Sunday, October 28, 2012

நான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் - சார்லி டோட்

 சார்லி டோட் - இவரை பற்றி நீங்கள் தெரிந்து கொள்ளும் முன்பு, இப்போது பிரபலமாக இருக்கும் பிரான்க் (Prank) என்றால் என்ன என்று நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும், ஏனென்றால் இவர் இந்த வகை பிரான்க் கிரியேட்டர் என்றுதான் சொல்ல வேண்டும். Prank  என்றால் குறும்பு விளையாட்டு , சிறு குறும்பு , நையாண்டிக்குறும்பு என்று அர்த்தம். அதாவது  மற்றவர்களை காயப்படுத்தாமல்,
 நகைச்சுவையாக செய்து மக்களை சிரிக்க வைப்பது. இன்னமும் புரியவில்லையா....
அதாவது ஒருவர் குடித்துவிட்டு நடு ரோட்டில் கன்னா பின்னாவென்று பேசிகொண்டிருந்தார் என்று வையுங்கள்...நீங்கள் அவரை சும்மா சீன் போடாதே என்று சொல்வீர்கள் இல்லையா, அதையே இவர் நகைச்சுவையாக சீன் போடுவார் என்று சொல்லலாம்.



இவர் ஆரம்பித்த Improv Everywhere என்னும் ஒரு அமைப்பு இன்று மிக மிக பிரபலம், இதில் ஏகப்பட்ட பேர் உறுப்பினர்கள் !! 2001ம் ஆண்டு இதை நியூயார்க் நகரில் இதை தொடங்கினார் சார்லி டோட். மன்ஹட்டன் நகரின் பாரில் தொடங்கிய இந்த பயணம், காமெடி சென்ட்ரல் சேனல் மூலம் மெருகேறி, இன்று ஒரு உலக புகழ்பெற்ற ஒரு குழுவாக, அமைப்பாக உள்ளது.



இவர்களின் குறிக்கோள் என்பது ஒரு குழப்பமான காமெடி செய்து அதுவும் மக்கள் முன்பு, அவர்களின் முக குழப்பங்களை கேமரா மூலம் பதிவு செய்து அதை வெளியிடுவது, உதாரணமாக பீச்சில் எல்லோரும் அரைகுறை ஆடையுடன் இருக்க இவர்கள் கோட் சூட் போட்டு கொண்டு நடமாடுவது, ஒரு கடையின் ஊழியர் உடையின் நிறம் போன்றே அணிந்து அங்கு நடமாடுவது, ட்ரெயின் உள்ளே நன்றாக கோட் சூட் போட்டு கொண்டு பான்ட் மட்டும் போடாமல் போவது, ஒரே மாதிரி பிறந்த இரட்டையர்களை ட்ரெயினில் எதிரெதிரே உட்கார செய்து கண்ணாடி போல தோற்றம் கொண்டுவருவது, ஆயிரகனக்கானவர்களை கொண்டு மிகவும் கூட்டம் நிறைந்த ட்ரெயின்
ஸ்டேஷன் இடத்தில் மக்கள் உறைந்து போய் நிற்பது  என்று பல பல பல செய்கைகள்....ஆனால் இதை எல்லாம் நூற்றுகணக்கான மனிதர்கள் கொண்டு செய்வதுதான் காமெடி !!

இது போல் நிறைய பார்த்து, சிரித்து மகிழ இங்கே சொடுக்கவும்...Improv Everywhere காமெடிகள்




இன்று இவரது வீடியோ எல்லாம் யூடுபில் மிகவும் பிரபலம். இவர்களது கலாட்டாக்கள் நிறைய முறை போலீஸ் மூலம் கடுப்புடன் பார்க்கப்பட்டது, உதாரணமாக இவர் ஆரம்பித்த "பான்ட் போடாமல் செல்லும் நாள்" அன்று நியூயார்க்கில் ஆயிரக்கனக்கான மனிதர்கள் கீழே ஜட்டி மட்டும் போட்டு கொண்டு நடமாட, அதிகாலை நேரத்தில் இதை அறியாத போலீஸ் ஆறு பேரை கைது செய்தது, பின்னர் இது போல் பலர் வர அவர்களின் பாடு காமெடி ஆனது...இன்றும் போலீஸ் வருகிறது, ஆனால் பாதுகாப்பு கொடுக்க !! ஒரு நாள் இவரை சந்தித்து நானும் ஒன்றில் பங்கேற்க வேண்டும்.....ஆனால் இந்த பான்ட் போடாமல் போவது போல் இல்லாமல் !!

2 comments:

  1. இணைப்பிற்கு நன்றி... பார்க்கிறேன்...

    ReplyDelete
    Replies
    1. உங்களது தொடர் பின்னூட்டங்கள் என்னை உற்சாகபடுத்தி மேலும் எழுத தூண்டுகிறது. மிக்க நன்றி தனப்பாலன் சார் !!

      Delete