கடற்கரை என்பது ஒரு போதி மரம் போல, ஒவ்வொரு அலைகளும் ஒரு செய்தி சொல்லும். அது பகலில் பார்க்கும்போது ஒரு மிக பெரிய கம்பளம் ஒன்று அசைவது போல இருக்கும், இரவினில் ஒரு கரும் இருட்டில் தெரியும் புள்ளிகள் எங்கோ நீங்கள் ஒரு பால் வெளியில் இருப்பது போல தோற்றம் தரும். நீங்கள் பல கடல் அல்லது கடற்கரைகள் பார்த்திருப்பீர்கள் அதில் உயிரோட்டமான கடற்கரை எது என்பதே இங்கு கேள்வி ? எல்லா கடற்கரைக்களுமே அழகுதான் இல்லையா....ஆனால் உயிரோட்டம் எங்கு உள்ளது ?
மியாமியின் கடற்கரையில் நிகழும் சூரிய அஸ்தமனம், ஹவாய் தீவின் சூரிய உதிப்பு, ஆஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் என்னும் கடற்கரையில் மின்னும் அந்த தங்க நிற துகள்கள், புக்கட் தீவு, மலேசியாவின் லங்காவி, சீசெல்லஸ், மாலத்தீவுகள், மொரிசியஸ், சிங்கப்பூரின் சில்சோ பீச் என்று ஆயிரம் ஆயிரம் கடற்கரைகள். இந்த
கடற்கரைகளில் எல்லாம் காதலர்கள், பிகினி தேவதைகள் (!?), சாகச விளையாட்டுகள் என்று நடந்து கொண்டிருக்கும்......கடலும் அதை சுற்றி மலைகளும் என்று ஒரு சொர்க்க பூமியாக இருக்கும்.
உலகின் முக்கிய, அழகிய, விரும்பும் கடற்கரைகள் என்று சொன்னால், அது இதுதான் என்று சொல்லபடுகிறது.....ஆனால் ஆளுக்கும், அவர்களின் விருபதிர்க்கும் ஏற்ப இந்த லிஸ்ட் மாறுகிறது.
![]() |
தேங்க்ஸ் டு : Map of world.com |
இந்த எல்லா கடற்கரையிலும் நீங்கள் ஒன்றை கவனிக்கலாம்....அமைதி. சில கடற்கரைகளில் கூட்டம் அதிகமாக இருக்கும், ஆனாலும் அங்கு ஏதோ ஒன்று குறையும்.....உயிரோட்டம். இந்த உயிரோட்டம் என்பது என்ன....உங்கள் மனதில் அமைதியை கொண்டு வரும் அந்த கடல், அதே மனதில் அன்பையும், சிரிப்பையும், பாசத்தையும், வாழ்கையின் மீது பிடிப்பையும் கொண்டு வர வேண்டும் இல்லையா ? நான் சென்று இருந்த எல்லா கடற்கரையிலும் என்னை யாரும் வந்து தொந்தரவு செய்ய மாட்டார்கள், ஒரு ஓரத்தில் பகிரங்கமாக முத்தமிட்டு கொண்டு, சிறு குழந்தைகள் பிளாஸ்டிக் கரண்டிகளில் மண் அள்ளி கொண்டு என்று இருக்கும். இதை பார்க்கும்போது ஆச்சர்யமாக இருக்குமே தவிர மனதில் அன்பு சுரக்காது. அவரவர் அவர்களது வேலையை செய்து கொண்டிருப்பார்கள்.
ஒவ்வொரு முறை மெரினா பீச் செல்லும்போதும் மனிதர்களின் மீது காதல்
பிறக்கும், அவர்களின் மீது ஒரு நம்பிக்கை வரும்....வாழ்கையில்
எல்லோருமே நம்மை ஏமாற்றமாட்டார்கள், நல்லவர்களும் இந்த நாட்டில்
உண்டு என்று தெரியும். ஆனால், இதுவே ஒரு வெளிநாட்டு கடற்கரை என்றால் அந்த கடற்கரை மீது மட்டுமே காதல் பிறப்பதை நான் உணர்ந்திருக்கிறேன், ஆனால் ஏனோ மனிதர்கள் மீது அன்போ, காதலோ வருவதில்லை !! இதைத்தான் நான் உயிரோட்டம் என்கிறேன்....உலகில் ஆயிரம் அழகிய கடற்கரை இருக்கலாம், ஆனால் உயிரோட்டமான கடற்கரை என்பது ஒன்றே ஒன்றுதான்....அது நமது மெரினா கடற்கரைதான். வாருங்கள், ஒரு வாய் சுண்டல் சாப்பிட்டு கொண்டே ஒரு நடை போய் வருவோம்.
Labels : Thoughts, Kadalpayanangal, Marina beach, beach, best beach, lively beach, beautiful, amazing
உண்மை தான்... கிட்டத்தட்ட இருபது வருடம் சென்னையில்...
ReplyDeleteசென்னையில் மெரினா பீச் ஒன்றே மிக்க மகிழ்ச்சி...
நன்றி தனபாலன் சார் ! ஆம் என்ன கவலைகள் இருந்தாலும் இந்த கடற்கரையின் முன்னே போய் உட்கார்ந்தால் எல்லாம் மறந்துவிடும்...
Deleteஆஹா, நம்ம கடற்க்கரை மோசம்னு சொல்லப் போறீங்கன்னு நினைச்சேன், இல்லை, உயர்த்திட்டீங்க. நன்றி!!
ReplyDeleteநன்றி ஜெயதேவ் !! நமது கலாச்சாரமும், பண்பாடும் உயர்ந்ததாய் இருக்கும்போது இந்த மெரினா கடற்கரை மட்டும் தாழ்ந்ததாக இருக்குமா என்ன !
Delete