Monday, December 10, 2012

அறுசுவை - பெங்களுரு சாஹிப் சிந்த் சுல்தான் உணவகம்

இந்தியாவில் சொகுசு ட்ரெயின் உள்ளது என்பது உங்களுக்கு தெரியுமா ? பேலஸ் ஆன் வீல்ஸ், டெக்கான் ஒடிசி, தி கோல்டன் சாரியாட் என்பன சில, அவற்றில் ஒருவர்க்கு ஒரு நாள் செலவே இருபதாயிரம் ரூபாய் !! அவற்றில் எல்லாம் செல்ல இன்னும் நாள் இருக்கிறது.....ஆனால் அதை ஒட்டிய அனுபவம் ஒன்று இந்த உணவகத்தில் கிடைக்கிறது. ஒரு ராயல் சொகுசு புகைவண்டி, புகைவண்டி நிலையத்தில் நீங்கள் உணவருந்தினால் எப்படி இருக்கும் ?





சாஹிப் சிந்த் சுல்தான் - கோரமங்கலாவின் போரம் மால் உள்ளே, இரண்டாவது மாடியில் உள்ள இந்த உணவகம், ஒரு நாள் ராஜாவாக  உங்களை நினைக்க வைக்கிறது என்றால் மிகையாகாது ! உணவின் சுவை அருமையாக இருந்தாலும் நமது பர்ஸை பதம் பார்க்கிறது !! உள்ளே நுழைந்தவுடன் உங்களை பிரமிக்க வைப்பது அந்த உள் அமைப்பு.....ஒரு ரயில்வே ஸ்டேஷன் உள்ளே இருப்பது போன்ற தோற்றம், நடுநடுவே ஸ்பீக்கரில் ட்ரெயின் ஸ்டேஷனில் வருவது போன்று சப்தங்கள் என்று அபாரம். அவர்கள் உள்ளே ஒரு புகைவண்டியின் பெட்டியையே வடிவமைத்து இருக்கிறார்கள், அதுமட்டும் இல்லாமல் உணவு ஆர்டர் எடுப்பவர் நம் TTE தோற்றத்தில் இருக்கிறார் !!






இந்த பிரமிப்பு விலகும் முன்னரே அதிர்ச்சியையும் தருகிறார்கள்.....உள்ளே மெனு கார்டு கொடுத்தவுடன் முதலில் நீங்கள் முடிவெடுக்க வேண்டும்...இருக்கலாமா இல்லை போகலாமா என்று ! பெங்களுருவில் இப்படி ஒரு காஸ்ட்லி உணவகம் ஒன்றை நான் இன்றுதான் பார்த்தேன்.....
ஆனால் சுவை என்று வரும்போது எல்லா உணவகதினைவிட ஒரு படி மேலேதான். எனக்கு இங்கு மிகவும் பிடித்தது என்பது ஜமீன்தாரி ஆச்சரி ஆலூ மற்றும் ரேஷ்மி முர்க் டிக்கா கறி, என்ன அருமையான சுவை !







உள் அமைப்பும், சுவையும் உங்களை இங்கு கட்டிபோட்டு விடும் என்பதற்கு நான் உத்திரவாதம். இங்கு குவியும் கூட்டத்தை கண்டால், மக்களிடம் பணம் எவ்வளவு இருக்கிறது என்று கேள்வி எழுகிறது. ஒரு முறை நிச்சயம் ஒரு அனுபவத்திற்க்காக செல்லலாம்....ஆனால் மறுமுறை சென்றால் கண்டிப்பாக அடுத்த மாதம் உங்கள் பட்ஜெட் இடிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை !!




பஞ்ச் லைன் :
சுவை               -      அருமையான சுவையான உணவு.

அமைப்பு         -       உள் அமைப்பு மிகவும் அருமை, உங்களை ஒரு ராஜா / ராணி போன்று உணர வைப்பார்கள். மிகவும் சிறிய இடம் ஆதலால் ரிசர்வ் செய்துவிட்டு போகவும். மால் உள்ளே பார்கிங் உள்ளது.

பணம்              -      ரொம்பவே ஜாஸ்தி !! மூவருக்கு 4700 ரூபாய் ஆனது, இத்தனைக்கும் நாங்கள் மிகவும் கம்மியாக ஆர்டர் செய்தோம் !

சர்வீஸ்           -       சூப்பர் சர்வீஸ் ! எந்த குறையும் இல்லை !

அட்ரஸ் :
2nd Floor, Forum Mall, Hosur Road, Koramangala, Bangalore, Karnataka, 560095  India
080 2206 7878



மெனு கார்டு :








2 comments:

  1. wow! நல்லதொரு பகிர்வு.தொடருங்கள்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி ஆகாஷ் ! ஒரு முறை நீங்களும் சென்று வந்தால் அந்த யாபகமும், சுவையும் என்றும் நினைவில் இருக்கும்.

      Delete