Saturday, December 15, 2012

நான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் - இரோம் ஷர்மிளாவின் உண்ணாவிரதம்

இரோம் ஷர்மிளா....இந்த பெயரை கேள்வி பட்டு இருக்கிறீர்களா ? பொதுவாய் இவர் பெயர் செய்திகளில் அதுவும் தென்னகத்து தொலைகாட்சிகளில் அதிகம் காண்பிக்கபடாதது. கடந்த பத்து வருடங்களாக அவர் உண்ணாவிரதமிருகிறார்....இவரை "அயன் லேடி ஆப் மணிப்பூர்" என்று செல்லமாக அழைப்பார்கள். எதற்க்காக இவர் இப்படி உண்ணாவிரதமிருகிறார் ? என்ன வேண்டும் இவருக்கு ? ஏன் இந்த அரசாங்கம் இவரின் குரலுக்கு செவி சாய்க்க மறுக்கிறது ?




அப்படி என்ன நடந்தது மணிப்பூரில் ? நவம்பர் மாதம், 2000 வருடத்தில் இம்பால் வெளி என்னும் ஒரு கிராமத்தில், நமது ராணுவத்தால் சிலர் சுடப்பட்டு இறந்தனர், இதை கண்டித்து இரோம் ஷர்மிளா உண்ணாவிரதத்தை ஆரம்பித்தார், இன்றும் அது தொடர்கிறது. அவரது ஒரே கோரிக்கை.... Armed Forces (Special Powers) Act, 1958 (AFSPA) எனப்படும் இந்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்பதே. இந்த சட்டதினால்தான் இப்படிப்பட்ட கொலைகள் நடக்கின்றன என்பது இவரது வாதம்.


தண்ணீர் கூட நாவில் படாத இவரை, அரசாங்கம் ஒரு ஆஸ்பத்திரியில் சிறை வைத்து மூக்கின் மூலமாக உணவை திரவம் மூலமாக கொடுப்பதால் இவர் இத்தனை வருடமாக உயிர் வாழ்கிறார். இவரின் கோரிக்கைகள் சீக்கிரமாக நிறைவேற்ற பட வேண்டும் என்பதே எனது பிராத்தனை....நீங்கள் நீடூழி வாழ வேண்டும் இரோம் ஷர்மிளா !!

2 comments:

  1. Replies
    1. நன்றி பாலா ! தங்களது வருகைக்கும், கருத்திற்கும் நன்றிகள் பல !

      Delete