Saturday, October 27, 2012

சோலை டாக்கீஸ் - குன்னக்குடி வைத்தியநாதன் வயலின்

1990-களில் ஒரு நாள் என் அப்பா டிவி பார்த்து கொண்டு இருந்தபோது திடீரென்று என்னையும், எனது அம்மாவையும் கத்தி கூப்பிட்டார். அப்போது டிவியில் குன்னக்குடி வைத்தியநாதன் அவர்கள் வயலினில் பேசி கொண்டு இருந்தார், அதுவரை வயலின் என்பது ஒரு பாட்டுக்கு பின்னணியில் இருக்கும், ஆனால் ஒரு பாடகர் பாடுவது போல வயலினில் அவர் பாடினார்.....அதுதான் அப்போது ஊரெல்லாம் பேச்சு !! இன்று அதை கேட்கும்போது எப்படிப்பட்ட மேதை அவர் என்று எண்ணம் எழுகிறது !!

சின்ன ராசாவே கட்டெறும்பு என்னை கடிக்குது - வால்ட்டர் வெற்றிவேல்


ஒட்டகத்தை கட்டிக்கோ - ஜென்டில்மேன் படம் பாடல்


இஞ்சி இடுப்பழகா பாடல் - தேவர் மகன்

8 comments:

  1. அருமையாகச் சொன்னீர்கள்
    அவரிடம் வயலின் அவர் நோக்கமறிந்து
    பேசுவதை நானும் நேரடியாகக் கேட்டு ரசித்திருக்கிறேன்
    அருமையான காணொளிகளை இணைத்துக் கொடுத்தமைக்கு
    மனமார்ந்த நல் வாழ்த்துகள்

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி ரமணி சார்.....குன்னக்குடி வைத்தியநாதன் அவர்கள் ஒரு இசை மேதை என்றால் அது மிகை ஆகாது. ஒரு இசை கருவியை கொண்டு பல்லாயிரம் மக்களை கட்டி போட்டவர் இவர் !

      Delete
  2. ஒருமுறை சன்டிவியில் நாங்கள் வேலை செய்து கொண்டு இருந்த போது இவரின் ப்ரோக்ராம் நடந்தது.ரொம்ப முடியாமல் கைத்தாங்கலா தான் அழைத்து வந்தனர்.ஆனாலும் இவரின் கை லாவகம் கொஞ்சம் கூட குறையவில்லை.அதே வேகம்...பிரமித்து போனேன்..

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஜீவா....இவரை அப்போதெல்லாம் நினைத்தால் அந்த பெரிய விபூதியும், பொட்டும் யாபகம் வரும், இந்த இசையை பார்த்த பிறகு அவரது வயலிந்தான் யாபகம் வருகிறது.

      Delete
  3. இவரை மிஞ்ச யாரும் கிடையாது...

    நன்றி...

    ReplyDelete
    Replies
    1. ஆம் தனபாலன் சார்.....இவர் ஒரு இசை மேதை, வயலினையே பேச வைத்தவர். தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி !

      Delete
  4. அருமையான பாடல்கள் ... இபோது இதை என் மொபைல் ரிங்டோன்னாக ஆக்கிவிட்டேன்


    நன்றி அண்ணா

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஆனந்த், நீங்கள் இதை கேட்டு ரசித்ததை உங்களது பின்னூட்டம் தெரிவித்தது, மிக்க சந்தோசம் ! நீங்கள் அண்ணா என்று அழைப்பது மிகவும் நெருக்கத்தை கொடுக்கிறது !

      Delete