Wednesday, November 7, 2012

Family தோசை !!

ரொம்ப நாளா ஒரு ஆசை, எப்படியாவது ஒரு பேமிலி தோசை ஒன்று சாப்பிட வேண்டுமென்று.....சிறு வயதில் மதுரை பெரியார் நிலைய நுழைவாயிலின் அருகே இருந்த அசோக் பவனில் ஒரு நாள் அம்மாவும் நானும் சென்றிருந்தோம், திடீரென்று அம்மா பேமிலி தோசை ஒன்று ஆர்டர் செய்தார், நாங்கள் இருந்ததோ ரெண்டு பேர், தோசையோ ஆறடி நீளம்....திணற திணற சாப்பிட்டோம் !! எனது வாழ்வில் மறக்க முடியாத தருணங்களில் அதுவும் ஒன்று....ஆனால் இன்று எந்த கடையில் இந்த ஆறடி நீள பேமிலி தோசை கிடைக்கிறது ?? தேடி தேடி சலித்ததுதான் மிச்சம் ! இந்த தோசை என்பது நமது பகிர்ந்து உண்ணும் பழக்கத்திற்கு குழி தோண்டி விட்டது என்பது நமக்கு தெரியுமா ?




முறுகலாக, பொன்னிறத்தில், அழகாக மடித்து, சட்னி சாம்பாருடன் கொடுக்கும் தோசைக்கு குழந்தைகள் மத்தியில் எப்போதுமே ஒரு தனி ஆர்வம். தோசை வந்தவுடன் அவர்கள் முகத்தில் தெரியும் சந்தோசம் அலாதியானது, ஒரு சிறு தோசைக்கே இப்படியென்றால், ஆறடி நீளம் இருக்கும் இந்த பேமிலி தோசையை பார்த்தால் கண்கள் எப்படி விரியும் என்று கற்பனை செய்து பாருங்கள். ஆனால், இந்த தலைமுறைக்கு இந்த சந்தோஷம் கிடைப்பதில்லை என்பது உங்களுக்கு தெரிகிறதா ? கூட்டு குடும்ப முறையிலிருந்து மனிதன் பிரிந்து வந்து மனைவி, மக்களுடன் வாழ்ந்தாலும் தனியனாக உணரும் நமக்கு இன்று பகிர்ந்து உண்ணுவது என்பது அரிதாகிவிட்டது. பாட்டியிடம் கதை கேட்டு வளர்வது, தாத்தாவிடம் கேள்வி கேட்பது, அண்ணன் தங்கையிடம் பகிர்வது என்றெல்லாம் இந்த தலைமுறையில் இல்லை, அதனால்தான் இந்த பகிர்ந்து உண்ணும் பேமிலி தோசை மறைந்து போனதோ ?




நினைத்து பாருங்கள்....இந்த தோசையை மட்டும் சாப்பிடும்போது நாம் என்ன வகையான பாடங்கள் எல்லாம் கற்று கொள்கிறோம் என்று...
  • முழு தோசையும் எனக்குதான் என்று தோன்றும், ஆனால் சாப்பிட ஆரம்பித்த பின்புதான் வயிற்றின் அளவு தெரியும்.
  • எல்லோரும் பகிர்ந்து உண்ண வேண்டும்
  • எவ்வளவு பெரிய காரியமாக இருந்தாலும் அதை ஒரு சிறிய ஆரம்பம்  கொண்டு சாதிக்கலாம் !
  • ஆசையே அழிவிற்கு காரணம் - வயிறு முட்ட சாப்பிட்டு விட்டு சிரமப்படும்போது தோன்றும் இது !
  • எந்த ஒரு விஷயமும் வித்யாசமாக இருந்தால் எல்லோரும் விரும்புவார்கள்
  • எல்லோருக்கும் வெவ்வேறு சுவை பிடித்தாலும் (ஆனியன் தோசை, ரவா தோசை), ஒன்று கூடி ஒரே சுவை தின்னும்போது மகிழ்ச்சி பொங்கும்.
இப்படி நான் சிறு வயதில் இந்த தோசையை சாப்பிட்டுவிட்டு கற்றுகொண்டது இது. நீங்கள் இதற்க்கு மேலும் கற்றுகொண்டிருக்கலாம் !
என் அம்மா நான் சிறு வயதில் இருந்தபோது, சட்டியில் சாதம் கம்மியாக இருக்கும், ஆனால் அன்றுதான் எனக்கு நிறைய சாப்பிட தோன்றும்.... அப்போது சாதம் கம்மியாக இருக்கிறதே என்று கேட்டால் "அம்மாவுக்கு, இன்னைக்கு வயிறு சரி இல்லைப்பா, நீ சாப்பிடு" என்று பசி இருந்தாலும் மறைப்பார்கள். இது போல மற்றவர்கள் பசி அறிந்து விட்டு கொடுத்து போவது என்பது இங்கு இந்த தோசையின் மூலம் சாத்தியமானது, இப்போது இல்லை !





