Thursday, November 1, 2012

புரியா புதிர் - கூடங்குளம் அணு மின் நிலையம் (பகுதி - 1)

 கூடங்குளம் என்றவுடன் நம் நினைவுக்கு வருவது அந்த மீனவ மக்களின் போரட்டங்களும், நமது அரசாங்கம் ஏன் அணு மின் நிலையம் அமைக்க கூடாது என்ற கேள்வியும்தான்.....ஆனால் அதை தெரிந்துக்கொள்ள நீங்கள் ஆசைபட்டால் நிறைய நிறைய தெரிந்து கொள்ள நேரிடும். இதில் நீங்கள் இந்தியாவின் மின்சார தேவை, அதை உற்பத்தி செய்யும் விதம் எல்லாம் தெரிந்தால்தான் எதற்கு இந்த கூடங்குளம் பிரச்சனை என்று புரியவரும்.





மின்சாரம்...இப்போதைய இந்தியாவின், முக்கியமாக தமிழகத்தின் தேவை !! அதை தயாரிக்க பல்வேறு வழிகள் இருக்கின்றன....நிலகரி, தண்ணீர், டீஸல், காற்று, காஸ், சூரிய ஒளி மற்றும் அணு மின் நிலையங்கள். இதில், நிலகரி மற்றும் தண்ணீர் மூலம் தயாரிக்கப்படும் மின்சாரங்களே நமக்கு இன்றளவிலும் வாழ்வு அளித்து கொண்டிருகின்றன. நீங்கள் எந்த வழியில் தயாரித்தாலும் நமது மின் தேவைகள் அதிகரித்து கொண்டே இருக்கின்றன. இந்தியாவின் 60% மின்சாரம் நிலகரி மூலம் தயாரிக்கபடுவதே.






மக்களின் தேவைகளும், எலேக்ட்ரோனிக் பொருட்களின் வளர்ச்சியும், பொருளாதார வளர்ச்சியும் இந்த மின் தேவைகளை ஒவ்வொரு வருடங்களும் அதிகரிகின்றன. இதனால் நீங்கள் மின்சார உற்பத்தி நிலையங்களை அதிக அளவில் ஒவ்வொரு ஆண்டும் உருவாக்க வேண்டும். அப்படியென்றால் நிலகரி அதிக அளவு வேண்டும், ஏனென்றால் தண்ணீர் மூலம் வரும் மின்சாரம் பருவநிலையை சார்ந்தது, அதே போல்தான் காற்று ஆலைகளும். ஆகையால், ஒவ்வொரு நிலகரி கிடைக்கும் இடங்களிலும் மின் நிலையங்கள் வேண்டும், அப்படி இருந்தால்தான் நிலக்கரியை நீங்கள் அதிகம் இடமாற்றம் செய்ய வேண்டாம்.







சரி, இந்திய முழுவதும் எத்தனை மின் உற்பத்தி நிலையங்கள் உள்ளன, அது கிரிட் மூலம் எப்படி சப்ளை செய்யபடுகிறது தெரியுமா ? முதலில் நிலகரி மின் உற்பத்தி பற்றி பார்போம், கீழே உள்ள படத்தினை பார்த்தால் நமது நிலகரி உற்பத்தி நிலையங்களும், நிலகரியும் எங்கெங்கு உள்ளது என தெரியவரும். நிலகரி குறைந்தால் இந்தியாவே ஒரு நாள் ஸ்தம்பிக்கும்....அது மட்டும் அல்ல, சுரங்கத்தினுள் தண்ணீர் புகுந்தால் நிலகரி அவ்வளவுதான்.


இந்தியாவில் தன்பாத் என்னும் இடத்தில நிலகரி அதிகம் கிடைகிறது.

 

இந்தியாவின் நிலகரி மின் நிலையங்களின் இடங்கள்...


இப்படி கிடைக்கும் மின்சாரத்தைதான் நாம் கிரிட் என்பதன் மூலம் பிரித்து கொடுக்கிறோம். அதாவது ஒவ்வொரு மாநிலத்தின் மின் தேவைக்கு ஏற்ப மின்சார உருவாக்க திட்டங்கள் கொண்டு வந்து அதை பூர்த்தி செய்வார்கள். உதாரணமாக, அஸ்ஸாம் மாகாணத்தில் அவ்வளவு மின் தேவை இல்லை, ஏனென்றால் அங்கு அதிகம் தொழிற்சாலை இல்லை, ஆதலால் அந்த பகுதிகளில் மின் நிலையங்கள் அதிகம் இருக்காது. ஒரு கிரிட்டில் இருந்து இன்னொரு கிரிட்டிற்கு மின்சாரத்தை அனுப்புவதும் கடினம் ! இதனால்....அந்த அந்த மின் திட்டங்கள் அந்த அந்த பகுதி மக்களின் பயனுக்குதான் என்பது புரிகிறதா.



 சரி, இதை எல்லாம் எதற்கு சொல்கிறாய் என்கிறீர்களா.... கூடங்குளம்
 மக்கள் பிரச்னையை நீங்கள் ஆழமாக புரிந்து கொள்ள வேண்டாமா ? அப்படி புரிந்து கொள்ள வேண்டுமென்றால் இந்த அணு உலை மின்சாரம் வேண்டுமா வேண்டாமா என்று முடிவெடுக்க நீங்கள் இந்த மின்சார தேவை, மற்றும் அது உற்பத்தி செய்யப்படும் விதம் இரண்டையும் தெரிந்து கொள்ளாமல் முடியாது.

அடுத்த பகுதிகளில்....கூடங்குளம் என்ன சொல்கிறது, அவர்களின் பிரச்சனை என்ன, மாற்று வழி மின்சாரம் சாத்தியமா என்பதை அறிவோம்.

No comments:

Post a Comment