Tuesday, November 27, 2012

உலகமகாசுவை - பெல்ஜியம் உணவுகள் (பாகம் - 2)

சென்ற வாரத்தில் நீங்கள் பெல்ஜியம் உணவுகள் (பாகம் - 1) படித்து போதை ஆகி இருப்பீர்கள் என்று எண்ணுகிறேன். இதை படித்த சிலர் என்னிடம் அட நம்ம ஊரில் ஒரே டைப் கொடுத்து ஏமாத்தறான் பார், இதுக்காகவே பெல்ஜியம் போகணும் போல இருக்கு என்று புலம்பினர். இதை படிக்காமல் விட்டவர்கள் இங்கே சொடுக்கி சென்ற பதிவை பார்க்கவும்...உலகமகாசுவை - பெல்ஜியம் உணவுகள் (பாகம் - 1).



சரி இந்த முறை வாப்பெல்ஸ், சாக்லேட், பிரெஞ்சு ப்ரை பற்றி விரிவாக பார்ப்போம். அதற்க்கு முன் இந்த ஊரின் அமைப்பை பற்றி பாப்போம், பொதுவாக இங்கு வாழும் எல்லோருக்கும் ஒரு சிறிய வீடு, கார் உள்ளது. இவர்கள் எல்லோரும் நம் இந்தியாவில் இருப்பது போல அடுக்கு வீடுகளில் வாழுவதை விரும்புவதில்லை, அதனால் எல்லோரும் ஊருக்கு வெளியில் வீடு கட்டி கொள்கின்றனர். தெருக்கள் எல்லாம் குறுகலாக இருக்கிறது, நமது ஊரில் கூட ரோடுகள் எல்லாம் அகலம் என்று சொல்லலாம். அது மட்டும் இல்லை, இவர்கள் சம்பாதிப்பதில் 55% வரை டாக்ஸ் கட்டி விடுகின்றனர் + சர்வீஸ் டாக்ஸ் உண்டு. உதாரணமாக இவர்களுக்கு 1000 ரூபாய் சம்பள உயர்வு வந்தால் கையில் எல்லாம் போக 340 ரூபாய் மட்டுமே வரும் !! ஆனால் டாக்ஸ் கட்டுபவர்களுக்கு அரசாங்கத்திடம் இருந்து சில பல சலுகைகள் கிடைகின்றன.

பெல்ஜியம் வாப்பெல்ஸ் (Waffles) :

வாப்பெல்ஸ் என்றால் தமிழில் சிறிய அப்பம் என்று சொல்லலாம். நமது அம்மா மாவு ஊற்றி தோசை சுடுவார்கள், அந்த தோசை மாவு அரிசியில் ஆனது ஆனால் இந்த வாப்பெல்ஸ் என்பது மைதா மாவு, முட்டை என்று கலந்து ஒரு வடிவான பாத்திரத்தில் செய்யப்படும். இதை தனியே தின்றால் நீங்கள் முகத்தை சுளிபீர்கள், ஆனால் இதனுடன் வரும் டாப்பிங் எனப்படும் சுவைகளை சேர்த்தால் ஆஹா என்பீர்கள்.

இதை எப்படி செய்வது என்று தெரிந்துகொள்ள இங்கே சொடுக்கவும்....பெல்ஜியம் வாப்பெல்ஸ் (Waffles) 



வாப்பெல்ஸ் பற்றி மேலும் தெரிந்துகொள்ள இங்கே சொடுக்கவும்....வாப்பெல்ஸ்



பெல்ஜியம் சாக்லேட் :

இன்றும் எனது நினைவில் இதன் சுவை இருக்கிறது. சாக்லேட் என்றால் நமது ஊரில் அதிகம் இனிப்பு இருக்கும், கோகோவின் சுவை தெரியாது, இங்குதான் முதன் முதலில் எனக்கு உண்மையான சாக்லேட் சுவை தெரிந்தது. அது மட்டும் இல்லை, இங்குதான் நான் வாழ்வில் முதல் முறையாக மதுபான சாக்லேட் சாப்பிட்டேன், அதாவது சாக்லேட் உள்ளே மது இருக்கும் ! உலகின் எந்த பகுதிக்கு சென்றாலும் இந்த சாக்லேட் போல கிடைக்காது என்பது எனது எண்ணம், அவ்வளவு சுவையானது இது.



