Wednesday, November 21, 2012

உலகமகாசுவை - பெல்ஜியம் உணவுகள் (பாகம் - 1)

பெல்ஜியம் என்பது ஐரோப்பா கண்டத்தில் உள்ள ஒரு நாடு. பிரான்ஸ், நெதர்லாந்த், ஜெர்மனி நாடுகள் எல்லாம் இதன் அருகில் உள்ளது. நமக்கு எல்லாம் பெல்ஜியம் கண்ணாடிகள் என்றால் மட்டும் தெரியும், ஆனால் உணவு வகைகளில் இங்கு என்ன எல்லாம் பிரபலம் என்று பார்க்கலாம் வாருங்கள் ! நமது ஊரில் இட்லி போல அங்கு குறிப்பிட்டு உணவுகளை இங்கு சொல்ல முடியாது, ஆனால் அங்கு எல்லோரும் விரும்பும் உணவுகளை பாப்போம்.




 இங்கு உள்ள மக்கள் முறையே பீர், வாப்பெல்ஸ், சாக்லேட், பிரெஞ்சு ப்ரை ஆகியவற்றை விரும்புகின்றனர். இங்கு கிடைக்கும் பீர்களின் வகை எண்ணிக்கை மட்டும் சுமார் ஆயிரத்தை தாண்டுகிறது. ஒவ்வொரு பீருக்கும் ஒவ்வொரு கிளாஸ் வகை என்று கணக்கில் அடங்காது. இங்கு உணவுகள் என்றால் எங்கும் கிடைப்பதுதான், ஆனால் இவர்கள் விரும்பி உண்ணுவது என்பது இந்த நான்கும்தான், அதை பற்றி விரிவாக பார்ப்போம்.






பெல்ஜியம் பீர் :

இந்த சிறிய நாட்டில் மட்டும் 178 பீர் செய்யும் கம்பெனிகள் இருக்கின்றன, பீர் தயாரிப்பது என்பது இங்கு குடிசை தொழில் போல ! நமது நாட்டில் எல்லாம் பீர் என்பது ஒரு பொன் வண்ண திரவம், ஆனால் இங்கு பல பல வண்ணங்களில் கிடைக்கிறது. ஒவ்வொரு பீருக்கும் ஒவ்வொரு சுவை ! இதில் நமது ஊரில் கிடைக்கும் கிங் பிஷர் பீரின் போதையின் அளவு 8%, ஆனால் இங்கு 3% இருந்து 10% வரை கிடைக்கிறது. கீழே உள்ள படத்தை பார்த்தால் உங்களுக்கு விதவிதமான பீர் வகைகளை பற்றி தெரிந்து கொள்வீர்கள்.


இங்கு பீர் மட்டும் பல நிறங்களில் கிடைப்பதில்லை, நீங்கள் ஊற்றி குடிக்கும் கிளாஸ் வகைகளும் கூட நிறைய. ஒரு பீர் கம்பெனியின் கிளாஸ் இன்னொரு கம்பெனியின் பீருக்கு கண்டிப்பாக பயன்படுத்த மாட்டார்கள். சில சமயம் பல கம்பெனிகள் இதை ஒரு சுமையாக கருதி அவர்களுக்குள் ஒரு கூட்டணி அமைத்து ஒரு பொதுவான லோகோ ஒன்றை அமைத்து ஒரே போல கிளாஸ் பயன்படுத்துகின்றனர் ! கீழே பாருங்கள் எத்தனை வகையான கிளாஸ்....நமது நாட்டில் எல்லாம் ஒரு பிளாஸ்டிக் கப் போதும் !!


இதுவரை நீங்கள் பார்த்தது எல்லாம் சாம்பிள்தான் ! இங்கு குடிக்கும் காபியில் எல்லாம் பீர் ஊற்றி கொடுக்கிறார்கள் ! அட இங்கு சாப்பிடும் உணவுகளில் கூட பீர் ஊற்றி பொறித்து எடுக்கிறார்கள். பெல்ஜியம் பீர் பற்றி மேலும் தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்....பெல்ஜியம் பீர்.





உலகில் எத்தனை வகையான பீர் உள்ளது அதற்க்கு பெயர் என்ன என்று தெரிந்துகொள்ள கீழே பாருங்கள்...


சரி, இதை எல்லாம் படித்து படித்து ரொம்ப சோர்வாகி இருப்பீர்கள், வாருங்கள் ஒரு பீர் சாப்பிடலாம் !!


அடுத்த பகுதியில் நாம் பெல்ஜியம் வாப்பெல்ஸ், சாக்லேட், பிரெஞ்சு ப்ரை பற்றி விரிவாக பாப்போம் ! வாழ்க பெல்ஜியம் !!

Labels : Belgium foods, Belgian beers, beers, Belgium, World food, Kadalpayanangal, Beer

2 comments:

  1. தகவல்கள் வியப்பாக இருக்கிறது...!

    ReplyDelete
    Replies
    1. நன்றி தனபாலன் சார் ! இன்னும் நிறைய தகவல்கள் உங்களை வியப்பில் ஆழ்த்த வருகின்றன....அடுத்த பகுதியில் !

      Delete