Friday, October 5, 2012

புரியா புதிர் - மணிப்பூர் இரோம் ஷர்மிளா

செய்திகள் பார்ப்பவர் அல்லது படிபவர்களுக்கு மட்டும் தெரியும் இந்த பெயர், "இரோம் ஷர்மிளா", மேலும் தெரிவது என்பது அவர் சுமார் பத்து ஆண்டுகளாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார் என்பது. வெகு சிலருக்கு மட்டும் அவர் ஒரு சட்டத்தை திரும்ப பெற அரசாங்கத்தை வலியுறுத்தி இந்த உண்ணாவிரதம் இருந்து வருகிறார் என்பது. இது எல்லாம் செய்திகளை படிபவர்களுக்கு.....அதையும் செய்யாமல் இருபவர்களுக்கு தெரிந்தது எல்லாம் மானாட மயிலாட !!




நான் பல புத்தகங்களையும், வெப்சைட் பார்த்தும் இந்த பிரச்சனைகளை புரிந்துகொள்ள முயன்றிருக்கிறேன். யாரேனும் இதில் தவறு இருக்கிறது என்று நினைத்தால், என்னிடம் தெரிவிக்கவும். இதில், என்னால் முயன்றவரை உண்மையான செய்திகளை சொல்லி இருக்கிறேன்.





மணிப்பூர் என்பது கிழக்கு இந்தியாவில் இருக்கும் ஒரு மாநிலம். 1972 வரை இது யூனியன் பிரதேசமாக இருந்து பின்னர் அது ஒரு மாநிலமாக அங்கீகரிக்கப்பட்டது. சுதந்திரம் அடைந்த பின்னர் இந்தியாவை கட்டமைக்கும் பொருட்டு, ஒவ்வொரு மாநிலமும் சேர்கப்பட்டது. அதாவது, அதற்க்கு முன்னர் ராஜாக்கள் ஆண்டு வந்தனர், பின்னர் அவர்களை சிறிது சிறிதாக சேர்க்கபட்டது. 1949ம் ஆண்டு மகாராஜா புதச்சந்திரா என்பவர் அசாமுக்கு வரவழைக்கபட்டு அக்டோபர் மாதத்தில், மணிப்பூர் ஒரு
குடியரசாக  இருக்க கையெழுத்திட்டார்.






மக்கள் எல்லோரும் தனி நாடு என்று நினைத்திருக்க, மகாராஜவோ இந்திய குடியரசிடம் ஒரு மாநிலமாக இணைத்தது இந்த பிரச்சனையின் ஒரு தொடக்கமானது எனலாம். மணிப்பூர் மாநிலம் பர்மா நாட்டுடன் எல்லைகள் இணைந்து உள்ளது, அது ஒரு அச்சுறுத்தலாக இருந்தது. இந்த தனி நாடு பிரச்சனையை தணிக்க அரசு இரண்டு விதமாக அணுகியது....பொருளாதார மேம்பாடு மற்றும் ராணுவ பாதுகாப்பு. இதில், மணிப்பூர் டெல்லியில் இருந்து பல மைல் தூரம் இருந்ததாலும், இந்தியாவிற்கு பொருளாதார வளர்ச்சி என்பது கடல் பக்கத்தில் இருக்கும் மாநிலத்தில் அதிகம் இருக்கும் என்பதாலும் மனிபூருக்கு சிறிது காலம் பொருளாதார ஓய்வு கிடைத்தது ! இதனால் அங்கு மிதவாத, தீவிரவாத குழுக்கள் தனி நாடு கேட்டு போராட ஆரம்பித்தன. மொத்தம் 34 குழுக்கள் இப்படி போராட ஆரம்பித்தபோது, 1964ம்  ஆண்டு இதை அடக்க மத்திய
அரசு  இராணுவத்தை அங்கே அனுப்பியது. இது நாட்டின் பாதுகாப்பு சம்மந்தப்பட்ட பிரச்சனை என்பதால் இராணுவத்துக்கு சில அதிகாரங்களை அளித்தது அரசு.