இங்கு சாக்லேட் எல்லாம் ஒரே மாதிரி இருந்தாலும் அதன் உள்ளே வைக்கப்படும் அல்லது கலக்கப்படும் சுவை ஒவ்வொன்றும் ஒரு வகை, ஒரு வேளை அது கலந்துவிட்டால் எளிதில் பிரிப்பதற்கு இவர்கள் ஒவ்வொரு சுவையையும் ஒவ்வொரு நிறம் அல்லது வடிவில் பிரித்திருப்பார்கள். கீழே உள்ள படத்தை பார்த்தல் சாக்லேட் எத்தனை சுவையானது என்பது உங்களுக்கு தெரிய வரும். பெல்ஜியத்தில் லியோனிதாஸ் சாக்லேட் கடை மிகவும் பிரபலம். அதை பற்றி அறிந்துகொள்ள இங்கே சொடுக்கவும்....லியோனிதாஸ் சாக்லேட்


இந்த வீடியோ பார்த்தால் உங்களுக்கு பெல்ஜியம் சாக்லேட் பற்றி தெரியவரும்...நாவிலும் தண்ணீர் வரும் !!


பெல்ஜியம் ப்ரைஸ் :

இன்று நாம் எல்லோரும் சாப்பிடும் பிரெஞ்சு ப்ரை எனப்படும்
உருளைக்கிழங்கு  விரல் நீள ப்ரை என்பதுதான் பெல்ஜியம் ப்ரைஸ் ஆகும். இதை எதற்கு பிறகு பிரெஞ்சு ப்ரை என்று அழைக்கின்றோம் என்று கேட்டால் சரித்திரத்தை கண்டபடி புரட்ட வேண்டி வரும்....ஆனாலும் சுருக்கமாக சொல்வதென்றால், முதலாம் உலகபோரின்போது அமெரிக்க வீரர்கள் பெல்ஜியம் வந்தபோது இதை சுவைத்தனர், அப்போது பெல்ஜிய ராணுவத்தில் பிரெஞ்சு அதிகமாக பேசப்பட்டதால் அமெரிக்க வீரர்கள் அதற்க்கு பிரெஞ்சு ப்ரை என்று பெயரிட்டனர்.





இதன் இன்னொரு கதை என்பது....ஜுலின்னிங் (Julienning) என்பது நீள நீளமாக வெட்டுவது என்று பிரெஞ்சில் அர்த்தம். இந்த உருளைகிழங்கை இதுபோல நீள நீளமாக வெட்டி பொறித்து எடுப்பதால், அதுவும் இது பிரெஞ்சு முறை ஆதலால் இந்த பெல்ஜியம் ப்ரை என்பது பிரெஞ்சு ப்ரை ஆகிவிட்டது என்பர்.

ஆக இன்று நீங்கள் பெல்ஜியம் உணவுகள் பற்றி தெரிந்து கொண்டீர்கள், அடுத்த முறை நீங்கள் பெல்ஜியம் சென்றால் மறக்காமல் மேலே சொன்னதை சுவைக்காமல் வராதீர்கள் !!

Labels : Belgium, Belgian chocolate, Belgium fries, Waffles, Belgium food

8 comments:

  1. சுவைக்க தூண்டுகிறது..படங்கள்...

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஜீவா....உங்களது பயண கட்டுரைகள் எல்லாம் அருமையாக இருந்தன ! வாழ்த்துக்கள் !

      Delete
  2. sathyaraj amathipadai moviela alwa kulla kanja kutupparu... athu mathiri rum choclate..

    ReplyDelete
    Replies
    1. சரியா சொன்னீங்க ஜி !! முதல் தடவை இதை சாப்பிட்டப்ப அட அப்படின்னு இருந்துச்சு, அப்புறம் அந்த சுவை நமக்கு சரி வரலை !

      Delete
  3. சுவையான பகிர்வு... (...ம்... மனதிற்கு)

    நன்றி...

    ReplyDelete
    Replies
    1. நன்றி தனபாலன் சார் ! அடுத்த முறை உங்களுக்காகவே மதுபான வகை சாக்லேட் வாங்கி வருகிறேன் !!

      Delete
  4. பெல்ஜியம் எங்க இருக்குதுங்க?

    ReplyDelete
    Replies
    1. நன்றி கந்தசாமி சார் !! நீங்கள் இந்த தொடரின் முதல் பகுதியை படிக்க வில்லை என நினைக்கிறேன்....இந்த இணைப்பை சொடுக்கினால் உங்களது கேள்விக்கு விடை கிடைக்கும்

      http://kadalpayanangal.blogspot.in/2012/11/1_21.html

      Delete