Sunday, October 7, 2012

மனதில் நின்றவை - ஷாருக் கான் வசனங்கள்

நான் ஷாருக் கானின் ரசிகன் இல்லை, ஹிந்தியும் கொஞ்சம்தான் தெரியும், ஒரு படம் பார்க்கும் போது புரிந்து கொள்ள முடியாது, ஆனாலும் இந்த வசனங்களை பார்க்கும் போது எனது மனதில் ஒரு சிலிர்ப்பு
தெரியும், எப்போதெல்லாம் எனக்கு சோர்வு தெரிகிறதோ, அப்போதெல்லாம் நான் இதை பார்ப்பதுண்டு, நீங்களும் கண்டிப்பாக ரசிப்பீர்கள் !


நான் ஒரு முறை, மனதை ஒருமுகபடுத்தும் - தன்னம்பிக்கை வகுப்பில் இருக்கும்போது, என்னிடம் உங்களுக்கு மிகவும் பிடித்த நடிகை ஒருவருடன் ஒரு இரவில் டின்னர் இருக்கிறது, அதற்க்கு எப்படி தயார் ஆவீர்கள் என்று கேட்ட போது....நான் புது கோட், வாட்ச், செண்ட், பூக்கள் என்று அடுக்கி கொண்டே போனேன், அப்போது அவர் உங்களது வாழ்க்கைக்கு எப்படி நீங்கள் தயார் ஆகின்றீர்கள் என்றார் ? ஒரு சின்ன டின்னருக்கே இவ்வளவு முயலும்போது, உங்களுக்கு பிடித்த வாழ்க்கைக்கு எவ்வளவு தயார் ஆக வேண்டும் !! அதுதான் கீழே இருக்கும் டயலாக்கில் வெளிப்படும்...



எப்போதாவது சோர்ந்து இருக்கும் போது, வாழ்வு அவ்வளவுதான் என்று தோன்றும் போது, இந்த டயலாக் எனக்கு ஒன்று மட்டும் சொல்லும் "இது முடிவு இல்லை.....இன்னும் வாழ்க்கை இருக்கிறது". இதில் ஷாருக் பேசும் போது எனக்கு ஹிந்தி புரியவில்லை என்றாலும் அந்த பீலிங் இதில் இருக்கும்.


இதை பார்த்தவுடன், உங்களுக்கும் மனதில் நம்பிக்கை பிறக்கிறதா, அப்படியென்றால் ஒரு பின்னூட்டம் இடுங்கள் !


2 comments:

  1. "இது முடிவு இல்லை.....இன்னும் வாழ்க்கை இருக்கிறது".

    அழகான வரிகள்.. பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் மிக்க நன்றி ராஜராஜேஸ்வரி !

      Delete