Tuesday, October 23, 2012

ஆச்சி நாடக சபா - பாம்பே ட்ரீம்ஸ்

 ஆன்ட்ரூ லாயிட் வெப்பர் (Andrew Lloyd Webber) இவர் ஒரு பலமுகம்
கொண்ட ஒரு என்டேர்டைநேர். இவர் லண்டனில் பிறந்து, வெஸ்ட்
மினிஸ்டர் ஸ்கூலில் படித்த ஒரு பிசினஸ் மேன், கம்போசர், டிவி
நிகழ்ச்சி தயாரிப்பாளர், தியேட்டர் ஆர்டிஸ்ட். இவரை பற்றி நீங்கள் சில
வருடங்களுக்கு முன்பு கேள்வி பட்டு இருக்கலாம் ! உலக அளவில்
புகழ் பெற்ற பல ஷோகளுக்கு காரணகர்த்தா ! இவரது ஷோ பற்றி
இந்த   "ஆச்சி நாடக சபா" பதிவில் எழுதினாலே ஒரு மூன்று மாதங்கள் வரை வார வாரம் எழுதலாம், அவரது ஒரு படைப்பை பற்றிதான் இங்கே நீங்கள் காணப்போவது...... "பாம்பே ட்ரீம்ஸ்".

                                           




ஒரு முறை இவர் தனது வீட்டில் இருந்த போது டிவியில் அவரை கவர்ந்த அந்த நடனமும் பாட்டும்தான் இந்த பாம்பே ட்ரீம்ஸ் உருவாவதற்கு அடிப்படை. மொத்தம் 17 பாடல்கள் ஒரு சிறு கதை....இதுதான் பாம்பே ட்ரீம்ஸ் கதை !! ஆகாஷ் என்னும் ஒரு சேரியில் உள்ள சிறுவன் ஒரு புகழ் பெற்ற நடிகனாக ஆசைபடுகிறான். அவன் பிரியா என்னும் ஒரு மிக பெரிய தயாரிப்பாளரின் மகளுடன் காதல் கொள்கிறான், அவனது காதல் ஜெயித்ததா இல்லையா என்பதுதான் கதை.




நான் முன்பே சொல்லியது போல் இதை நம் நாட்டில் எடுத்திருந்தால் போட்ட காசு வந்திருக்காது, ஆனால் கண்ணுக்கு குளிர்ச்சியாக செட்டிங், பெரிய மியூசிக் டைரக்டர், விளம்பரங்கள், லைட்டிங் என்று ஒரு பழைய கஞ்சியை ஒரு தங்க கோப்பையில் கொடுத்தால் மக்கள் நான் நீ என்று போட்டி போட்டு கொண்டு பார்ப்பார்கள் !! நமது A.R.ரகுமான் இசை
அமைத்து ஏகத்திற்கும் ஹிட் ஆன ஒன்றுதான் இது. இதை நீங்கள்
பார்க்கும்போது அட என்று வியப்பு வரும் !!





No comments:

Post a Comment