Wednesday, December 12, 2012

நான் ரசித்த கலை - தஞ்சாவூர் ஓவியம்

 தஞ்சாவூர் என்றதும் நமக்கு நினைவுக்கு வருவது தலையாட்டி பொம்மையும், ஓவியமும்தான். இந்த தஞ்சை ஓவியத்தை எந்த வகை ஓவியத்துடனும் நீங்கள் ஒப்பிட முடியாத அளவுக்கு ஒரு தனித்தன்மையுடன் இருக்கும். 1600ம்  ஆண்டில் சோழர்கள் ஆட்சி காலத்தில் கலையும், ஓவியங்களும் மிகுந்த செல்வாக்குடன் இருந்தன, அப்போது உருவானதுதான் இந்த ஓவியம் என்கின்றனர்.



தஞ்சை ஓவியங்களை பற்றி மேலும் தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்...தஞ்சை ஓவியங்கள்


இந்த வகை ஓவியங்களை பார்க்கும்போது, அந்த ஓவியம் உயிர் பெற்று இருப்பது போல தோன்றும், அது அந்த கலையின் சிறப்பம்சம். இவர்கள் கடவுள்களையே இந்த ஓவியத்தில் அதிகம் பயன்படுத்துகிறார்கள். ஒரு துணியில் ஓவியத்தை வரைந்துகொண்டு, அதை மர பலகையில் இறுக்கமாக இணைத்து விடுகின்றனர். பின்னர், ஜெய்பூர் கற்களை கொண்டு அந்த ஓவியத்தை அலங்கரிகின்றனர், அதன் பின்னர் தங்க பாயில் கொண்டு கோட்டிங் கொடுகின்றனர். பின்னர், கலர் பூசி, மர சட்டம் அடித்து விற்கின்றனர். சொல்வதற்கு சுலபமாக இருந்தாலும் சில ஓவியங்கள் மாத கணக்கில் கூட ஆகும் !! இந்த வீடியோவில் நீங்கள் ஒருவர் முதலில் இருந்து கடைசிவரை செய்யும் தஞ்சை ஓவியத்தை காணலாம்.


நீங்கள் இதை செய்ய விரும்பினால், இந்த இணைப்பை சொடுக்கி மேலும் விரிவான வீடியோவை காணலாம்...தஞ்சாவூர் ஓவியம்.

5 comments:

  1. தனித்தன்மை வாய்ந்த தஞ்சாவூர் ஓவியம் பற்றிய பகிர்வுகள் அருமை .. பாராட்டுக்கள்..

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி ராஜராஜேஸ்வரி மேடம் ! தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் நன்றிகள் பல....

      Delete
  2. Replies
    1. நன்றி சஞ்சய் ! தங்களது கருத்துக்கள் எப்பொழுதும் இரண்டு முறை பதிவாகிறது, நீங்கள் இரு முறை செய்கிறீர்களா அல்லது ஏதேனும் தவறா ? எதுவாக இருந்தாலும் தங்களது வருகையும், கருத்தும் மகிழ்ச்சியை அளிக்கிறது, மீண்டும் வாருங்கள்....

      Delete