Monday, November 5, 2012

ஆச்சி நாடக சபா - தி பேன்டம் ஆப் தி ஒபேரா ஷோ

 உலகில் சில கதைகள் காலத்தை கடந்தும் நினைவில் நிற்கும், அது வேறு வேறு வடிவில் உருமாறும், ஆனால் அது எந்த வடிவம் எடுத்தாலும் உங்களுக்கு பிடிக்கும். உதாரணமாக ஸ்நொவைட்டும் ஏழு குள்ளர்களும், சின்ட்ரெல்லா கதைகள். அந்த வரிசையில் இன்றும் உலகின் நாடக
அரங்குகளில் மக்கள் கூட்டம் அலைமோதும், இன்றும் நாடக உலகில் நம்பர் 1 என்று எல்லாராலும் புகழப்படும் ஒரு நாடகம்தான் "தி பேன்டம் ஆப் தி ஒபேரா (The Phantom of the Opera)". நீங்கள் ஒரு நிஜமான ஷோவில் என்னவெல்லாம் செய்ய முடியும் என்று அறிந்துகொள்ள ஆசைபட்டீர்கள் என்றால் இதை சென்று பாருங்கள்.
இதை தயாரித்தும், இன்று இப்படி ஒரு நாடகமாக்கம் செய்ததும் ஆன்ட்ரூ லாயிட் வெப்பர் (Andrew Lloyd Webber), நமது A.R.ரகுமானுடன் இணைந்து பாம்பே ட்ரீம்ஸ் செய்தவர்தான். இந்த படைப்பில் அவரது அணைத்து திறமையும் வெளிப்படும் என்றால் அது மிகையாகது. கண்டிப்பாக நீங்கள் வாழ்வில் ஒரு முறை பார்க்க வேண்டிய ஒன்று !!


1909-இல் ஒரு நாவலாசிரியரான கசடன் லிராக்ஸ் என்பவர் எழுதிய நாவல்தான் இந்த "தி பேன்டம் ஆப் தி ஒபேரா (The Phantom of the Opera)". இதுவரை மூன்று முறை இந்த நாவல் அரங்கேற்றம் செய்யபட்டாலும், கடந்த 2004-இல் வெப்பர் அரங்கேற்றியபோது அது முழுமையாக இருந்தது எனலாம். கதை என்று பார்த்தால்....எரிக் என்னும் ஒரு இசை கலைஞன் ஒல்லியாக, முகத்தின் ஒரு பாதி சிதிலமடைந்து இருப்பான். அவனை பார்ப்பவர் எல்லாம் கிண்டல் செய்வதால் அவன் பாரிஸில் உள்ள ஒபேரா ஹவுஸ் என்னும் நாடக அரங்கத்தில் சென்று மறைந்து வாழ்ந்து இறந்து விடுகிறான். அப்போது அங்கு வரும் கிறிஸ்டீன் என்னும் அழகான பெண் பாடுவதற்கு ஆசைபடுகிறாள், ஆனால் அவளுக்கு வசதி இல்லை. இதை பார்த்த எரிக் அவளுக்கு மட்டும் தெரிந்து இசையை கற்று கொடுக்கிறான். அவள் மீது அவனுக்கு காதல் பிறக்கிறது, அப்போது கிறிஸ்டீனின் முன்னால் காதலன் விகன்ட் வருகிறான், அதை பார்த்த எரிக் கிறிஸ்டீனை கடத்தி அவளுடன் திருமணம் செய்ய முயலுகிறான், முடிவில் அவன் ஜெயித்தானா இல்லையா என்பதே கதை !!

நல்ல உயர்தரமான செட்டிங், உடைகள், கண்ணை கவரும் வகையில் நடனம், மனதை மயக்கும் இசை, உயர்ந்த தொழில் நுட்பம் என்று பக்கவாக தயாரானது இந்த நாடகம், இன்றும் 25 வருடங்களாக உலகின் பல நாடுகளில் இது அரங்கேற்றபடுகிறது. நியூயார்க்ன் ப்ரோட்வே ம்யுசிகல் என்னும் இடத்தில (உலக நாடக ரசிகர்களின் மதிக்கத்தக்க, உயரிய ஒரு நாடக சபா எனலாம் !!) இன்றும் நடக்கிறது !!

4 comments:

 1. காணொளிகள் கண்டு ரசித்தேன்
  இதுவரை அறியாதது
  பதிவாக்கித் தந்தமைக்கு மனமார்ந்த நன்றி

  ReplyDelete
  Replies
  1. நன்றி ரமணி சார்....உங்களது தொடர் உற்சாகமான வார்த்தைகள் என்னை மேலும் எழுத தூண்டுகிறது. இந்த நாடகத்தை போல வேறு எதுவும் உங்களின் மனதை தொடாது என்பது நிச்சயம்.

   Delete
 2. Replies
  1. நன்றி தனபாலன் சார்....இந்த நாடகம் இன்றும் எல்லா நாடுகளிலும் சக்கை போடு போடுகிறது. இதை பார்க்கும்போது எல்லாம் சிவாஜி நடித்த தெய்வ மகன் திரைப்படம் மனதில் வரும். தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் மிக்க நன்றி.

   Delete