Tuesday, December 4, 2012

கொஞ்சம் அவசரமா போகணும்...!!

நீங்கள் என்றாவது வாழ்கையை வெறுத்தது உண்டா ? ஐயோ, என்ன செய்ய
போகிறேன் என்று தவித்தது உண்டா ? கோடி ரூபா வைச்சிருக்கேன் ஆனா
இந்த சமயத்தில் அது உதவலையே என்று தவித்தது உண்டா ? ஒரு பொழுது உண்டு, அதில் மேலே சொன்ன எல்லாம் உங்களுக்கு தோன்றும்.... அதுதான் இந்த சிறுநீர் அல்லது மலம் கழிக்க ஒரு பொதுகழிப்பிடம் தேடி நீங்கள் வெளியில் செல்லும்போது நிகழ்வது. நினைத்து பாருங்கள், நாம் ஒவ்வொருவரும் இதை எந்த சூழ்நிலையிலாவது எதிர் கொள்கிறோம்.
சமீபத்தில் மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் அவர்கள் பொதுகழிப்பிடம் என்பது கோவிலை விட முக்கிய தேவை என்று சொன்னபோது இந்தியாவே கொந்தளித்தது, ஆளாளுக்கு அவரை திட்டி தீர்த்தனர். ஒவ்வொரு இந்தியனும் இந்த பொதுகழிப்பிட பிரச்சனையை எதிர் கொண்டு வருகின்றனர், அதுவும் வெகு காலமாக.....இருந்தும் இன்றளவிலும் இது இருந்து கொண்டுதான் இருக்கிறது. இந்த நாட்டின் ஜனாதிபதியோ அல்லது கூலி தொழிலாளியோ, இந்த பிரச்னையை எதிர் நோக்காமல் இருந்ததில்ல.... இது ஒரு பிரச்சனையாக உங்களுக்கு தோன்றாததற்கு காரணம் என்பது படிக்கும் நீங்கள் ஒரு ஆணாக இருக்கலாம், அல்லது நீங்கள் அந்த அவஸ்தையை இதுவரை அனுபவித்தது இல்லை எனலாம்.நல்லா டிரஸ் பண்ணிக்கிட்டு நீங்க எங்கே போனாலும் எந்த மனுஷனுக்கும் இந்த அவஸ்தை இருந்துதான் இருக்கணும்.....சமீபத்தில் வெளியில் மழை அடிச்சி பேயுது, வீட்டுல ஒன்னுக்கு போய்ட்டுதான் வண்டிய எடுத்தேன், ஆனாலும் பெங்களுருவில் இந்திரா நகரில் ஷாப்பிங் போகலாமின்னு போயிட்டு ஒரு மணி நேரத்தில் எல்லோருக்கும் ஒன்னுக்கு போக வேண்டும் என்று அவஸ்தை, எங்க தேடினாலும் ஒரு பொது கழிப்பிடம் இல்லை, முடிவில் அருகில் இருந்த ஹோட்டலுக்கு போய் நாலு காபி, கொஞ்சம் காரம் அப்படின்னு ஆர்டர் பண்ணி, ஒன்னுக்கு போன செலவு மட்டும் 120 ரூபாய் !! ரொம்ப காஸ்ட்லி மச்சி !பொதுவாக நெடும் தூர பயணங்களில் அதுவும் சுகர் உள்ளவர்களுக்கு இருக்கும் கஷ்டம் மிகவும் ஜாஸ்தி. எனது அம்மாவுக்கு சுகர் இருக்கிறது, ஒரு முறை ட்ரெயினில் டிக்கெட் கிடைக்காமல் பஸ் ஏற்றி விட்டேன், அவருக்கு வழியில் இயற்க்கை உபாதைக்காக டிரைவரிடம் கெஞ்சினாலும் முடியாது என்றதால், கண்ணில் தண்ணீருடன் காத்திருந்து காத்திருந்து நொந்து போய் இருக்கிறார். மழை காலங்களில் இந்த அவஸ்தை இன்னும் அதிகம்.


கோவிலில் கழிப்பிடம் இல்லாதது, ஹோட்டல் சென்றால் எந்த கழிப்பிடமும் சுத்தமாக இல்லாதது, கழிப்பிடம் இருந்தும் கட்டண கொள்ளை அடிப்பது, இருந்தும் எங்கே இருக்கிறது என்று தெரியாத அவஸ்தை என்று இங்கு ஏகப்பட்ட அவஸ்தைகள். ஆனாலும் பல பல ஆண்டுகளாக நாம் பொறுமையாக இந்த அவஸ்தைகளை தாண்டி வருகிறோமே தவிர அதற்க்கு தீர்வு என்று இதுவரை கண்டதில்லை.

