Thursday, October 18, 2012

சோலை டாக்கீஸ் - வேர் தி ஹெல் இஸ் மேட்

 ஒரு இசை, ஒரு மனிதன்... உலகையே திரும்பி பார்க்க வைக்க முடியுமா என்ன ? முடியும் என நிருபித்து இருக்கிறார் இந்த மனிதர். மேட் ஹார்டிங் என்னும் இந்த மனிதர் வீடியோ கேம் டிசைனராக பனி புரிகிறார். இவர் அமெரிக்காவை சேர்ந்தவர், இவரின் வீடியோ இன்டர்நெட்டில் அவ்வளவு பிரபலம். 2003-ம் ஆண்டு இவர் வியட்நாமில் பொழுதுபோக்கி கொண்டு இருந்தபோது, அவரது நண்பர் அவரை வீடியோ எடுத்து கொண்டு இருந்தார், அப்போது அவர் அசையாமல் நின்று கொண்டு இருக்கும்போது அவரது நண்பர் ஏதாவது டான்ஸ் ஆடு என்று சொல்ல, இவரும் கை கால்களை அசைத்து ஒரு ஆட்டம் போட்டார்....அப்போது அவர் நினைத்திருக்க மாட்டார் இதன் மூலம் தான் உலக புகழ் அடைய போகிறோம் என்று.

இவரை  தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்....வேர் தி ஹெல் இஸ் மேட்




இவர் உலக பயணம் செய்வதில் ஆர்வம் உள்ளவர், 2003-ம் ஆண்டு இவர் விளையாட்டாக எடுத்த வீடியோவை இன்டர்நெட்டில் போட அது தாறு மாறான ஹிட் என்றுதான் சொல்ல வேண்டும். இன்று இவர் வெளியிட்டு இருக்கும் நான்காவது வீடியோவிற்கு அவ்வளவு எதிர்பார்ப்பு, அது மட்டும் அல்ல இவருக்கு விளம்பர வாய்ப்பு குவிகிறது. இவரின் வெப்சைட்டில் இவர்க்கு எல்லா நாட்டு மக்களும், எங்கள் ஊருக்கு வாருங்கள் என்று அழைப்பு விடுத்த வண்ணம் இருக்கிறார்கள். நீங்களே பாருங்கள்....வேர் தி ஹெல் இஸ் மேட்



4 comments:

  1. Replies
    1. மிக்க நன்றி தனபாலன் சார்....இது போல் நாம் நமது தமிழ்நாடு முழுவதும் வீடியோ எடுத்து செய்ய வேண்டும்....உங்களின் பதிவுலக தொடர்பில் எல்லோரும் தங்களது செல் போன் கொண்டு சில காட்சிகளை அனுப்பினால், தொகுக்கலாம்.

      Delete
  2. இதுவரை அறியாத தகவல்
    ரசித்து மகிழ்ந்தேன்
    காணோளியை பதிவாக்கித் தந்தமைக்கு
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி ரமணி சார்...உங்களது உற்சாகமான வார்த்தைகள் என்னை மேலும் இது போல எழுத தூண்டுகிறது !

      Delete