன் புர்ராஹ் என்று ஒன்று அருமை !! பின்னர் நாங்கள் எல்லோரும் நான், ரோட்டி, குல்ச்சா என்று ஆர்டர் செய்து விட்டு, நாங்கள் கறி, மசாலா என்று ஆர்டர் செய்தோம், அதில் சிக்கன் பட்டர் மசாலாவும், சிக்கன் சென்கேறி என்ற ஒன்றும் மீண்டும் சாப்பிட வேண்டும் என்று தோன்றியது !! 

கடைசியாக குலாப் ஜாமூன், ரசகுல்லா, ஐஸ் கிரீம், குல்பி என்று ஆர்டர் செய்தோம், இதில் குலாப் ஜாமூன், குல்பி இரண்டும் நன்றாக இருந்தது என்று முடிவானது. நாங்கள் எல்லோரும் சிரித்து பேசி சாப்பிட்டு கொண்டு இருந்தபோது நான் எல்லாவற்றையும் போட்டோ எடுத்துக்கொண்டு, சுவையை நோட் செய்து கொண்டு இருந்ததை கவனித்த எல்லோரும் "என்ன ப்ளாக்கா....." என்று கிண்டல் செய்து தள்ளி விட்டனர் !! பாருங்கள் இந்த ப்ளாக் எழுத என்ன சிரமபட்டிருகிறேன்
என்று ! :-) 


பஞ்ச் லைன் :
சுவை               -      நன்று, கண்டிப்பாக சில்லி சீஸ் வெஜ் கபாப், குல்பி ட்ரை செய்து பாருங்கள் !

அமைப்பு         -       சிறிய இடம், ஆனால் ரூப் டாப், ஆகையால் வெயில் காலத்தில் உகந்தது இல்லை. வேலேட் பார்கிங் உண்டு, பேபி சீட் இல்லை என்பது மட்டுமே ஒரு மிக பெரிய குறை.
பணம்              -      கொடுக்கும் விலைக்கு சரியான சுவை ! இருவருக்கு நன்றாக சாப்பிட்டாலும் 1500 ரூபாய் வரும் ! 10% சர்வீஸ் சார்ஜ் உள்ளதால் டிப்ஸ் வைப்பது உங்களது இஷ்டம் !

சர்வீஸ்           -       சூப்பர் ! ரிசர்வ் செய்து விட்டு போங்கள் இல்லையென்றால் இடம் கிடைப்பது கஷ்டம் !

அட்ரஸ் :
இந்திரா நகர் 100 Feet ரோட்டில்,
கிரிகாஸ் ஷோரூம் மாடியில்,
ஓல்ட் மெட்ராஸ் ரோட்டில் இருந்து செல்லும்போது உங்களின் வலது புறத்தில் வரும்
ஹோட்டல் நம்பர் - 080 4092 0585



4 comments:

  1. ஒரு நாள் என்னை கூட்டிட்டு போங்க...நன்றாக இருக்கிறது பதிவின் சுவையும்...

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பாக செல்வோம் ஜீவா !! நீங்கள் பெங்களுருவுக்கு விரைவில் வரவேண்டும் !

      Delete
  2. Will go once.... Hope suresh you remind me.

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் வரும்போது தெரிவிக்கவும், கண்டிப்பாக உங்களுக்கு யாபகபடுதுகிறேன் !

      Delete