Tuesday, October 16, 2012

ஆச்சி நாடக சபா - டேவிட் ப்ளைன் ஷோ

டேவிட் ப்ளைன் - இப்போது இவரை பற்றிதான் இணையத்தில், செய்திகளில் பேச்சாய் இருக்கிறது. இவரை முதன் முதலில் நான் டிவியில் இவர் நடத்திய "க்ளோஸ் அப் மேஜிக்" நிகழ்ச்சியில்தான் பார்த்தேன்...மனிதர் இவரது மேஜிக் திறமைக்கும், மயிர் கூச செய்யும் சாகச நிகழ்ச்சிக்கும் சொந்தக்காரர். இவர் நிகழ்சிகளை நீங்கள் பார்க்கும்போது மூக்கின் மீது விரல் வைப்பது உறுதி.


இவர் 4-ஏப்ரல் 1973 பிறந்தவர், இவர் ஒரு முறை நியூயார்க் சப்வே வழியாக செல்லும்போது ஒருவர் செய்த மாஜிக்கை பார்த்து அதை கற்று கொண்டவர்
பின்னர் 1997இல் ABC நெட்வொர்க் தொலைகாட்சியில்  நடத்திய
"டேவிட் ப்ளைன் - ஸ்ட்ரீட் மேஜிக்" என்னும் ஒரு ஷோ எல்லோரையும் கவர்ந்தது. அதுவரை மேஜிக் நிகழ்ச்சி என்றால் மேடையில் நடக்கும், மக்கள் பார்வையாளராக கீழே இருந்து பார்ப்பார்கள், ஆனால் இதில் சாதாரண மக்கள், அசாதாரமான மேஜிக், வெகு நெருக்கத்தில் என்று புதுமையாக இருந்தது.






இப்படி சென்று கொண்டு இருந்த இவரது வாழ்கையில், 1999ம் ஆண்டு, அவரது இருபத்திஆறாவது வயதில் புகழின் வேட்கையில் ஒரு கண்ணாடி சவபெட்டியில் தன்னை வைத்து பூட்டிக்கொண்டு ஒரு பெரிய தண்ணீர் சூழ்ந்த டாங்கில் ஏழு நாட்கள் இருந்தார். 63 மணி நேரம் ஐஸ் சூழ்ந்து இருந்தார், 35 மணி நேரங்கள் ஒரு நூறு அடி தூணின் மீது ஏறி நின்றிருந்தார், ஒரு தொங்கும் கண்ணாடி கூண்டினுள்ளே வெறும் தண்ணீரை மட்டும் குடித்து கொண்டு சுமார் 44 நாட்கள் இருந்தார், ஒரு எட்டடி கொண்ட பலூனில் உள்ளே தண்ணீர் நிரப்பி அதனுள்ளே உணவுக்கும், தண்ணீருக்கும், சுவாசத்திற்கு மட்டும் டியூப் மூலம் வழி ஏற்படுத்தி சுமார் ஏழு நாட்கள் இருந்தார், தலைகீழாக சுமார் 60 மணி நேரம் தொங்கிக்கொண்டு என்று பல பல கின்னஸ் சாதனைகள் செய்துள்ளார்.







அவரது சமீபத்திய சாதனைதான் பத்து லட்சம் வோல்ட் கரண்டை தனது உடலில் ஷாக் அடிக்காத உடையை உடுத்திக்கொண்டு சுமார் மூன்று நாட்கள் பாய்ச்சி கொண்டார். நமது வீட்டில் 220 வோல்ட் கரண்ட்தான், அதுவே நம்மை தூக்கி வாரி அடிக்கிறது !!





இவரது ஷோக்கள் எல்லாம் கோடிகளையும், சர்ச்சைகளையும் வாரி குவிக்கின்றன....ஒரு மனிதனின் தாங்கும் சக்தி எதுவரை என்பதை இவர் தேடுகிறார், இவர் தமிழ்நாட்டிற்கு வந்து பார்க்க வேண்டும், மக்கள் எவ்வளவு தாங்குகிறார்கள் என்று......அதன் முன்பு இவரது ஷோக்கள் எல்லாம் சும்மா !! :-)

2 comments:

  1. அருமையான காணொளிகளுடன்
    கூடிய பதிவு அருமை
    பகிர்வுக்கு மனமார்ந்த நன்றி

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி ரமணி சார்....இந்த மனிதரின் சாதனையை படிக்கும் போது மெய் சிலிர்கிறது !

      Delete