Friday, November 2, 2012

புரியா புதிர் - கூடங்குளம் அணு மின் நிலையம் (பகுதி - 2)

சென்ற பதிவில் இந்தியாவின் மின்சார தேவை, அது எப்படி எங்கிருந்து கொண்டு செல்ல படுகிறது, உற்பத்தி முறைகள் சிரமங்கள் என்று பார்த்தோம், அதை படிக்காமல் விட்டவர்கள் இங்கே சொடுக்கி பார்க்கவும்...புரியா புதிர் - கூடங்குளம் அணு மின் நிலையம் (பகுதி - 1)


இந்த பகுதியில் முதலில் கூடங்குளம் அணுமின் நிலையம் பற்றியும், அதை ஏன் மூடவேண்டும் என்று மக்கள் குரல் கொடுகின்றனர் என்றும் பார்க்கலாம், அதன் பின் மாற்று வழி மின்சாரம் சாத்தியமா என்று அலசலாம். 1988ம் ஆண்டு அன்றைய பிரதமர் திரு.ராஜீவ் காந்தி அவர்களும், ரஷ்ய அதிபர் கார்பசேவ் அவர்களும் இணைந்து இந்திய நல்லுறவின் அடிப்படையில், அதன் மின்தேவைக்கு ரஷ்யா இரண்டு அணு உலைகளை அமைத்து கொடுக்க ஒப்பு கொண்டது. ஆனால் ரஷ்யா 1991ம் வருடம் சிதறுண்டது, இதனால் எல்லாம் தாமதமானது. அது மட்டும் இல்லை....அமெரிக்கா இந்தியாவின் இந்த நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதனால், இந்த கூடங்குளம் அணுமின் நிலைய பணி செப்டம்பர் 2001ம் ஆண்டுதான் தொடங்கப்பட்டது. அன்று இந்தியா அணு ஆராய்ச்சியில் பின் தங்கி இருந்தது, அதனால் இந்த ஒப்பந்தம் இந்தியாவின் அணு ஆயுத ஆராய்ச்சிக்கும் உதவியாக இருக்கும் என்பதும் ஒரு காரணம். இந்த அணு உலையின் படி படியான வளர்ச்சி பற்றி அறிய இங்கே சொடுக்கவும்....அணு உலை






கூடங்குளம் அணு உலை வேண்டும் வேண்டாம் என்பதற்கு காரணங்களை அருமையாக அடுக்கி உள்ளது இந்த வலைப்பக்கம்....கூடங்குளம்

இந்த போராட்டத்தை மக்கள் ஏன் நடத்துகின்றனர், அவர்களது கோரிக்கை என்ன என்று பார்க்க இங்கே சொடுக்கவும்....கூடங்குளம் போராட்ட குழுவின் கோரிக்கை



இவர்களது போராட்டம் இந்த அணு உலை வேண்டாம் என்பதே, இதற்க்கு முக்கிய காரணம், நமது அரசாங்கம் அவர்களுக்கு விபத்து ஏற்பட்டால் எந்த உதவியும் செய்யாது என்பதே. இதற்க்கு முன் போபால் விஷ வாயு விபத்திற்கு காரணமான ஆட்களை இந்தியா தப்ப விட்டது என்றும், அந்த விபத்திற்க்கே இன்னமும் தீர்வு இல்லை என்பதனாலும், இந்த மக்கள் இந்த அணு உலையை எதிர்கின்றனர், இவர்கள் தங்களது மண்ணுக்காகவும், அடுத்த தலைமுறையை காப்பாற்றவும் போராடுகின்றனர். நமது அரசாங்கம் இந்த அணு உலையை உருவாக்க 18000 கோடி ரூபாயை மக்களின் வரி பணத்திலிருந்து செலவழித்து உள்ளது, அது மட்டுமில்லாமல் இந்த அணு உலையிலிருந்து மின்சாரம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் வேறு எந்த திட்டமும் கொண்டு வரவும் இல்லை.....
ஆதலால் இந்த மின்சாரம்  நாட்டுக்கு முக்கிய தேவையாய் இருக்கிறது. இன்று இந்த போராட்டம் மக்களின் வரி பணம் Vs கூடங்குளம் மக்களின் வாழ்வு என்று உள்ளது.




சிலர் அமெரிக்காவில் எல்லாம் மின் பற்றாக்குறையே இல்லை என சொல்லுவர், இதில் ஒன்றை நாம் பார்க்க வேண்டும்....அங்கு இருக்கும் மக்கள் தொகை. அமெரிக்கா இந்தியாவை விட பெரிது, அதனால் அங்கு, இங்கு உள்ளது போல மின்சாரத்தை கம்பி வழியே எடுத்துசெல்ல செலவாகும், பணமும் விரயமும் அதிகம். ஆகையால் சிறிய அளவில் அணு மின் நிலையங்கள் அமைத்துள்ளனர்.




அடுத்த பகுதியில் மாற்று வழி மின்சாரம் பற்றி விரிவாக பார்க்கலாம். இந்த மாற்று வழி மின்சாரம் எவ்வளவு தூரம் பயன் தரும் என்று பாப்போம் !

2 comments:

  1. நன்றி ஜீவா.....தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் !

    ReplyDelete