Monday, November 19, 2012

அறுசுவை - பெங்களுரு சஞ்சீவனம் உணவகம்

இதுவரை  நான் இந்த அறுசுவை பகுதியில் எழுதிய உணவகம் எல்லாம்
 ஏதோ ஒரு வகையில் சில குறைகள் இருந்தது, ஆனால் எந்த குறையும்
 இல்லாமல் ஒரு உணவகம் பார்த்தேன் என்றால் அது இந்த சஞ்சீவனம்தான். பொதுவாகவே எந்த ஒரு உணவகம் சென்றாலும் அதை பணம், சர்வீஸ், பார்கிங் மற்றும் உள் அமைப்பு, உணவின் சுவை என்று மட்டுமே பிரிப்பேன், அதில் எந்த ஒரு உணவகமும் ஏதாவது ஒன்றில் கோட்டை விட்டுவிடுவார்கள். ஆனால், இந்த சஞ்சீவனம் உணவகத்தில் எந்த ஒரு குறையையும் பார்க்க முடியவில்லை, மனதுக்கும் இதம்.

இவர்களை பற்றி மேலும் தெரிந்துகொள்ள இங்கே சொடுக்கவும்...சஞ்சீவனம்



முதன் முதலாக "அவள் விகடனில்" இவர்களின் சென்னை - முகப்பேரில் உள்ள உணவகத்தை பற்றியும், உணவை பற்றியும் வந்ததை படித்தேன், அப்போது பெங்களுருவில் இது போல் இல்லையே என்ற ஏக்கம் இருந்தது, அப்போது ஒரு நாள் இது பெங்களுருவிலும் உள்ளது என்று அறிந்தபோது கண்டிப்பாக போகவேண்டும் என்று நினைத்தேன்.....அதை சென்ற ஞாயிறு அன்று நிறைவேற்றியும் விட்டேன் ! பார்கிங் செய்ய இந்த உணவகத்தின் பின்னே இடம் இருக்கிறது, இல்லையென்றால் இதன் அருகே உள்ள தெருவில் இடம் இருக்கிறது. உள்ளே நுழைந்தவுடன் ஒரு பெரிய மரத்தின் கீழே கண்ணாடியில் ஆன உண்ணும் பகுதி....அதுவும் நாங்கள் சென்று இருந்தபோது மழை பெய்ததால் அருமையாக இருந்தது. இவர்கள் மதிய உணவாக ராஜகீயம் என்னும் ஒரு பாக்கேஜ் உணவு ஒன்று கொடுகிறார்கள், இரவினில் பல பல உணவுகள் கிடைக்கின்றன.....எல்லாமே இயற்கை உணவுகள் என்பதுதான் இங்கு ஸ்பெஷல் !




இவர்கள் வழங்கும் உணவுகளை ஒரு விதமான வரிசையில் சாப்பிட வேண்டும், அதுதான் குழப்புகிறது !! நாம் எல்லாம் நமது இஷ்டப்படி போட்டு சாப்பிடவேண்டும் என்று நினைப்போம், ஆனால் இவர்கள் நமது உடம்பை ஒவ்வொரு விதமான சுவைக்கு பழக்க வேண்டும் அதுவும் மெதுவாக என்று சொல்லி ஒவ்வொரு முறையும் நமக்கு சொல்லி கொடுப்பது எல்லோருக்கும் பிடிக்குமா என்று தெரியவில்லை....ஆனால் தெரியாத விஷயம் தெரிந்து கொள்ள வேண்டும் !! கீழே உள்ள படத்தினை பார்த்தால் இந்த ராஜகீயம் என்பது என்ன என்று தெரிந்து கொள்ளலாம்.



முதலில் நேந்திரங்கா வாழைப்பழம் துண்டு ஒன்றை சாப்பிட வைக்கிறார்கள், அதை உண்டு முடித்தவுடன் ஐந்து வகையான சுவைகளில் பானங்கள் உங்களது கண்ணுக்கும், நாவிற்கும் விருந்தாக....பேரிச்சம்பழம், முந்திரி, காய்கறி சூப், மோர் மற்றும் அரிசி தண்ணீர் என்று சாப்பிட வேண்டும். பின்னர் நீங்கள் பச்சை காய்கறி, புட்டு வகைகளை சாப்பிட வேண்டும்.....கேட்டால் என்னவோ போல தோன்றும், நம்புங்கள், அபாரமான சுவை. தினமும் கபாப் என்று சாப்பிடும் நமக்கும், இது போல எல்லாம் காய்கறிகளில் செய்ய முடியுமா என்று தோன்றும் அளவுக்கு அவ்வளவு சுவை.





