Friday, December 21, 2012

நான் ரசித்த குறும்படம் - டிஸ்னி UP

ஒரு வாழ்கையின் பயணத்தை இதுவரை இவ்வளவு சுருக்கமாக, இனிமையாக, மனதை வருடும் வண்ணம் எவரும் சொல்லி இருக்கிறார்களா என்று தெரியவில்லை.....இது டிஸ்னி பிச்சர்ஸ்ன் அப் என்னும் ஒரு முழு நீள கார்ட்டூன் படத்தின் ஒரு துண்டு பகுதிதான், ஆனால் இதில் நம் அனைவரது வாழ்கையும் பிரதிபளிபதால் இதை உங்களுடன் பகிர்கிறேன்.

ஒரு தம்பதி திருமணம் செய்து கொண்டு, அவர்களது கனவான ஒரு அருவிக்கு செல்ல வேண்டும் என்று பணம் சேர்கின்றனர், ஆனால் வெவ்வேறு காரணங்களால் அந்த பணம் செலவழிகிறது....முடிவில் என்னவானது என்பதுதான் கதை. இந்த மிக சிறிய குறும்படம் போன்ற ஒன்றில் அவ்வளவு ஆழம் இருக்கும்.....நிச்சயம் நீங்களும் ரசிப்பீர்கள்.

4 comments:

  1. இது படத்தில் வரும் முதல் 5 நிமிடங்களே. உண்மையில் அந்த நாயகன் எவ்வாறு அந்த இடத்திற்கு போகிறார் என்பதே மீதிப் படம், அதுவும் ஒரு சிறுவனின் துணையோடு. அருமையான, எனக்கு மிகவும் பிடித்த திரைப்படம். நினைவூட்டியதற்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. நன்றி அரவிந்த்.... ஆம் இது அந்த படத்தின் ஒரு பகுதிதான், ஆனாலும் மிக ஆழமாக நெஞ்சை தொட்டது. ஆகவே பகிர்ந்தேன், நீங்கள் படித்ததில் மகிழ்ந்தேன்.

      Delete
  2. மிகவும் ரசித்தேன் நண்பரே! பகிர்வுக்கு மிக்க நன்றி..

    உங்களுக்கு நேரம் கிடைக்கும்போது எனது பக்கமும் வந்து போங்க.
    நன்றி.

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஆகாஷ் ! உங்களது பெயரை நான் கிளிக் செய்து என்ன வலைபூ எழுதுகிறீர்கள் என்று படிக்கவும், உங்களை தொடரவும் எனக்கு ஆசைதான், ஆனால் உங்களது பெயரை கிளிக் செய்யும்போது வெற்று பக்கம்தான் வருகிறது. தங்களது வலைப்பூவின் முகவரியை தரவும், உடனடியாக தொடர்கிறேன்.

      Delete