சரி நம் நாடுதான் இப்படி என்றால், மற்ற நாடுகளில் எல்லாம் எப்படி இருக்கிறது இந்த வசதி ? நான் அமெரிக்கா சென்று இருந்தபோது ஒரு நெடும்தூர பயணம் மேற்கொள்ள நேர்ந்தது, என்னுடன் கூட வந்தவர் திரு. ராஜ்குமார் என்னும் நண்பர் அங்கேயே செட்டில் ஆகி விட்டவர், வழியில் சிறுநீர் கழிக்க வேண்டும் என்று கேட்டபோது அவர் நெடுஞ்சாலையில் இருந்த ஏதாவது ஒரு KFC, McDonalds போன்ற ஒன்றை தேடி கொண்டிருந்தார், நானோ அட ஓரமா நிறுந்துங்க போயிடறேன், இதுக்கெல்லாம் எதுக்கு KFC, McDonalds என்று கேட்க்க, அவர் என்னை மேலும் கீழும் பார்த்தார். நாங்கள் முடிவில் ஒரு KFC பார்த்து நிறுத்தினோம், கழிப்பிடம் அவ்வளவு சுத்தம், அங்கே சென்று ஒன்றும் வாங்கவில்லை ஆனாலும் அவர்கள் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. நாங்கள் எங்கள் வேலையை முடித்துக்கொண்டு திரும்பினோம். இதுவே நமது ஊர் என்றால் எப்படி இருக்கும், என்ன பேசுவார்கள், எவ்வளவு சுத்தமாக இருக்கும் என்று யோசித்து பாருங்கள் ! அங்கு எப்படிப்பட்ட வழிகளில் எல்லாம் புது மாதிரியாக யோசிக்கிறார்கள் என்பது இந்த படங்களை பார்த்தால் தெரியும் !இனிமேல் எங்கு சென்றாலும் டயாபர் (Diaper - குழந்தைகளுக்கு போடுவது) போட்டு போக வேண்டும் போல, யாராவது இதை ட்ரை செய்து இருந்தால் பின்னூட்டம் இடவும் !

6 comments:

 1. இந்தியப்பயணத்தில் நான் ரொம்பவே பயப்படுவது இந்த ரெஸ்ட்ரூம் பிரச்சனைதான்.

  இதுக்குப் பயந்துக்கிட்டு தண்ணீர் கூட நிறையக் குடிக்கமாட்டேன். பதிவுகளில் இந்தப்பிரச்சனைபற்றிப் புலம்பித் தள்ளியாச்சு.

  நம்மமக்களுக்கு வாழ்க்கையில் எது அத்தியாவசத்தேவைன்னு இன்னும் புரியலை பாருங்க.

  ஆளாளுக்கு செல்ஃபோன். அதுக்கு இருக்கும் முக்கியம் கழிவறைக்கு இல்லையே:(

  என்னமோ போங்க.....

  ReplyDelete
  Replies
  1. சரியாக சொன்னீர்கள் துளசி மேடம் ! நன்கு வளர்ந்த நகரங்களில் கூட ஒரு முட்டு சந்து தெரிந்தால் அங்கு பெய்யும் மனிதர்கள், இந்த அடிப்படை உரிமைக்கு குரல் கொடுக்க மாட்டேன் என்கிறார்கள் என்பது வருத்தமான விஷயம்.

   Delete
 2. ஒரு மறைவும் தண்ணீரும் போகிற வழியில் இருந்தால்
  இயற்கை உந்துதலை தீர்த்துக் கொள்ளலாம் என்கிற எண்ணமும்
  விளக்குமாறும் கழிவறையும்
  சுத்தமாக இருக்கவேண்டியதில்லை என்கிற
  மனோபாவமும் எப்படியோ நம்மவர்களிடம்
  ஊறிப் போய் உள்ளது
  தற்போதைய சூழலில் அவசியமான பதிவு
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி ரமணி சார் ! ஆம், நமது சகிப்புத்தன்மை மிகவும் ஜாஸ்தி ஆகி இருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். என்று நமது அடிப்படை உரிமைகள் நிறைவேற்ற படுமோ !

   Delete
 3. I once traveled to Kodaikanal from Madurai, on the way I felt like peeting and get down at Dindugal, but find it very difficult to pee at a dirty gov^t toilet. So I decided to do it on the way to Kodaikanal, but the driver didn't stop the vehicle in between afraid of hair pin bend accidents. I had a hell lot of time during that travel and one of the worst day in life, while my friends had a great time enjoying the scenery.

  ReplyDelete
  Replies
  1. நன்றி விக்ரம் ! எல்லோருக்கும் இந்த அனுபவம் உண்டு...... இன்று வரை இதற்க்கு நல்ல ஒரு தீர்வு என்பது கிடையாது என்பதுதான் வேதனை. நீங்கள் அடுத்த முறையாவாது கொடைக்கானல் இயற்கை காட்சிகளை நன்கு ரசிக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன் ! தங்களது வருகைக்கும், கருத்திற்கும் நன்றி !

   Delete