Thursday, October 25, 2012

உலக திருவிழா - ஹாலோவீன்

ஹாலோவீன் என்பது அமெரிக்காவில் மிகவும் பிரபலம், அது மெதுவாக மற்ற நாடுகளிலும் பிரபலமாக ஆரம்பித்துள்ளது. ஹாலோவீன் என்று சொன்னாலே நமக்கு பூசணிக்காயில் தெரியும் அந்த முகம்தான் யாபகம் வரும் இல்லையா ? ஒவ்வொரு வருடமும் அக்டோபர் 31 அன்று இந்த தினம் கொண்டாடப்படும். இது எப்படி ஆரம்பமானது தெரியுமா ?இந்த ஹாலோவீன் (Halloween) என்பது "All Hallow's Even" என்பதன் சுருக்கம், இதில் hallow  என்பதின் அர்த்தம் to make holy; sanctify; consecrate அல்லது to honor as holy; consider sacred; venerate: to hallow a battlefield என்பதாகும். அதாவது, பண்டைய காலத்தில் அக்டோபர் மாதத்தின் முடிவில் இருந்து குளிர் காலம் ஆரம்பிக்கும், அப்போது பலருக்கு உடம்புக்கு முடியாமல் போகும் அதற்க்கு காரணம் இந்த கெட்ட ஆவிகள்தான் என்று முடிவு செய்து அன்று ஆவியை பயமுறுத்த மனிதர்கள் ஆவி, பயமுறுத்தும் வேடங்கள் என்று போட்டு கொண்டு, அன்று அறுவடை செய்த பூசணிக்காயில் முகம் போன்ற உருவம் செய்து ஆவிகளை பயமுறுத்துவார்கள்.இதன் இன்னொரு கதை என்பது.....நவம்பர் 1 மற்றும் 2 தேதிகளில் "All Saints Day" என்று கொண்டாடுவார்கள், அதில் மண்ணில் இறந்த புனிதர்கள், சித்தர்கள் எல்லாம் அன்று சொர்க்கத்தை நோக்கி போவார்கள், அப்போது மற்ற ஆன்மாக்களும் அவர்களை பின் பற்றி செல்ல முயற்சிக்கும், அப்போது ஏதாவது பழி தீர்த்துக்கொள்ள வேண்டுமானால் செய்யலாம் என்று ஆவிகள் அலையுமாம், அப்போது அதை குழப்புவதற்காக மக்கள் முகமுடி அணிந்து கொண்டு உலா வருவார்கள், அதையே இன்று "All Hallow's Even" என்று சொல்லப்பட்டு இன்று ஹாலோவீன் (Halloween) என்று ஆனது என்கின்றனர்.


இந்த நாளில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கோர முகம் முகமுடி அணிந்துகொண்டு உலா வருவார்கள்....குழந்தைகள் பக்கத்து வீட்டு கதவுகளை தட்டி "ட்ரிக் ஆர் ட்ரீட்" என கேட்பார்கள், இதற்க்கு அர்த்தம், நீங்கள் எனக்கு மிட்டாய் தருகிறீர்களா அல்லது உங்களது தோட்டத்தை பாழ் படுத்தவா என்பது !! பொதுவாக இந்த நாள் அறுவடை கால முடிவில் வருவதால், ஆப்பிள் மூலம் செய்த கேண்டி எனப்படும் ஒன்றை இந்த குழந்தைகளுக்கு தருவார்கள்.காலபோக்கில் இந்த கோர முகமுடிகள், உடைகள் எல்லாம் பயமுறுத்துவதாக இருந்ததால் மக்கள் சிரிக்கும்படியான உடைகளுடன் வலம் வர ஆரம்பித்தார்கள், இன்று பலரும் அதை பின்பற்றுகின்றனர்.இன்று ஹாலோவீன் என்பது ஒரு உலக திருவிழா, எல்லா மக்களும் விரும்ப ஆரம்பித்துவிட்டனர். ஒவ்வொரு நாடுகளிலும் அன்று மகிழ்ச்சி கரை புரண்டு ஓடுகிறது....வாருங்கள் நாமும் கொண்டாடுவோம் ஹாலோவீன் !!8 comments:

 1. புதுவிதமா இருக்கே....இதெல்லாம் நம்ம ஊருல இல்லை என்பது வருத்தமே...

  ReplyDelete
  Replies
  1. வெளிநாட்டில் எல்லாம் இது போல் விழாக்களை உருவாக்கி மக்களிடம் மகிழ்ச்சியை பரப்புகிறார்கள்.....நமது நாட்டில் இது போல் தொடர் திருவிழாக்கள் நடைபெறுவதில்லை என்பது வருத்தமே. மிக்க நன்றி ஜீவா !

   Delete
 2. அன்னிக்குன்னு ஒரு வேஷம் போட்டுக்கணும்னு அவசியம்
  நம்ம நாட்டிலே இல்ல.

  நம்ம என்னிக்குமே ஒவ்வொத்தருமே ஏதேனும் ஒரு
  வேஷத்தைப் போட்டுண்டு தானே அலையறோம்
  அப்படின்னு உள் மனசு ஒண்ணு எல்லாருக்குமே
  சொல்லிக்கினு இருக்குது.

  ஹி...ஹி...

  சுப்பு தாத்தா.

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி....ஆம் நீங்கள் சொல்வதும் ஒரு வகையில் உண்மைதான், எல்லோரும் ஒரு முகமுடி போட்டுதானே அலைகின்றோம் !

   Delete
 3. ஹாலோவின் கொண்டாட்டம் பற்றி தெரியும் ... ஆனால் அதற்கான காரணத்தை இன்றுதான் தெரிந்து கொண்டேன் ....

  இதெல்லாம் நம்ம ஊருல இல்லை என்பது வருத்தமே...///// எனக்கும் தான் சார்

  ReplyDelete
  Replies
  1. நன்றி ஆனந்த், அடுத்த வாரம் முதல் இன்னும் நிறைய வித்யாசமான திருவிழாக்களை எதிர் பாருங்கள். படிப்தற்கு மிகவும் சுவாரசியமாக இருக்கும் !

   Delete
 4. இப்படி எல்லாமா...? அறியாத தகவல்... நன்றி...

  ReplyDelete
  Replies
  1. நன்றி தனபாலன் சார்...தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் !

   Delete