Friday, October 19, 2012

மறக்க முடியா பயணம் - சென்னை கிஷ்கிந்தா தீம் பார்க்

 சென்னையில் வெயிலுக்கு ஒரு குளு குளு ஸ்பாட் இந்த "கிஷ்கிந்தா தீம் பார்க்" !! எல்லோரும் சென்னையை சுற்றி பார்க்க போகும் பொது LIC பில்டிங், மகாபலிபுரம், பீச், முட்டுக்காடு என்று மட்டும் போய் வருவார்கள், அதில் இதையும் சேர்த்து கொள்ளுங்கள். இங்கு உங்களுக்கு கார் இருந்தால் நல்லது, இல்லையென்றால் தாம்பரத்தில் இருந்து இவர்களது பேருந்து ஒன்று இங்கு செல்கிறது. அல்லது நீங்கள் ஒரு ஷேர் ஆட்டோவில் செல்லலாம். இந்த தீம் பார்க் உள்ளே செல்ல பெரியவர் ஒருவருக்கு 450 ரூபாயும், சிறியவருக்கு 350 ரூபாயும் ஆகிறது. காலை 10:30 மணியில் இருந்து மாலை
6:30 மணி வரை திறந்திருக்கிறது.

இந்த இடத்தை பற்றி  தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்...கிஷ்கிந்தா தீம் பார்க்
சென்னையில் மொத்தம் ஐந்து முக்கிய தீம் பார்க் இருக்கின்றன...அது VGP கோல்டன் பீச், MGM டிஸ்ஸி வேர்ல்ட், குயின்ஸ் லேன்ட், EVP தீம் பார்க் மற்றும் கிஷ்கிந்தா !! இதில் VGP க்கு அடுத்து நன்றாக பராமரிக்கபடுவது இந்த கிஷ்கிந்தா என்பது என் கருத்து. இங்கு உள்ளே நுழைந்தவுடன் உங்களின் பைகளை சோதனை செய்து முதலில் திங்க அல்லது குடிக்க எஹ்டுவும் இருந்தால் எடுத்து விடுகின்றனர், ஏனென்றால் உள்ளே இருக்கும் ஸ்டால்களில் எல்லாம் கிடைக்குமாம், அதனால் நீங்கள் எதுவும் வாங்கி செல்லாமல் இருப்பது நலம் !


இங்கு உள்ள விளையாட்டுகளை மூன்று வகைகளாக பிரிக்கலாம், உட்கார்ந்து பார்ப்பது, தண்ணீர் விளையாட்டுக்கள், தண்ணீர் அல்லாத விளையாட்டுக்கள். இதில் உட்கார்ந்து பார்ப்பது என்பதில் 3டி படம், அவ்வபோது ஒரு வித்தியாசமான ஷோ என்று இருக்கும். தண்ணீர் விளையாட்டுக்களில் சென்னை குற்றாலம், வேவ் குளம், சறுக்கு, வாட்டர் ஜெட் ஸ்கீங் என்று பல பல விளையாட்டுக்கள் உள்ளன. தண்ணீர் அல்லாத விளையாட்டுக்களில் கோ கார்ட் ரேஸ், கப்பல் ஸ்விங், டாஷிங் கார், கப் ஸ்விங் என்று பல வகைகள் உண்டு.

                                    

நீங்கள் முதலில் எதை செய்ய போகிறீர்கள் என்று முடிவெடுத்து செல்லுங்கள்....சிலர் அங்கும் இங்கும் என்று ஓடி கொண்டே இருப்பதை பார்த்தேன். சிலர் தண்ணீர் விளையாட்டு, தண்ணீர் அல்லாத விளையாட்டு என்று மாற்றி மாற்றி ஓடி கொண்டு இருப்பார், அதனால் முடிவில் அவருக்கு ஜலதோஷம் வரும் என்பது தெரியவில்லை. நாங்கள் காலை முழுவதும் இந்த உட்கார்ந்து பார்ப்பது, தண்ணீர் அல்லாத விளையாட்டுக்கள் மட்டுமே என்ஜாய் செய்தோம், பின்னர் சாப்பிட்டு முடித்து விட்டு முழுவதும் தண்ணீர் விளையாட்டுகள் மட்டுமே விளையாடினோம், இதனால் மதிய வெயிலில் போட்டு இருந்த உடைகள் உடனே காய்ந்தன.

                                   

நீங்கள் உங்கள் நண்பர்களுடன் செல்லும்போது ஒரு குழந்தையை போல் உணர்வீர்கள் என்பது நிச்சயம். ஒரு நாள் முழுவதும் இப்படி இருந்து பாருங்கள், ஒரு வருடம் வரை அது நினைவில் இருக்கும் !

6 comments:

 1. இனிய பயண அனுபவம்...

  படங்கள் சூப்பர்ப்...

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி தனபாலன் சார்....உண்மையிலேயே நீங்களும் உங்கள் குடும்பத்தினரும் செல்ல வேண்டிய இடம் இது !

   Delete
 2. படங்களுடன் விரிவாக விளக்கியுள்ளது
  என் போல் பார்க்காதவர்களுக்கு
  நல்ல வழிகாட்டிப் பதிவாக உள்ளது
  பகிர்வுக்கு நன்றி

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும், கருத்திற்கு மிக்க நன்றி ரமணி சார் !! மதுரையில் இருக்கும் தீம் பார்க் சென்று இருகிறீர்களா, தங்களது கருத்து என்ன ?

   Delete
 3. ஏனுங்கனா..இருந்தாலும் உங்களுக்கு குசும்பு அதிகம்னோவ்..கிஸ்கிந்தா தீம்பார்க்கயே நல்லாருக்குனு சொன்ன ஒரே தலைவர் நீங்கதான்..இப்படி ஒருத்தர் சொல்லிதான் நானும் போனேன்..அப்பப்பா முடியல..நல்லா maintain பண்றாங்கனு சொன்னிங்கலே அதத்தான் தாங்க முடியல...நண்பர்களே.. அண்ணன் சொல்ற மாதிரி எல்லாம் கிஸ்கிந்தா கிடையாது..தயவுசெய்து யாரும் போவதற்கு முயற்சி செய்ய வேண்டாம்..

  ReplyDelete
  Replies
  1. என்ன யசாரு...என்னை போய் தலைவன் ஆக்கிடீங்க ?! என்னுடைய அனுபவத்தை நான் சொன்னேன் அவ்வளவுதான்.....தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி !

   Delete