Thursday, November 15, 2012

உலக திருவிழா - ராஜஸ்தான் ஒட்டக திருவிழா

இந்த பகுதியில் உலக திருவிழாக்களையும், அதன் பின்னணியையும் விரிவாக தெரிந்து கொள்ளலாம். சென்ற பதிவில் பலூன் திருவிழா, ஹல்லோவீன் திருவிழாவை பார்த்தோம்....எப்படி இருந்தது ?? கண்கொள்ளா காட்சி இல்லையா.....அதை போன்ற ஒரு திருவிழாதான் நம் இந்தியாவில், ராஜஸ்தான் மாநிலத்தில் ஒவ்வொரு கார்த்திகை பௌர்ணமியில், ஐந்து நாள் திருவிழாவாக நடைபெறும்...."புஷ்கர் ஒட்டக திருவிழா". வெளிநாடுகளில், ஊர்களில் இருந்து எல்லாம் ஆட்கள் வந்து ஒரே கொண்டாட்டமாக இருக்கும் !!





இந்த வருடம் 2012இல், நவம்பர் மாதம் 18 முதல் 27 வரை இது நடைபெறுகிறது. புஷ்கர் என்னும் ஊர், ராஜஸ்தானின் அஜ்மெர் மாவட்டத்தில் உள்ளது. என்றோ சிறிதாக ஆரம்பித்த ஒரு ஒட்டக சந்தை, அதன் அழகாலும், வண்ணமயமான மக்களின் உடை, கலாச்சாரத்தால் இன்று வெளிநாட்டில் பிரபலம். இங்கு ஒட்டகம் மட்டும் இல்லாமல் எல்லா வகை மிருகங்களையும் விற்கும் சந்தையாக இது உள்ளது. இராஜஸ்தான் அரசாங்கம் இதன் புகழை கருத்தில் கொண்டு இதை ஒரு எட்டு நாள் திருவிழாவாக கொண்டாடுகிறது. இதன் ஆரம்பம் எது, எதனால் இதை கொண்டாடுகிறார்கள் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை, ஆனால் இந்த ஊரில் இருக்கும் கோவில்கள் பிரபலமானவை !



இந்த திருவிழாவில் ஒட்டக பந்தயம், பெரிய மீசை போட்டி, மணப்பெண் அலங்கார போட்டி ஆகியவை மிகவும் பிரபலம். இங்கு வெளிநாட்டினர் பலர் வந்து இந்த வண்ணமயமான திருவிழாவை அனுபவிக்கின்றனர்.








இந்த மீசை போட்டிகளில் வெற்றி பெறுபவருக்கு பேரும், புகழும், வெகுமதிகளும் தேடி வருவதால் இங்கு மீசை வளர்பதற்கு போட்டா போட்டி !!



செல்வோமா நாமும்....புஷ்கர் ஒட்டக திருவிழாவிற்கு !!!

4 comments:

  1. Beautiful pictures and Videos!! Simply superb. Thanks Boss!!

    ReplyDelete
    Replies
    1. நன்றி தாஸ் ! நீங்கள் என்னை பாஸ் என்று அழைக்காமல் நண்பரே என்று அழைத்தால் இன்னும் சந்தோசபடுவேன் !

      Delete
  2. படங்கள் மிகவும் அருமை... நன்றி நண்பரே...

    ReplyDelete
    Replies
    1. நன்றி தனபாலன் சார் ! உங்களது உற்சாகமான ஒவ்வொரு கருத்துக்களும் என்னை மேன்மேலும் இது போல எழுத தூண்டுகிறது !

      Delete