1972ம் ஆண்டு யூனியன் பிரதேசமாக இருந்த மணிப்பூர் ஒரு மாநிலமாக அறிவிக்கப்பட்டபோது, இந்த பிரச்சனைகள் எல்லாம் சரியாகிவிடும் என்று நினைத்தது அரசு, ஆனால் ராணுவத்தின் அடக்குமுறையால் அங்கு பிரச்சனை இருந்துகொண்டே இருந்தது. இதனால், பீபில் லிபரேஷன் ஆர்மி (PLA ) என்று அழைக்கப்படும் ஒரு தீவிரவாத அமைப்பு ஒன்று 1978 ஆண்டு தோன்றியது, அது அங்கு இருக்கும் ராணுவத்துக்கு சவால் விடுவதாய் அமைந்தது. இதன் பின்னர் பல மறைமுக போர்கள் நடந்து மக்களுக்கும், ராணுவத்துக்கும், தீவிரவாத குழுக்களும் இந்த அற்புதமான மாநிலத்தை தொடர்ந்து பொருளாதாரத்தில் பின்னடவை சந்தித்தன. இதனால், எந்த தொழிலும் அங்கு தொடங்க முடியவில்லை, இதனால் அங்கு பொருட்களின் விலை அதிகமாக ஆரம்பித்தது. வேலை வாய்ப்பு அரிதானது, மக்கள் வேலை தேடி வேறு மாநிலங்களுக்கு போக ஆரம்பித்தனர்.




இப்படி சென்று கொண்டு இருந்தபோது, அங்கு இருந்த தீவிரவாத குழுக்கள் மேலும் மேலும் தாக்குதல்களை தொடர்ந்தது. 1984, 1987, 1993, 1995இல் ராணுவத்தாலும், தீவிரவாத குழுக்களாலும் இந்த ஆண்டுகளில் பெரும் படுகொலைகள் நிகழ்த்தப்பட்டது. இதனால், மத்திய அரசு AFSPA என்னும் ராணுவ சட்டத்திற்கு சிறப்பு அதிகாரம் ஒன்றை 1997ம் ஆண்டு அளித்தது. இதனால், ராணுவம் யாரை வேண்டுமானாலும் சந்தேகபட்டால் சுடலாம், எங்கும் எப்போதும் தேவைபட்டால் எமெர்ஜென்சி கொண்டு வரலாம் என்றெல்லாம் இருந்தது. இதை நாட்டின் பாதுகாப்புக்கு அரசு கேட்டதால் உச்ச நீதி மன்றம் கொடுத்தது.




அதன் பின் நவம்பர் 2000ம் ஆண்டு மலோம் என்னும் நகரில் ஒரு பஸ் நிறுத்தத்தில் நின்று இருந்த 10 பேரை ராணுவம் தீவிரவாதி என்று சுட்டு கொன்றது. இதனை கண்டு வெகுண்டு எழுந்த இரோம் ஷர்மிளா அன்றிலிருந்து இன்று வரை தண்ணீர், உணவு உண்ணாமல் இருந்து வருகிறார். தினமும் ராணுவத்திற்கும், தீவிரவாத குழுக்களுக்கும் நடக்கும் சண்டையில் அப்பாவி மக்கள் கொல்லபடுகிறார்கள். அவரது கோரிக்கை.....AFSPA என்னும் ராணுவ சட்டத்தை திரும்ப பெறுக என்பதே. இதன் மூலம் மக்கள் நிம்மதியாக நடமாட முடியும், மறுபடியும் மகிழ்ச்சி திரும்பும் என்ற அவரது நம்பிக்கை நிஜமாகட்டும்.


நம் எல்லோருக்கும் தெரிந்தது எல்லாம் காஷ்மீர் பிரச்சனை ஒன்றுதான், ஆனால் வடகிழக்கு மாநிலங்களிலும் இதே நிலைமைதான், அதனால்தான் நீங்கள் இங்கு அந்த நாடு மக்களை கூலிகள், ஹோட்டல் சர்வர், கட்டிட வேலைகள், கூர்க்கா என்றெல்லாம் இன்று பார்க்கிறீர்கள். அவர்கள் அங்கு பொருளாதார வளர்ச்சி, வேலையின்மையால் இங்கு வருகிறார்கள். அவர்களை அடுத்த முறை பார்க்கும்போது ஒரு சிறு புன்னகை போதும், நாமும் அவர்களை மதிக்கிறோம் என்று காட்ட....

2 comments:

  1. What a moral stamina she has to oppose the mighty Indian state in a non violent way! Surely she will will win one day.
    Nilavan

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி நிலவன்....தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் ! இரோம் ஷர்மிளாவின் போராட்டம் வெற்றியடைய வேண்டும் !

      Delete