Tuesday, October 2, 2012

இது நம்ம ஹாபிங்க !!

 சமீபத்தில் எங்களது ஆபீசில் சில ஆட்கள் வெளிநாட்டில் இருந்து வந்து இருந்தனர், அவர்களுக்கு இந்தியா வருவது இதுதான் முதல் முறை என்பதால் எல்லாவற்றிலும் ஆச்சரியம், கேள்வி மேல் கேள்வி கேட்டு கொண்டிருந்தனர் !  அப்போது ஒருவர் எங்களிடம் உங்களது ஹாபி என்ன என்று கேட்டார்...(மேலே நீங்கள் படிப்பதற்கு முன் இந்த கேள்விக்கு நீங்கள் என்ன பதில் அளித்து இருப்பீர்கள் என்று யோசித்துவிட்டு தொடருங்கள்)நாங்கள் எல்லோரும் டிவி பார்ப்பது, எங்களது குழந்தைகளுடன் விளையாடுவது, நியூஸ் பார்ப்பது / படிப்பது, பார்க் செல்வது, கிரிக்கெட் பார்ப்பது, படம் பார்ப்பது, கார் எடுத்துக்கொண்டு சுற்றுவது, சண்டே கிளீனிங், வெளியில் சாப்பிடுவது, ஜிம் போவது என்று சொல்லி கொண்டு இருந்தோம். அவர் ஓஹோ அப்படியா என்று கேட்டுவிட்டு திரும்பவும் அழுத்தமாக இல்லை, நான் உங்க ஹாபி என்னன்னு கேட்டேன் அப்படின்னு சொன்னார். நாங்கள் எல்லோரும் என்ன, சரியான கேனயனாக இருக்கிறான், இப்போதுதானே எல்லோரும் சொன்னோம் என்று நினைத்து திரும்பவும் அதே போல் ஒப்பித்தோம். அவர் கடைசியில் ஆஹா, அருமையான ஹாபி என்று கூறிவிட்டு சென்றார், எனக்கு மட்டும் அவர் ஒரு குழப்பத்துடன் செல்வதாக பட்டது.


இரண்டு நாட்களுக்கு பின்னர் அவரை தனியே சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது, அப்போது அவரிடம் அன்று கேட்ட கேள்விக்கு நாங்கள் பதிலளித்தோம், ஆனால் உங்களிடம் ஒரு குழப்பம் இருந்ததே என்று கேட்க அவர் மிகவும் தயங்கினார்...கடைசியில் அவர் என்னிடம் நீங்கள் சொன்னது எல்லாமே என்டேர்டைன்மென்ட் (பொழுதுபோக்கு) ஹாபி அல்ல என்றார், எனக்கு குழம்பியது !! அப்போது அவர், நீங்கள் பேப்பர் படிப்பது, ஜிம் செல்வது, குழந்தைகளுடன் விளையாடுவது ஆகியவை எல்லாம் ஒரு மனிதன் செய்ய வேண்டிய கடமைகள், டிவி பார்ப்பது, இசை கேட்பது என்பது பொழுதுபோக்கு...... உதாரணமாக நீங்கள் புல்லாங்குழல் வாசிப்பீர்கள் என்றால் அது உங்கள் ஹாபி, ஆனால் நீங்கள் புல்லாங்குழல் இசை கேட்பீர்கள் என்றால் அது பொழுதுபோக்கு, அதுவே நீங்கள் உங்கள் குழந்தைக்கு அதை கற்று கொடுத்தால் அது கடமை என்றபோது கேனையன் அவரல்ல நாம்தான் என்று தோன்றியது!!


