Monday, December 3, 2012

அறுசுவை - பெங்களுரு Mr. இட்லி உணவகம்

நீங்கள் எந்த வகை உணவு உண்டாலும் நமது இட்லிக்கு ஈடாகாது ! சூடாக மதுரையில் இரவினில் கிடைக்கும் இட்லிக்கு எல்லோரும் சொக்கி போவார்கள், அதுவும் ஒரு கடை இட்லியின் பெயர் கொண்டு பெங்களுருவில் இருந்தால் அது நம்மை சுண்டி இழுக்கதானே செய்யும் ! ஒரு நாள் நானும் எனது குடும்பத்தினரும் வெளியில் உண்ண சென்றபோது இந்த  உணவகத்தை பார்த்தோம்.
பார்த்தவுடனே மனதினுள் ஒரு உற்சாகம், அதுவும் அவர்களது மெனுவில் பல வகை இட்லிகள் !!



இது ஒரு சங்கிலி தொடர் உணவகம்....ஆகையால் உங்களது அருகில் கூட ஒரு கடை இருக்கலாம். முதலில் உள்ளே நுழைந்தவுடன் உங்களை கவர்வது எங்கும் இருக்கும் சிகப்பு நிறமும், குளிர்ச்சியும் ! பின்னர் உங்களது மெனு கார்டில் உள்ள இட்லி வகைகளை பார்த்தால் எல்லாவற்றையும் சாப்பிட தோன்றுகிறது ! தோசை வகைகளில் கூட அசத்துகிறார்கள் ! சுத்தம், சுவை என்பது இங்கு எளிதில் காண முடிகிறது.



இந்த உணவகத்தை பற்றி மேலும் தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்....Mr. இட்லி உணவகம்



நாங்கள் சாம்பார் இட்லி, காஞ்சிபுரம் தோசை, இட்லி மஞ்சூரியன் என்று ஆர்டர் செய்தோம். சாம்பார் இட்லியில் லேசாய் நெய் விட்டு, நல்ல காரமான தேங்காய் சட்னி கொடுக்கிறார்கள், வாயில் வைத்தவுடன் இட்லியின் மென்மையும், சாம்பாரின் சுவையும் அசத்துகிறது. குழந்தைகளுக்காக ஜாம் தோசையும் கிடைக்கிறது, எனது மகனுக்கு ஒன்று வாங்கிவிட்டு நாங்கள் எல்லோரும் சாபிட்டோம்....அவன் முறைத்து கொண்டே இருந்தான் ! இட்லி மஞ்சூரியன் என்னை அவ்வளவாக கவரவில்லை என்றே சொல்ல வேண்டும்....நல்ல சாம்பாரில் தொட்டு தின்றால்தான் திருப்தி, ஆனால் இந்த மஞ்சுரியனில் சாஸ் விட்டு இருந்ததால் ஒரு வித இனிப்பு இருந்தது.




பஞ்ச் லைன் :
சுவை               -      வித விதமான இட்லிகள் ! அருமையான சுவை !

அமைப்பு         -       சிறிய இடம், குளிர்ச்சியான உள் அமைப்பு !!

பணம்              -      விலையை பார்த்தால் உங்களுக்கு அதிகம் என்றுதான் தோன்றும்....ஆனால் சுவையையும், அனுபவத்தையும் பார்த்தால் கொடுக்கலாம் எனலாம் !

சர்வீஸ்           -       பொதுவாக செல்ப் சர்வீஸ் ! சில இடங்களில்  நம்மை உட்கார சொல்லி செர்வ் செய்கின்றனர்.

அட்ரஸ் :
இந்த உணவகம் எங்கெங்கு எல்லாம் உள்ளது என்பதை இங்கே சொடுக்கி பார்க்கவும்...Mr. இட்லி உணவகம்.

Labels  : mr.Idli, bangalore idli, idli, kadalpayanangal, arusuvai, bengaluru best idli place

6 comments:

  1. ம்ம்ம்...இட்லிக்கு மவுசு.....

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஜீவா ! கோவை இப்போ எப்படி இருக்கு !

      Delete
  2. If you are a real lover of idly, then try bangalore chamrajpet 'Bramin's cafe' idly & vada. They will serve this idly with home made butter and thengai chatni. Just try and tell me. :)

    ReplyDelete
    Replies
    1. நன்றி தக்குடு ! ஆம் அதுவும் எனது லிஸ்டில் இருக்கிறது, இதை பற்றி நானும் நிறைய கேள்விபட்டிருக்கிறேன். தகவலுக்கு நன்றி !

      Delete