Monday, December 17, 2012

அறுசுவை - பெங்களுரு பஞ்ச்-ஆப் உணவகம்

பொதுவாக பஞ்சாபி உணவுகள் என்றால் ரோட்டி, கறி, டால் என்றும் அதில்
தாபா என்றும்தான் இருக்கும், இப்படி நான் எண்ணிக்கொண்டு இருக்கும்
போது பளிச்சென்று மேல்நாட்டு உள் அமைப்புகள், சிறந்த சர்வீஸ் என்று
இந்த பஞ்சாபி உணவகம் கண்ணில்பட்டது. தாபா போன்ற இடங்களில் நல்ல சுவையான உணவுகள் இருந்தாலும், அங்கு இருக்கும் உள் அலங்காரங்கள் ஒரு லாரி நிறுத்தகம் அருகே இருக்கும் உணவகம் போலவே அமைக்கப்பட்டதாக இருக்கும், சற்று அமைதி குறைவாகவும் இருக்கும், இதனால் குடும்பத்துடன் வருபவர்கள் ஒரு நல்ல பஞ்சாபி உணவை அமைதியாக உண்ண முடியாது, அதில்தான் இந்த உணவகம் வித்தியாசபடுகிறது.


பெங்களுருவின் ஓல்ட் மெட்ராஸ் ரோட்டில், இப்போது புதிதாக வந்திருக்கும் கோபாலன் சிக்நேச்சர் மால் எதிரில் உள்ள RMZ Infinity உள்ளே அமைந்துள்ளது இந்த பஞ்ச்-ஆப் உணவகம். உள்ளே நன்கு அலங்கரிக்கப்பட்டு, மிகுந்த அமைதியுடன் கூடிய இடம். இவர்களது சர்வீஸ் பற்றி இங்கு சொல்லியே ஆக வேண்டும்.....எனது மகன் இங்கும் அங்கும் ஓடி கொண்டு, எல்லாவற்றையும் இழுத்துக்கொண்டு இருந்தான், இதனால் எங்கள் இருவருக்கும் பேசிக்கொண்டு சாப்பிட முடியாமல் இருந்தது, இதை கவனித்த அவர்கள், உடனே அங்கு கட்டியிருந்த பலூன் ஒன்றை அவனிடம் கொடுத்து விளையாட ஆரம்பித்தனர், இதை நாங்கள் சாப்பிட்டு முடிக்கும் வரை செய்தனர்....இதை நான் எந்த உணவகத்திலும் இதுவரை பார்த்ததில்லை. சிறு குழந்தைகளை சமாளிப்பது பெற்றோரின் கடமை என்று மட்டுமே எல்லோரும் எண்ணுவார்கள், ஆனால் இந்த உணவகத்தில் மட்டுமே நாம் நன்றாக சாப்பிட அதை பார்த்து பார்த்து செய்கின்றனர்.


நாங்கள் ஆர்டர் செய்ததில் இந்த தல்லே முர்க் என்பது இந்த வறுத்த சிக்கனில் தந்தூரி மசாலா தடவியது, தந்தூரி முஷ்ரூம் என்பது நன்கு மசாலா தடவி தந்தூரி அடுப்பில் வைத்து எடுத்த முஷ்ரூம், இவை இரண்டும் நாங்கள் இதுவரை சாப்பிட்ட தந்தூரி வகைகளில் அருமையானது எனலாம். அது போல இந்த காஸ்டா ரோட்டி  மற்றும் மக்கி டி ரோட்டி என்பதை ஆர்டர் செய்து விட வேண்டாம்....அது ஒரு வகை கோதுமையில் செய்வதால் மொற மொரவென்று இருக்கிறது !




நல்ல காரமான பஞ்சாபி உணவை உண்டுவிட்டு முடிவில் நல்ல குலாப் ஜாமூன் ஒன்றை வாயில் வைக்கும்போது அட என்று  தோன்றுகிறது ! ஒரு வெள்ளியன்று மாலை இங்கு சென்றோம்....ஒரு நல்ல இரவு உணவு உண்டுவிட்டோம் என்ற திருப்தியுடன் திரும்பினோம் எனலாம். உணவும், அவர்களின் அருமையான சர்வீசும் அருமை, அதுவே இங்கு மீண்டும் செல்ல தூண்டுகிறது.



பஞ்ச் லைன் :
சுவை               -      நன்றாக இருக்கிறது, இன்னும் சிறிது வெரைட்டி இருக்கலாமோ என்று தோன்றுகிறது.
அமைப்பு         -       சரியான இடத்தில் அமைந்திருகிறது.  நல்ல பார்கிங் வசதி, அமைதியான உள் அமைப்பு.
பணம்              -      சற்று காஸ்ட்லி, ஆனால் சுவைக்கும் அவர்களது
சர்வீசுக்கும் கொடுக்கலாம் ! இருவர் நன்கு சாப்பிட்டால் 1500 வரை வரும்.

சர்வீஸ்           -       ரொம்பவே நல்ல சூப்பர் சர்வீஸ் !

அட்ரஸ் :
RMZ Infinity,
கோபாலன் சிக்நேச்சர் மால் எதிரில்,
ஓல்ட் மெட்ராஸ் ரோடு

Punj-Aab1
3, Old Madras Road
Benniaganahalli
Bangalore - 560016 , Karnataka (India)
Call : 080 40930914 / 15
+91 9901891697
email : reservation@punjaab.co.in


மெனு கார்டு :

2 comments:

  1. ம்ம்ம்...பதிவு சுவையை கூட்டுகிறது....அந்த அளவுக்கு வசதி இல்லீங்கோ நமக்கு....

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஜீவா ? இங்கு அம்மணிகள் நிறைய பேர் இருக்கிறார்கள், நீங்கள் வந்தால் உங்களது உணவகம் பக்கம் இன்னும் ஜிலுஜிலுக்கும் !! அப்புறம் என்ன சொன்னீங்க...உங்களுக்கு வசதியில்லையா, சரி நம்பிட்டேன் சார் !

      Delete