Friday, December 28, 2012

உலக திருவிழா - ஹர்பின் ஐஸ் திருவிழா, சீனா

 இந்த பகுதியில் உலகமெங்கும் கொண்டாடப்படும் பல விழாக்களை பற்றி தெரிந்து கொள்ளலாம், அதன் வரிசையில் இந்த முறை "ஹர்பின் ஐஸ் திருவிழா". ஹர்பின் என்பது சீனாவின் தென்பகுதியில் இருக்கும் ஒரு நாடு,  சைபீரியா நாட்டில் டிசம்பர் - ஜனவரி மாதத்தில் குளிரில் இருந்து வரும் காற்றால் ஹர்பின் பகுதியில் இந்த மாதங்களில் சுமார் உறை நிலையில் இருந்து 16 டிகிரி வரை குளிர் நிலவும், எங்கு பார்த்தாலும் வெறும் ஐஸ்தான். இதை ஒரு திருவிழாவாக 1963இல் இருந்து கொண்டாடுகின்றனர், சில காலங்கள் தடைபட்டாலும் 1985இல் இருந்து இன்று வரை வருடம்தோறும் ஜனவரி 5 முதல் ஒரு மாதத்திற்கு இங்கு ஐஸ் சிற்பங்கள் செய்யப்பட்டு கண்கவர் விளக்குகளால் அலங்கரிக்கப்படும்.



ஐஸ் சிற்பங்கள் செய்வது அதுவும் உறைபனியின் போது என்பது சுலபமானது  இல்லை. வெகு நேர்த்தியுடன் செய்யப்படும் இந்த சிற்பங்கள், கலை நேர்த்தியுடன், லைட் கொண்டு உயிரூட்டப்படும். இந்த ஆண்டு 23-டிசம்பர் முதல் இது தொடங்கிஉள்ளது.




ஒவ்வொரு ஆண்டும் ஒரு தீம் கொண்டு இந்த ஐஸ் சிற்பங்கள் செதுக்கபடுகின்றன. ஆகையால், ஒவ்வொரு வருடமும் நீங்கள் இங்கு செல்லலாம் ! நம்ம "கோ" படத்தில் இது வரும், இந்த வீடியோ பார்த்தால் 
உங்களுக்கு புரியும்.   சரி, உங்களுக்காக சில படங்கள் இங்கே...







2 comments:

  1. சிறந்த தகவல். சீனா எங்கேயோ சென்று கொண்டிருக்கிறது. மேலை நாடுகளுக்கு இணையாக இதனை ஒரு சுற்றுலா வாய்ப்பாக்கியது சிறப்பு மற்றும் அவர்களது திறன்.

    http://www.concurrentmusingsofahumanbeing.blogspot.com/

    ReplyDelete
    Replies
    1. உண்மை நண்பரே.... நான் சீனா சென்றிருந்தபோது அங்கு சுற்றுலாவிற்கும், பொழுதுபோக்கிற்கும் அவர்கள் கொடுத்த முக்கியத்துவத்தை பார்த்தபோது, இங்கு நமது நாட்டில் சுற்றுலா தளங்களில் தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் என்று செயல்படும் கடைகளை பார்க்கும் நிலை........ தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி !

      Delete