Tuesday, November 20, 2012

உலக திருவிழா - தாய்லாந்தின் குரங்கு திருவிழா

 தாய்லாந்திற்கும் நம் இந்தியாவிற்கும் கலாசார அளவில் நிறைய ஒற்றுமை உண்டு. நாம் மதிக்கும் ராமாயணத்தைதான் அவர்களும் மதிக்கிறார்கள், ஆனால் பெயர்கள்தான் வேறு ! அங்கு நடக்கும் "Monkey Buffet Festival" என்னும் குரங்கு உணவு திருவிழாவில் ராமாயண பாத்திரமான அனுமனை அவர்கள் வருடந்தோறும் மரியாதை செலுத்துகிறார்கள். இந்த ஆச்சர்யபடுத்தும் திருவிழாவில் இன்று பல நாடுகளில் இருந்தெல்லாம் மக்கள் வந்து பங்கு பெறுகிறார்கள் !! ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதத்தில் கடைசி ஞாயிறு அன்று இந்த திருவிழா நடைபெறும், இந்த 2012 வருடம் 25, நவம்பர் அன்று இந்த விழா நடைபெறுகிறது.






லோப்புரி என்னும் ஊர் தாய்லாந்தின் வடக்கில் இருக்கிறது. ராமாயண கால கட்டத்திற்கு பிறகு Khmer ruin of Sam Prang Yod and the nearby shrine of San Pra Kan என்னும் இரண்டு ஊர்களை மட்டும் இன்றளவிலும் குரங்கு அரசரே ஆளுவதாக மக்களின் நம்பிக்கை. அதனால், மக்கள் இந்த ஊரில் இருக்கும் குரங்குகளை தெய்வமாக மதிகின்றனர், அதற்க்கு உணவு கொடுத்தால் பாவம் எல்லாம் தீரும் என்பது அவர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. அதனால் வருடத்தில் ஒரு நாள் மட்டும் குரங்குகளுக்காக மக்கள் உணவினை இந்த கோவிலில் வைக்க, எல்லா குரங்குகளும் உணவினை எடுத்து உண்டு அவர்களின் பாவத்தை போக்குகின்றன என்பது இவர்களின் நம்பிக்கை.

அங்கு எப்படி செல்ல வேண்டும் என்பதை தெரிந்துகொள்ள இங்கே சொடுக்கவும்....லோப்புரி குரங்கு கோவில்









என்னதான் குரங்குகள் இருப்பதை பிடுங்கி தின்பதும், பொருட்களை போட்டு உடைப்பதும், பயமுறுத்துவதாக இருந்தாலும் மக்கள் இதை மதிக்கின்றனர். எப்போது இந்த கோவில் கட்டப்பட்டது என்று எந்த தகவலும் இல்லை, ஆனால் தாய்லாந்து அரசாங்கம் இதன் புகழை கண்டு 2007ம் ஆண்டு முதல் இதை ஒரு பெரிய விழாவாக கொண்டாடுகிறது.


நமது நாட்டிலும் கல்டாஜி என்னும் ஊரில் இது போன்ற குரங்கு கோவில் ஒன்று உண்டு, ஆனால் பாவம் குரங்குகள்.....இங்கு அதற்க்கு அவ்வளவு மரியாதை இல்லை !! வாருங்கள்...நாம் லோப்புரிக்கு ஒரு நடை சென்று வருவோம்.....அட சாப்பிட இல்லை, பார்க்கத்தான் :-) !!

6 comments:

  1. அவனவன் தாய்லாந்துனா வேற என்னமோ நினைக்கிறான்..நீங்க என்னடானா....

    ReplyDelete
    Replies
    1. அதான்....அதேதான்......நானும் அதை பற்றி எழுதாமல் இது போலவும் உள்ளது என்று உங்களை நினைக்க வைத்திருக்கிறேன். நன்றி ஜீவா !
      அதுசரி...நீங்க தாய்லாந்து போகலையா ?

      Delete
  2. நம்ம சாருவும் சமீபத்தில தாய்லாந்து போய் வந்தது, ஆனால் அது பொண்ணுகளுடன் தான் படம் பிடித்துள்ளது.
    இப்படி எதுவும் அது பார்த்ததாக இது வரை எழுதவில்லை.

    தாய்லாந்தில் ராமாயணம் கொண்டாடப்படுகிறது. அது கங்கை முதல் கடாரம் வரை இந்து இராச்சியம் இருந்ததன் அடையாளம்.
    தகவலுக்கும் படங்களுக்கும் நன்றி!

    ReplyDelete
    Replies
    1. நன்றி மதுரன்...தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் !

      Delete
  3. namadhu arumai namakku theirivadhillai. mattravargalukke therigiradhu.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி நண்பரே !

      Delete