கற்று கொடுப்பது....கடமை / தொழில்

கேட்பது என்பது....பொழுதுபோக்கு

வாசிப்பது என்பது....ஹாபி

யோசித்து பாருங்கள்...சிறு வயதில் இருந்து நமக்கு பொழுதுபோக்கு என்பது டிவி பார்ப்பது, விளையாடுவது, விகடன், குமுதம் படிப்பது என்றுதான் இருகிறதே தவிர உருப்படியாக எதையாவது செய்ய முடிந்ததா ?  இன்று என்னிடம் கேட்டால் ப்ளாக் எழுதுவதும், எப்போதாவது புத்தகம்
படிப்பதுதான் !! ஆனால், இன்று வரை ஹாபிக்கும் என்டேர்டைன்மென்ட்க்கும் வித்தியாசம் தெரியாமல் வளர்ந்துவிட்டேன். இன்று அவர் பொட்டில் அடித்ததுபோல் கூறிய பின்புதான் புரிந்தது. கீழே பாருங்கள்....ஹாபி என்பதற்கும், recreation என்பதற்கும் அர்த்தங்களை.

பொழுதை போக்குவதற்கு என்று வெளிநாட்டில் நிறைய விளையாட்டுக்கள், சாதனங்கள் என்று கண்டு பிடித்து வைத்திருக்கிறார்கள். ஒருவன் பைக் எடுத்துக்கொண்டு ஐம்பது அடி உயரத்திற்கு தாவுகிறான், இன்னொருவன் நடுகடலில் சுறா மீனுடன் நீந்துகிறான், இன்னொருவன் ஸ்கேடிங் செய்கிறேன் என்று பெஞ்ச் மேலெல்லாம் தாவுகிறான், டிவியில் WWF என்னும் ரெஸ்ட்லிங் மாட்சில் இருவர் காட்டுத்தனமாக அடித்து கொள்கின்றனர்...இதெல்லாம்தான் வெளிநாட்டில் எல்லாம் பொழுதுபோக்கு என்று வகைபடுதபடுகின்றன. நம் வீட்டில் ஸ்டூல் போட்டு ஏறி ஏதாவது  எடுக்க வேண்டும் என்றாலே பதறி ஆளாளுக்கு வந்து பிடித்து கொள்கின்றனர், அதுவும் தண்ணீரில் நீச்சலடிக்கலாம் என்றால் வீட்டில் இருந்து ஒரு ஆள் வந்து பார்த்து கொண்டே இருகிறார்கள். நமக்கு எல்லாம் அடி படாமல் விளையாட வேண்டும் என்றுதான் சொல்லி கொடுக்கபட்டிருகிறது. பல குடும்பங்களில் இருக்கும் மனிதர்கள், பொழுதுபோக்கு என்ற ஒன்றை குடும்பத்துடன் பிணைத்து பார்க்கின்றனர், ஆனால் வெளிநாட்டில் குழந்தைகள் நடக்க ஆரம்பித்தவுடன் இருந்து ஒரு சிறிய ரூம் கொடுத்து அதை அந்த குழந்தையை கொண்டு கிளீன் செய்ய வைக்கிறார்கள்.

