Friday, December 7, 2012

சாகச பயணம் - டெசெர்ட் சபாரி (பகுதி - 2)

சென்ற வாரம் டெசெர்ட் சபாரி (பகுதி - 1) படிதிருந்திருபீர்கள், எப்படி இருந்தது ? பாலைவனத்தில், வெறும் மணல் சூழ்ந்த பகுதியில் வேகமாக வண்டியில் செல்லும் அந்த அனுபவம் என்பது வாழ்வில் மறக்க முடியாத ஒன்று. இந்த வாரம் நாம் இன்லான்ட் சீ, பாலைவன சோலை பற்றி பார்ப்போம் ! நாங்கள் சுமார் 30 கிலோமீட்டர் வரை இப்படி பாலைவனத்தில் சென்றுகொண்டிருந்தபோது நான் கொண்டு சென்றிருந்த தண்ணீர் தீர்ந்துவிட்டது, கண்ணும் கூசியது, வெயிலினால் அனல் காற்று வீசியது. எனது வண்டியோட்டியிடம் எங்கேயாவது நிறுத்த முடியுமா என்றபோது, சற்று பொறுங்கள் நீங்களே எதிர்பார்க்க முடியாத ஒரு இடத்திற்கு கூட்டி சென்று கொண்டிருக்கிறேன் என்றார்.
அடுத்த பத்தாவது நிமிடத்தில் ஒரு அற்புதமான காட்சி என் கண் முன்னே விரிந்தது, பாலைவனத்தில் கடல் ! முன்பே சொல்லியது போல, கத்தார் என்பது கடல் சூழ்ந்த பகுதி, நாங்கள் இருந்தது அந்த கடல் முன்புதான். தூய தண்ணீர், சில்லென்ற காற்று என்று பாலைவனத்தில் ஒரு அற்புதம்தான் !! தாகத்திற்கு அவர் எனக்கு ஒரு மிரிண்டா வேறு கொடுக்க அந்த இடம் சொர்க்கம் என்றும் சொல்ல வேண்டுமா என்ன ?


சரி கடல் பார்த்தாகிவிட்டது, கால் நனைத்து விளையாடியாகி விட்டது, திரும்பலாம் என்னும்போது அந்த வண்டியோட்டி, நீங்கள் யாருமே பார்க்காத இடத்தை பார்க்க ஆசையா என்று கேட்டார். அட சென்றுதான் பார்ப்போமே என்று ஆஹா செல்லலாம் என்று சொல்ல, அங்கிருந்து சுமார் 20 கிலோமீட்டர் வரை ஒட்டி சென்று அந்த இடத்தை காண்பித்தபோது, அரேபியா எவ்வளவு அழகை தன்னிடம் வைத்திருக்கிறது என்று தோன்றியது.


சவுதி அரேபியாவின் எல்லைக்கு பயணம் செய்தோம், அங்கு செல்வது என்பது மிகவும் கடினம், வெயில் வேறு அதிகம் என்பதால் பலர் பக்கத்திலேயே இந்த கடலை பார்த்து திரும்பி விடுகின்றனர், ஆனால் சிறிது முயற்சி செய்தால் நீங்கள் ஒரு அமைதியான, அற்புதமான, குளிர்ச்சியான ஒரு இடத்தை பார்க்கலாம். இங்கு வெகு சில வெள்ளையர்கள் அமைதியாக டென்ட் போட்டு தங்கி, மீன் பிடித்து, கடலில் குளித்து ஆனந்தமாக வாழ்கையை அனுபவிக்கின்றனர் ! நாம் இப்படிபட்ட இடத்திற்கு சென்றால், ஐயோ யாரும் இல்லை முதலில் வா போகலாம் என்றுதான் நினைப்போம். கீழே உள்ள படத்தை பாருங்கள், அவ்வளவு பெரிய பாலைவனத்தில், ஒரு குடும்பம் டென்ட் போட்டு இருப்பதை. இதை ஆழ்ந்து அனுபவித்துவிட்டு, இனி ரெஸ்ட் என்று முடிவு செய்தேன். சற்று காலை நீட்டி உட்கார வேண்டும், ஏதாவது சாப்பிட வேண்டும் போல இருந்தது. நாங்கள் இதுவரை சுமார் இரண்டு மணி நேரம் இந்த பாலைவனத்தின் உள்ளே வந்து இருந்தோம், இனி திரும்பவும் செல்வது என்பதை நினைக்கும்போது அயர்ச்சியாக இருந்தது. ஆனால் எனது வண்டியோட்டி இன்னும் அரை மணி நேரத்தில் ஒரு சோலைக்கு செல்லலாம் என்றபோது மகிழ்ச்சியாக இருந்தது, அப்போதிலிருந்தே அதை நான் எதிர்பார்க்க ஆரம்பித்தேன். முடிவில் தூரத்தில் ஒரு இடம் தெரிந்தது, சிறிய கூடாரங்கள், கடல் என்று. இதைதான் நாம் பாலைவன சோலை என்று தமிழில் சொல்கிறோம் !

                                  

பொதுவாக வெள்ளிகிழமை இவர்களுக்கு விடுமுறை, அதனால் இங்கு அந்த நாட்களின் இரவுகளில் ஒரே கும்மாளமாக இருக்கும். இந்த இடத்தில் தங்கும் வசதி உண்டு என்பதால் விடிய விடிய மக்கள் பாடி ஆடி களித்திருப்பார்கள். நான் சென்றது பகல் ஆகையால் வெகு சிலரைத்தான் பார்க்க முடிந்தது. இங்கு மாலையில் பார்பிக்யு நடக்கும், பானங்கள் எல்லாம் இலவசம். கத்தாரில் ஐந்து நட்சத்திர ஹோடேலில் மட்டுமே மது கிடைக்கும் என்பது இங்கு நீங்கள் கவனிக்க வேண்டிய ஒன்று.
இந்த இடத்தில் கடல் அருகில் இருப்பதால், அதுவும் அடிக்கும் வெயிலுக்கு 
குளிர்ச்சியாக இருப்பதால்  நீந்தி விளையாடலாம். முடிவில் நிழலில் அமர்ந்து நான் சிறிது இளைப்பாறி மீண்டும் எங்களது சாகச பயணத்தை தொடர்ந்தோம். கத்தார் என்பது நிறைய சாகசங்களை கொண்ட ஒரு இடம், அதில் இதுவும் ஒன்று என்று தெளிவாக புரிந்தது ! கீழே உள்ள வீடியோ பார்த்தால் உங்களளுக்கு கத்தார் பற்றி நிறைய தெரிந்து கொள்ளலாம்.


 Labels : Qatar, Doha, adventure, desert safari, inland sea, kadalpayanangal, desert

7 comments:

 1. அருமை தெரிந்துக்கொண்டேன் நண்பரே!

  ReplyDelete
  Replies
  1. நன்றி ஆகாஷ் ! தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் நன்றிகள் பல !

   Delete
 2. நல்ல ஒரு பதிவு மிக்க நன்றி
  சுவாரஸ்யமாக உள்ளது.

  ReplyDelete
  Replies
  1. நன்றி நண்பரே ! தங்களது வருகைக்கும், கருத்திற்கும் நன்றி !

   Delete
 3. enakku migavum poraamayaga irukiradhu. heppadi oru siriya nadu ippai munneriyulladhu anal nam india ippadi pin thangiyulldhe endru.

  ReplyDelete
  Replies
  1. எனக்கும் அதே ஆதங்கம்தான் நண்பரே, அதைதான் நான் ஒவ்வொரு பதிவிலும் ஷேர் செய்கிறேன்....... நன்றி தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் !

   Delete