Sunday, November 25, 2012

உலக திருவிழா - நியூயார்க் தேங்க்ஸ் கிவிங் டே பரேடு

 அமெரிக்காவில் நடக்கும் ஒரு பரேடு ஒன்று உலகம் முழுவதும் பிரபலம், அதன் பெயர் தெரியாமல் உங்களுக்கு இருக்கலாம், ஆனால் அதை நீங்கள் பார்த்து இருப்பீர்கள்.....பெரிய பெரிய பலூன் பொம்மைகளை பல பல உருவங்களில் வீதிகளில் கொண்டு செல்வார்கள், அதுதான் நியூயார்க்ன் தேங்க்ஸ் கிவிங் பரேடு. ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் நான்காம் வியாழக்கிழமை இது கொண்டாடபடுகிறது....இந்த 2012 வருடம் 22 நவம்பர் அன்று இது கொண்டாடபடுகிறது. அதை பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் நீங்கள் அது யாரால் கொண்டாடபடுகிறது, எப்போது ஆரம்பித்தது, எதனால் இந்த பெயர், யார் ஆரம்பித்தது என்றெல்லாம் தெரிந்துக்கொள்ள வேண்டும்.....எல்லாம் வெகு சுவாரசியமான தகவல்கள் !
அமெரிக்காவில் முக்கிய பயிர்கள் என்பது சோளமும், சோயா பீன்ஸ்தான். இதை பொதுவாக அக்டோபர், நவம்பர் மாதங்களில்தான் அறுவடை செய்வார்கள். (இந்தியாவில் அரிசி முக்கிய பயிர், இதை ஜனவரியில் அறுவடை செய்வார்கள்) இப்படி அறுவடை செய்யும்போது, நாம் கடவுளுக்கு நன்றி செலுத்துவது போல (பொங்கல் பண்டிகை), அங்கும் இந்த வழக்கம் இருந்தது. முதன் முதலாக 1621இல் இன்றைய மசசுட்டேஸ் (Massachusetts) அன்றைய ப்ல்ய்மோத் என்னும் இடத்தில் இந்த "கடவுளுக்கு நன்றி செலுத்துதல்" - தேங்க்ஸ் கிவிங் டே கொண்டாடினர். இப்படி கொண்டாடப்பட்ட நாள் அமெரிக்காவில் வெவ்வேறு மாகணங்களில் வெவ்வேறு தினங்களில் கொண்டாடப்பட்டது, ஏனென்றால் அறுவடை காலம் அமெரிக்கா முழுவதும் வேறுபட்டது.அமெரிக்காவின் வெவ்வேறு பகுதிகளில் இதை வெவ்வேறு பெயர் கொண்டு இது கொண்டாடப்பட்டது, அப்போது அக்டோபர் 3, 1789ம்  ஆண்டு ஜனாதிபதி ஜார்ஜ் வாஷின்டன் அவர்கள் இதை "தேங்க்ஸ் கிவிங் டே" என்று பெயரிட்டு கொண்டாடவேண்டுமென்று முதன் முதலாக உத்தரவிட்டார். இதில் பெயர்தான் சூட்டபட்டதே தவிர தேதிகள் எதுவும் நிர்ணயிக்கபடவில்லை.  அப்போது 1861 ~ 1865 வரை அமெரிக்காவின் சிவில் வார் காலகட்டத்தில், அப்போது பத்திரிக்கையில் சாரா ஜோசப் ஹேல்
அவர்கள் எழுதிய கட்டுரையில் இருந்த அமெரிக்க வேறுபாடுகள் பற்றிய
ஒன்றில் குறிப்பிடப்பட்டு இருந்த   இந்த ஒற்றுமை இன்மையை, ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன் கண்டு, தேச மக்களிடையே ஒற்றுமை நிலவ இந்த நாள் நவம்பர் கடைசி வியாழன் அன்று கொண்டாடப்படும் என்று 1863ம் ஆண்டு அறிவித்தார்.  ஒரு முறை 1939ம் வருடம் அந்த நவம்பர் மாதத்தில் ஐந்து வியாழக்கிழமை வந்தது, அதுவரை மக்கள் நான்காவது வியாழக்கிழமையில் இந்த "தேங்க்ஸ் கிவிங் டே" கொண்டாடினர், அந்த ஆண்டு எல்லோரிடமும் குழப்பம் நீடித்தது, இதை கண்ட அன்றைய ஜனாதிபதி ரூஸ்வெல்ட் அன்றிலிருந்து நவம்பர் நான்காவது வியாழன் அன்று இந்த நாள் கொண்டாடப்படும் என்று அறிவித்தார்.

1920இல் மேசி டிபார்ட்மென்ட் ஸ்டோர் என்னும் சூப்பர் மார்க்கெட்டில் பணிபுரியும் இங்கிலாந்தில் இருந்து குடிபெயர்ந்து
அமெரிக்காவில் வாழும்  மக்கள், அந்த வருட தேங்க்ஸ் கிவிங் நாளை அவர்கள் நாட்டில் கொண்டாடபடுவது போல கொண்டாடவேண்டும் என்று முடிவெடுத்தனர். முடிவில் 1924ம் ஆண்டு ஹர்லம் 145 தெருவில் இருந்து 34வது தெருவில் இருந்த மேசி ஸ்டோர் வரை ஒரு மிக பெரிய, வண்ணமயமான ஊர்வலம் ஒன்று நடைபெற்றது. அதுதான் இந்த உலக திருவிழாவின் ஆரம்பம் எனலாம்.


இன்று ஒவ்வொரு ஆண்டும் மக்களிடையே பிரபலமான ஒன்றை பலூன் வடிவில் அந்த பரேடில் கொண்டு வருவர். இதை முன்னோடியாக கொண்டு, இன்று எல்லா கம்பனிகளும் ஒவ்வொரு ஊரில் இது போல பரேடு நடத்துகின்றனர்.....ஆனால் மக்களின் ஆதரவு என்றும் இதற்குதான் இருக்கிறது. ம்ம்ம்ம்ம்ம்ம்....நமது பொங்கல் விழாக்களிலும் இதை போல் செய்தால் என்ன ?

4 comments:

 1. அறியாத அரிய தகவல்கள்
  கணொளியும் விளக்கமும் படங்களும்
  இந்த நாள் குறித்து தெளிவாக புரிந்து கொள்ள முடிந்தது பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. நன்றி ரமணி சார் !! நமது ஊரில் தைபூசம் அன்று நடக்கும் ஒன்றுதான் இது போல பரேடு ! ஆனாலும், நன்றாக இருக்கும் !

   Delete
 2. வியப்பான பல தகவல்கள்...

  நன்றிங்க...

  ReplyDelete
  Replies
  1. நன்றி தனபாலன் சார் !! இந்த பரேடை நீங்கள் நேரில் பார்த்தால் வியப்பின் உச்சத்திற்கே போவீர்கள் !

   Delete