                             
பொதுவாக இந்தியர்களது அதுவும் நமது தமிழர்களின் ஹாபி நிஜமாகவே மோசம். மெகா சீரியல், டிவி, சினிமா அதை தாண்டி சாப்பாடு.... எதனால் நமக்கு ஹாபி என்று ஒன்று இல்லாமல் போனது ? பொதுவாக இந்தியர்கள் குடும்பம் சார்ந்து இருப்பவர்கள்...ஒரு அம்மாவோ அப்பாவோ அவர்களின் குழந்தைகளை மகிழ்ச்சியுடன் வைப்பதிலேயே நேரம் செலவிடுகின்றனர். இதனால் அவர்களுக்கு ஓய்வு கிடைபதே அரிது, அந்த ஓய்வில் விருப்பவேலை செய்ய முடியுமா ? அவர்களது விருப்பவேலையே குடும்பத்தை காப்பாற்றுவது என்று இருக்கும்போது அதிகபட்சம் இங்கு பலருக்கும் குழந்தைகளுடன் விளையாடுவது, நியூஸ் பார்ப்பது / படிப்பது, பார்க் செல்வது, கிரிக்கெட் பார்ப்பது, படம் பார்ப்பது என்பதுதான் ஹாபி !!நமக்கு கிடைத்திருப்பது இந்த ஒரு வாழ்வு, அதில் குடும்பத்திற்கு நேரம் செலவளிக்கிறோம், இருந்தாலும் உங்களது ஹாபி என்று ஒரு சின்ன விருப்பவேலையை வைத்து கொள்ளுங்களேன், உங்களது வாழ்வு கண்டிப்பாக சுவாரசியமாக இருக்கும் என்பது நிச்சயம். உங்களுக்கு பிடித்த ஹாபி என்பது என்ன என்று தெரிந்துகொள்ள விருப்பமா....
அப்படியென்றால் ஒரு ரூமில் கதவை பூட்டி கொண்டு, உங்களது மொபைல், இன்டர்நெட் எல்லாம் வெளியில் வைத்து விட்டு, குடும்பத்தையும் தொந்தரவு செய்ய வேண்டாம் என்று சொல்லிவிட்டு ஒரு, ஒரு மணி நேரம் வரை இருந்து பாருங்கள்....அப்போது உங்களுக்கு தெரியும், எதை உங்கள் மனம் விரும்புகிறது என்று.

                                               

உங்களுக்கு தெரிந்தவர்களை "உங்க ஹாபி என்ன ?" என்று கேட்டு பாருங்களேன் !! முடிந்தால் அவர்களுக்கும் உதவுங்கள்.

8 comments:

 1. நிஜம்தான்
  நீங்கள் சொல்வதுபோல யோசித்துப்பார்க்கையில்தான்
  இரண்டுக்குமான வித்தியாசம் தெளிவாகப் புரிகிறது
  விரிவான பயனுள்ள பதிவினைத் தந்தமைக்கு
  மனமார்ந்த நன்றி

  ReplyDelete
  Replies
  1. நன்றி ரமணி சார், பொட்டில் அடித்தது போல சொன்ன அந்த மனிதருக்கு நன்றி....அதனாலேயே உங்களுடன் இதை பகிர முடிந்தது !

   Delete
 2. அட ஆமாங்க.. யோசிச்சி பார்த்தா எனக்கெல்லாம் ஹாபியே இல்ல ....

  எங்க அம்மா டிஸ்கவரி சேனல் பாத்துட்டு சொல்லுவாங்க .. இந்த வெள்ளகார பசங்க எப்போ பாரு ஓடிகிட்டும் குதிச்சிகிட்டும் இருகாங்கனு சொல்லுவாங்க


  நமக்கு கிடைத்திருப்பது இந்த ஒரு வாழ்வு, அதில் குடும்பத்திற்கு நேரம் செலவளிக்கிறோம், இருந்தாலும் உங்களது ஹாபி என்று ஒரு சின்ன விருப்பவேலையை வைத்து கொள்ளுங்களேன்,////

  ம்ம .. ஏதாவது பண்ணனும்

  ReplyDelete
  Replies
  1. நீங்கள் யோசிக்க ஆரம்பித்ததே ஒரு நல்ல ஆரம்பம்தான் நண்பரே....விரைவில் எனக்கு சொல்லுங்கள் உங்களது ஹாபி என்னவென்று ?!

   Delete
 3. Replies
  1. நன்றி சார்....தங்கள் கருத்துக்கும், வருகைக்கும் !

   Delete
 4. ப்ளாக் எழுதுவது ஹாபியில் வருமா சுரேஷ்?

  ReplyDelete
  Replies
  1. கண்டிப்பாக மோகன்....ஸ்டாம்ப், காயின் கலெக்ட் செய்வது போல் நாம் ப்ளாக்கில் அனுபவங்களை கலெக்ட் செய்து பகிர்ந்து கொள்கிறோம். ஆதலால், இது ஒரு விருப்ப வேலைதான் இல்லையா ?

   தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி நண்பரே !

   Delete