Saturday, October 20, 2012

நான் ரசித்த குறும்படம் - சைனா டீ

 இந்த குறும்படத்தை பார்த்து விட்டு நான் நினைத்து நினைத்து சிரித்து கொண்டு இருந்தேன், அந்த அளவுக்கு நல்ல திரைக்கதை அமைத்து, ஆட்களும் அவர்களின் நடிப்பு என்று பிரமாதம் போங்கள் !!

ஒரு ஊரில் இருக்கும் டீ கடையில் வியாபாரம் ஆகவில்லை என்று இருக்கும்போது, ஒரு சேல்ஸ்மேன் தரும் சைனா டீ தூள் அவர்களின் தலை எழுத்தை மாற்றுகிறது என்பதை அவ்வளவு அருமையாக காமெடி
உடன் சொல்லி இருக்கிறார்கள். இதை யார் இயக்கி இருக்கிறார் என்று தெரியவில்லை.....ஆனால் அவருக்கு ஒரு அருமையான எதிர்காலம் உள்ளது.

8 comments:

  1. டெர்மினேட்டர் டீ ஸ்டால் - கலக்கல்...

    நன்றி...

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி தனபாலன் சார்....உங்களது அன்பான, உற்சாகமான வார்த்தைகள் எனக்கு இது போல் எழுத ஊக்கம் அளிக்கின்றன !

      Delete
  2. உண்மையில் செம கலக்கல்.. நன்றி

    ReplyDelete
    Replies
    1. தங்களது வருகைக்கும், கருத்திற்கும் மிக்க நன்றி நண்பரே !

      Delete
  3. Replies
    1. நன்றி நண்பரே ! உங்களது பெயர் என்னை பின்னோக்கி அழைத்து செல்கிறது....எனது முதல் குரங்குபெடலும், அதனால் ஏற்பட்ட காயங்களும் நினைவுக்கு வருகிறது !

      Delete
  4. வணக்கம் சார். என்னோட பெயர் ராம். இன்று நீங்கள் எழுதி இருக்கும் சைனா டீ குறும்படத்தின் இயக்குனர். மிக்க நன்றி. அதே போல் நீங்கள் ஏற்கனவே எழுதியிருந்த முண்டாசுபட்டி குறும்படத்தின் இயக்குனரும் நான்தான். நீங்கள் பதிவிட்ட முண்டாசுப்பட்டி வீடியோவில் முக்கியமான கிளைமேக்ஸ் இல்லை. நன்றி சார்

    ReplyDelete
    Replies
    1. ராம், தங்களது கருத்திற்கும் - வருகைக்கும் மிக்க நன்றி ! உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி, உங்களது குறும்படங்கள் மிகுந்த எதிர்பார்ப்பை தூண்டுகின்றன, இது போல் மற்ற படங்கள் இருந்தால் லிங்க் அனுப்பி வையுங்கள். மிக விரைவில் ஒரு முழு நீள திரைப்படம் இயக்க வாழ்த்துக்கள் !

      Delete