Thursday, December 13, 2012

மறக்க முடியா பயணம் - டார்ஜிலிங் (பாகம்-3)

சென்ற வாரம் டார்ஜிலிங் பதிவில் வார் மெமோரியல், டாய் ட்ரெயின் மற்றும் டைகர் மலை பற்றி விரிவாக பார்த்தோம்....இந்த வாரம் ஜூ,
மலை ஏறும் பயிற்சி முகாம், க்ஹூம் புத்தர் கோவில், நேபால் எல்லையில் உள்ள மார்க்கெட், மாகாளி கோவில் பற்றி பாப்போம். பெரும்பாலும் நாம் கொடைக்கானல் அல்லது ஊட்டி சென்று இருப்போம், அப்போதே இங்கு குளிர் ஜாஸ்தி என்று நினைபவர்கள் இங்கு செல்லாமல் இருப்பது நலம். எல்லா இடங்களும் பனி மூடியே இருப்பது ஒரு திகில் கிளப்பும் என்பது நிச்சயம் !! பர்பி என்னும் ஹிந்தி படத்தில் வரும் இந்த பாடல் டார்ஜீலிங்கில் எடுக்கப்பட்டது, பார்த்து ரசித்துவிட்டு   தொடரலாமே !இங்கு நிறைய புத்த மடாலயங்கள் இருந்தாலும் எல்லா பயணிகளும் செல்ல விரும்புவது இந்த Yiga Choeling Monastery எனப்படும் க்ஹும் மடாலயம். 1875இல் அமைக்கப்பட்ட இந்த மடாலயம், சுமார் 15 அடி புத்தர் சிலையை உடையது. நாம் படத்தில் பார்ப்பது போல சிவப்பு நிற உடை அணிந்த புத்த துறவிகள் இங்கு சுற்றி வருகின்றனர், இது திபெத் புத்த நெறிகளை பின்பற்றுகிறது என்கின்றனர். ஒரு அதிகாலை நேரத்தில் இங்கு சென்று புத்தரை பார்த்தல் என்பது ஒரு நல்ல அனுபவம். சுற்றிலும் மலைகள் இருக்க, அவ்வப்போது பனி உங்களை தீண்டி செல்ல என்று வாழ்வில் அனுபவிக்க வேண்டிய ஒன்று !முதன் முதலாக இந்த இமயமலையில் ஏறி சாதனை படைத்தவர்கள் என்பது 
டென்சிங் மற்றும் எட்மன்ட் ஹிலாரி . இவர்கள் இந்த சாதனையை 29 மே 1953ம் ஆண்டு நிகழ்த்தினார்கள், இதனை கௌரவிக்கும் வகையில் அன்றைய பிரதமர் ஜவஹர்லால் நேருவும், மேற்கு வங்காளத்தின் முதலமைச்சருமான B.C.ராய் அவர்களும் இணைந்து 1954ம் வருடம் இதை துவக்கி வைத்தனர். இதை "ஹிமாலயன் மௌண்டைநீரிங் இன்ஸ்டிடியுட்" என்று அழைகின்றனர், இங்கு இமயமலை ஏறுவதற்கு பயிற்சி 
அளிக்கபடுகிறது. இங்குதான் டென்சிங்கின் உடலும் புதைக்கப்பட்டுள்ளது. sherpa tenzing and edmund hillary


டென்சிங் மற்றும் எட்மன்ட் ஹிலாரி எப்படி இந்த இமயமலை ஏறினர் என்பதை இந்த வீடியோ உங்களுக்கு உணர்த்தும்...


இதன் உள்ளேதான் பத்மஜா நாயுடு ஜூவும் உள்ளது. 1958ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இங்கு மலை பிரதேசங்களில் வாழும் உயிரினங்கள் பல பாதுகாக்கபடுகின்றன. பத்மஜா நாயுடு என்பவர் சுதந்திர போராட்ட தியாகியும், மேற்கு வங்கத்தின் கவர்னரும் (1956 ~ 1967), இந்தியாவின் கவிக்குயில் எனப்படும் சரோஜினி நாயுடுவின் மகளும் ஆவார்.

