Tuesday, November 6, 2012

அறுசுவை - பெங்களுரு "அடுப்படி செட்டிநாடு உணவகம்"

நல்ல கார சாரமான உணவு உண்ண வேண்டும் என்று தோன்றியது, தேடியதில் எல்லோரும் சொன்னது இந்த "அடுப்படி செட்டிநாடு உணவகம்" !! இந்த பெயரை கேட்கும்போதே வித்யாசமாக இருகிறதே என்று தோன்றும், அதை உள் அமைப்பிலும், உணவிலும் கூட காட்டி இருக்கின்றனர் என்றுதான் சொல்ல வேண்டும். உள்ளே நுழைந்தவுடன் இதமான ஏசி, வீடு போன்ற அமைப்பு, செட்டிநாட்டு அமைப்பு என்று உங்களை கவரும் !

காலை 11 மணியில் இருந்து இரவு 11 மணி வரை இந்த உணவகம் திறந்திருக்கும் என்று சொன்னாலும், நீங்கள் மாலை 6 மணிக்கு மேல் சென்றால்தான் மெனுவில் உள்ள எல்லா உணவும் கிடைக்கும். நாங்கள் மதியம் சென்று நாக்கு ஊரும் மெனுவை படித்துவிட்டு கேட்டால், மதியம் வெறும் பிரியாணி, ஆப்பம், சாப்பாடு, பரோட்டா மட்டும்தான் கிடைக்கும் என்றனர் ! ஆகவே நாங்கள் ஸ்பெஷல் நான்-வெஜ் மீல்ஸ், மற்றும் முட்டை ஆப்பம் - அடுப்படி ஸ்பெஷல் சிக்கன் கிரேவி ஆர்டர் செய்தோம், அதற்க்கு முன் சாப்பிட என்று நெத்திலி மீன் ப்ரை, உருளை கருவாட்டு வறுவல் (கருவாடு போல இருக்கும்.....கருவாடு இதில் கிடையாது) உடன் சிக்கன் சூப் ஆர்டர் செய்தோம்.


உணவு வரும் முன் அங்கும் இங்கும் சென்று சுற்றி பார்த்தோம்....எங்கும் எதிலும் செட்டிநாடு !! அங்கு இருக்கும் சிறிய கடையில் செட்டிநாட்டு புடவைகள், முறம், கைப்பை என்று இருந்தது, விலைதான் ஜாஸ்தி. ரசனையோடு அமைக்கப்பட்ட இடம், அங்கு இருந்த உணவகத்தின் முதலாளி (பெயர் மறந்துவிட்டது) புதுக்கோட்டைகாரர் ஆகையால் நன்கு கவனித்தார். எனக்கு கரண்டி ஆம்ப்லேட் வேண்டும் என்று கேட்டு, அது இல்லை என்றவுடன் வருத்தம் தெரிவித்ததும், சூப் சூடாக இல்லை என்றவுடன் பக்கத்தில் இருந்து கவனித்ததும் அந்த உணவகத்தினை விரும்ப வைத்தது.



முடிவில் எங்களின் உணவு வந்தவுடன், நல்ல பசியில் வெளுத்து கட்ட தொடங்கினோம் ! அவர்கள் கொண்டு வந்த நான்-வெஜ் சாப்பாட்டில் இருந்து கிளம்பிய மூக்கை துளைக்கும் மணமே பசியை இன்னும் தூண்டியது. நன்கு பதமாக செய்யப்பட்ட முட்டை ஆப்பமும், அடுப்படி சிக்கன் கிரேவியும் நல்ல செலக்சன் என்று தோன்றியது.



முடிவில் அவர்களின் செட்டிநாட்டு ஸ்வீட் ஏதாவது சாப்பிடலாம் என்று தேடியபோது அவர்களின் ஸ்பெஷல் என்னும் ஆடி கும்மாயம் கேட்டோம். இது வேக வைத்த அரிசியில், உளுந்தும், சக்கரை பாகும் கலந்தது. வாயில் வைத்தவுடன், இங்கு எல்லா உணவும் நன்றாக இருக்கும் என்பதற்க்கு அந்த ஒரு ஸ்வீட் போதும் என்று தோன்றியது. அவ்வளவு ருசி.... இன்னமும் நாவிலும், நினைவிலும் நிற்கும் ஒன்று !

பஞ்ச் லைன் :
சுவை               -      நல்ல செட்டிநாட்டு மெனு !! நாம் எங்கும் கேள்விபடாத 
செட்டிநாட்டு உணவும் கிடைகிறது இங்கே.

அமைப்பு         -       சிறிய இடம், வாலெட் கார் நிறுத்தும் வசதி, குளிர்ச்சியான உள் அமைப்பு !!

பணம்              -      விலையை பார்த்தால் உங்களுக்கு அதிகம் என்றுதான் தோன்றும்....ஆனால் சுவையையும், அனுபவத்தையும் பார்த்தால் கொடுக்கலாம் எனலாம் ! கீழே உங்களுக்காக மெனுவின் சில பக்கங்கள் உள்ளது.

சர்வீஸ்           -       சூப்பர் ! நாம் முகம் சுளித்தால் உடனே என்னவென்று கேட்டு அதை சரி செய்கிறார்கள்.


அடுப்படி செட்டிநாடு உணவகம்,
201, டபுள் ரோடு,
இந்திரா நகர்,
பெங்களுரு
போன் : 080 - 25251234





மெனு கார்டு :







1 comment:

  1. "அடுப்படி...." உணவுகள் நன்றாக இருக்கின்றன.

    ReplyDelete