இன்று நமது பாஸ்ட் புட் பழக்கங்களால் எவ்வளவு இழக்கின்றோம் என்பது உங்களால் உணர முடிகிறதா ? நமது வாழ்வை சில பொழுதுகள் மகிழ்ச்சியில் ஆழ்த்திய இந்த பாமிலி தோசை நம்மிடம் இருந்து பறிக்கப்பட்டதும், அது எதனால் என்றும் உங்களுக்கு தெரிகிறதா ? இன்று தனி தீவுகளாய், "எனக்கு" என்று வாழும் நமது வாழ்க்கை மனதில் விரிகிறதா ? ஒவ்வொருவரும் எனக்கு இதுதான் பிடிக்கும் என்று நினைக்க ஆரம்பித்துவிட்டது தெரிகிறதா ? இந்த ஒரு தோசையை கொண்டு நமது வாழ்வில் விட்டு கொடுக்கும் பழக்கம் இல்லாமல் போய் விட்டது என்று சொல்ல முடியாது....ஆனால் அது குறைந்துகொண்டு வருகிறது என்பதை நாம் மறுக்க முடியாது இல்லையா ?


இதுவரை நான் சொன்னது புரியவில்லை என்றால், மிகவும் எளிதாக விளக்குகிறேன்.....ஒரு பொருளுக்கு எப்போதுமே சந்தை இருந்தால்தான் விற்கும், அன்று குடும்பமாக செல்பவர்கள் எல்லாம் சேர்ந்து உண்ண வேண்டும், பகிர்ந்து உண்ண வேண்டும் என்று நினைத்து அதை கேட்டு வாங்கினார்கள், அதனால் இந்த பாமிலி தோசை என்ற ஒன்றும் இருந்தது. எப்போது ஒரு பொருளுக்கு கேட்பார் இல்லையோ, அதற்க்கு சந்தை இல்லை என்றே அர்த்தம்.....இது ஒரு பாமிலி தோசையின் மரணம் மட்டும் இல்லை.....அது சொல்லும் செய்திகள் நிறைய ! என்னதான் சொல்லுங்கள்.....இந்த தோசையை பார்த்தால் மனதில் ஒரு சந்தோசம் வருகிறது....உங்களுக்கு தெரியுமா இந்த பேமிலி தோசை உங்கள் ஊரில் எங்கே கிடைக்கிறது என்று ?


12 comments:

  1. சென்னை விஜிபி கோல்டன் பீச் லே இந்த ஃபேமிலி தோசை கிடைக்குதே!

    ReplyDelete
    Replies
    1. ஆம் மேடம், அங்கு எட்டு அடி தோசை கிடைக்கிறது. நானும் எனது நண்பர்களும் உண்டிருக்கிறோம், ஆனால் இன்று வேறு எங்கும் கிடைக்க மாட்டேன் என்கிறதே என்பதே எனது ஆதங்கம். நன்றி !

      Delete
  2. இது ஒரு பாமிலி தோசையின் மரணம் மட்டும் இல்லை.....அது சொல்லும் செய்திகள் நிறைய...! ////

    நெஞ்சை தொட்ட வரிகள் ... அண்ணே ஒரு தோசையை நீங்கள் பார்த்த கண்ணோட்டம் எனக்கு மிகவும் ஆச்சிரியமாக உள்ளது ..

    பாமிலி தொசைக்காக இன்னைக்கே என் தேடுதல் வேட்டையை ஆரம்பிக்கிறேன் ..

    ( ஏலே.. சின்ராசு கட்ரா வண்டியே )

    ReplyDelete
    Replies
    1. சின்ராசு......தேடின தோசை கிடைத்ததா !

      Delete
  3. ஆம்.., துளசி டீச்சர் சொன்னதைப் போல கோல்டன் பீச்சில் கிடைப்பதை நான் ஒருமுறை பார்த்திருக்கிறேன். ஆனால் இந்தத் தோசையை வைத்துக் கூட இவ்வளவு சிந்தனைகளை ஓடவிட முடியும் என்று நினைத்தும் பார்த்ததில்லை. உங்களின் வித்தியாசமான பார்வை அருமை. மிக ரசித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி திரு. பால கணேஷ் அவர்களே ! தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் நன்றிகள் பல !

      Delete
  4. பல்வேறு சிந்தனைகளுடன் பகிர்வு.

    ReplyDelete
  5. arumai......uniqual point of view...still superb dosai also...

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பரே ! தோசை திகட்டாமல் இருந்ததா ?

      Delete
  6. பெங்களூர், கோரமங்களா..கிருஷ்ணா கஃபே போயிருக்கீங்களா.. 4/5 அடி ஃபேமிலி தோசை அங்கு கிடைக்கும்.. சாப்பாடு அருமையாக இருக்கும்.. Its truly unlimited..even Papads, Vada they serve unlimitedly for 140 Rs lunch..

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி ராகவ் !! நான் இதை பல மாதங்களாக தேடி கொண்டிருக்கிறேன்.... இந்த வாரமே சென்று சுவைதிடுகிறேன் ! தங்கள் தகவலுக்கும், வருகைக்கும் நன்றி !

      Delete