இந்த ஜூ பற்றி மேலும் தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்...பத்மஜா நாயுடு ஜூ, டார்ஜிலிங்.

இது தவிர பார்க்க வேண்டியது என்றால் டீ எஸ்டேட்டும்,  நேபால் எல்லையில் உள்ள மார்க்கெட், மாகாளி கோவிலும்தான். இதில் டீ எஸ்டேட் என்பது வழி எங்கும் இருக்கிறது, சில இடங்களில் அவர்கள் கூர்க்கா மற்றும் தேயிலை பறிப்பவர்கள் போல உடை அணிய கொடுக்கின்றனர். அதை வைத்து நீங்கள் புகைப்படம் எடுத்து கொள்ளலாம். கண்டிப்பாக டார்ஜிலிங் செல்லும்போது டீ வாங்கி வர மறக்காதீர்கள்....!!

முடிவாக நீங்கள் இந்த வீடியோவை பார்த்தால் மூன்று பாகங்களும் படித்து போல....விரைவில் சென்று வந்து பின்னூட்டம் இடுங்கள். நன்றி !


Labels : Darjeeling, war memorial, tea estate, denzing, mount everest, badmaja naidu zoo, darjeeling zoo

8 comments:

 1. போக தூண்டுகிறது...

  ReplyDelete
 2. போன வருடம் சென்றேன், குளிர் மைனசில் இருந்தது, அதிகாலை 4 மணிக்கு எழுப்பி டைகர் மலைக்கு அழைத்து சென்றார்கள் சூரிய உதயத்தை பார்க்க, வெறும் செருப்பு மட்டும் அணிந்து சென்றேன் குளிர் ஊசி குத்துவது போல குத்தி விட்டது. சிக்கிம் போக வில்லையா?

  ReplyDelete
  Replies
  1. உங்களையும் எழுப்பி விட்டாங்களா !! எனக்கும் அங்கே சென்று குளிர் நடுக்கி விட்டது......இல்லை, நான் சிக்கிம் செல்லவில்லை.
   தங்களது வருகைக்கும், கருத்திற்கும் நன்றி நண்பரே.

   Delete
 3. ரொம்ப நன்றி நண்பரே! அருமையான பதிவும் விளக்கப் படங்களும்.

  ReplyDelete
  Replies
  1. நன்றி ஆகாஷ் ! தங்களது தொடர் வருகைக்கும், கருத்திற்கும் நன்றிகள்.

   Delete
 4. அப்புறம் ரயில் சேவை ஜல்பைகுரி இலிருந்து இல்லை இப்போது குரோசெங்கிளிருந்துதான் இருக்கு அதுவும் ஒரு நாளைக்கு ஒருமுறைதான், IRCTC இந்த ரயிலுக்கு முன் பதிவு இல்லை.
  சென்னைளிருந்து வாரம் ஒரு முறை நியூ ஜல்பைகுரிக்கு ரயில் சேவை இருக்கு, அப்படி இல்லை என்றால் கொல்கொட்ட சென்று அங்கிருந்து நியூ ஜல்பைகுரி செல்லலாம், நான் சென்ற மாதம் பிப்ரவரி அதனால் ரூம்கள் Rs600 கிடைத்தது அங்கு சென்றால் மோமோ என்ற உன்வவு சாப்பிட்டு பாருங்கள் அருமையாக இருக்கும்
  டார்ஜிலிங் செல்வோர் அதோடு சேர்ந்து சிக்கிம் செல்லலாம் அங்கும் அருமையான சுற்றுலா தளங்கள் இருக்கு டார்ஜிலிங்கிலிருந்து கேங்க்டாக் செல்லும் வழி மிக அருமையாக இருக்கும் வலி நெடுக டீஸ்டா நதி ஓடி கொண்டிர்க்கும்

  ReplyDelete
  Replies
  1. மிக விரிவான தகவல்களுக்கு நன்றி நண்பரே ! இது கண்டிப்பாக டார்ஜிலிங் செல்பவர்களுக்கு உதவியாக இருக்கும்.

   Delete