பின்னர் அரிசி, சப்பாத்தி, கீரை, பொரியல், அவியல், டால், ரசம், மோர் என்று உணவுகள். நீங்கள் எவ்வளவு சாபிட்டாலும்  வயிறும், உடம்பும் போதும் என்று எண்ணாதபடிக்கு சீக்கிரம் செரிக்கும் உணவு. முடிவில் அவர்கள் கொடுக்கும் பாயசம்......ஆகா ஆகா அருமையான சுவை. இந்த பதிவினில் இதை பற்றி மட்டுமே இரண்டு பக்கங்கள் எழுதும் அளவு சுவை. நீங்கள் சாப்பாடு பிடிக்கவில்லை என்று சொன்னாலும்...இந்த பாயசத்தின் சுவை அபாரம் என்பீர்கள் என்பதற்கு நான் காரன்டீ !! முடிவில் அவர்கள் கொடுக்கும் தேன் சாப்பிட மறக்காதீர்கள்...நாங்கள் அதன் சுவையில் மயங்கி இரண்டு பாட்டில் வாங்கி வந்தோம்.


எப்போதும் நாம் வெளியில் சென்று சாப்பிட வேண்டுமென்றால் வயிறு புடைக்க நான்-வெஜ் சாப்பிடுவோம், ஆனால் இங்கு நீங்கள் வயிறு புடைக்க சாபிட்டாலும் களைப்படைவதில்லை. முடிவில் ஒரு நல்ல ஆரோக்கியமான உணவு உண்ட திருப்தி உண்டாவதை நீங்கள் உணரலாம். கண்டிப்பாக ஒரு முறை செல்ல வேண்டிய, எந்த குறையும் இல்லாத ஒரு உணவகம். ராஜகீயம் உணவு வேண்டாமென்றால், மாலையில் செல்லுங்கள் நிறைய நிறைய வெரைட்டி கிடைக்கிறது, கீழே இருக்கும் மெனு கார்டு பார்த்தால் தெரிந்து கொள்ளலாம்.



பஞ்ச் லைன் :
சுவை               -      அருமையான, ஆரோக்கியமான உணவு. புல் சாப்பாடு வேண்டாம் என்பவர்கள் மாலையில் சென்றால் நிறைய வெரைட்டி கிடைகிறது.
அமைப்பு         -       மரத்தினடியில் ஒரு கிளாஸ் கூடாரத்தில் சாப்பாடு...மழை பெய்யும்போது இன்னும் அருமையாக இருக்கிறது.
பணம்              -      ராஜகீயம் என்னும் உணவு 280 ரூபாய் வரை, மற்ற உணவு வகைகள் விலையை கீழே உள்ள மெனு கார்டில் நீங்கள் பார்க்கலாம். இருவருக்கு 800 ரூபாய் வரை ஆகிறது.
சர்வீஸ்           -       ரொம்பவே சூப்பர் சர்வீஸ் !

அட்ரஸ் :

No 50, 2nd Block, 100 Ft Road, Koramangala, Opposite Kendriya Sadan  Bangalore, Karnataka 560034
080 2563 4430
கோரமங்களா ரோடு ஹோசூர் ரோடுடன் சேரும் இடத்தில் உள்ளது.




மெனு கார்டு :










6 comments:

  1. குறித்து வைத்துக் கொண்டேன்...

    தகவல்களுக்கு நன்றி...

    ReplyDelete
    Replies
    1. குறித்து கொண்டால் மட்டும் போதாது....உண்ணவும் உங்களை அழைக்கிறேன் ! நன்றி தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் !

      Delete
  2. அறுசுவை பகிர்வுக்கு பாராட்டுக்கள்..

    ReplyDelete
    Replies
    1. நன்றி !! ஒரு சுவையான, ஆரோக்கியமான உணவு உண்ண தயாராகுங்கள் !

      Delete
  3. Replies
    1. நன்றி ஜெயதேவ் தாஸ் !

      Delete